Tamil Christian Website

Tamil Christian Website

கட்டப்பட்ட கழுதை

 சகோ. எட்வின் (சோஹார்)

அனேக நாட்களாக ஒரு கழுதை தன் குட்டியோடு கட்டப்பட்ட நிலையிலே தன்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்தது, ஏன் இதற்கு இந்த நிலைமை வந்தது பாருங்கள் இந்த கழுதையின் தேவைகள் சரியாக சந்திக்கப்பட்டுவந்தாலும் [ அதாவது உணவு மற்றும் இதர காரியங்களை இங்கு தேவைகள் என குறிப்பிடுகின்றேன் ] அதற்கு ஒரு குறைவு காணப்பட்டது, அது என்ன்வென்றால் இந்த கழுதைக்கு தன் இஷ்டப்படி எங்கும் போகமுடியாது தன்னுடைய நண்பர்களோடு பேச அனுமதியில்லை, அதுமட்டுமல்லாமல் தன்னுடைய குட்டியோடு நேரம் செலவிட அனுமதியில்லை.

இதற்கு காரணம் என்னவென்றால் இந்த கழுதை தன்னை ஒரு மனுஷனுக்கு விற்று போட்டது. ஏன் இந்த கழுதை தன்னை மனுஷனுக்கு விற்றுப்போட வேண்டும். இந்த உலகத்தில் தன்னுடைய குட்டியோடு சந்தோஷமாக எல்லாவற்றையும் அனுபவித்த இந்த கழுதைக்கு , இந்த மனுஷன் பொய்யான அதாவது உலக அன்பைக் காண்பித்தான். அதாவது நீ கஷ்டப்பட்டு வேலை செய்து சாப்பிட வேண்டாம், வீடு இல்லாமல் இங்கும் அங்கும் அலைய வேண்டாம், நீ என்னோடு வந்தால் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் உனக்கு மாற்றி கொடுப்பேன். அதுமட்டுமல்லாமல் நீங்கள் வேலைசெய்யாமலேயே சாப்பிடலாம் என்றெல்லாம் ஆசையைக் காண்பித்தான், இந்தக் கழுதையும் தன்னுடைய கண்களை இந்த இச்சை வார்த்தையின் மேல் வைத்தது. ஆகவே இந்த மனுஷனுடைய கண்ணியில் சிக்கி, இப்படியாக அடிமை வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது

எனக்கு அருமையான நண்பர்களே

இன்று கிறிஸ்தவர்களுக்கும் பிசாசானவன் பலவிதங்களில் கண்ணிகளை வைப்பதுண்டு, எப்படியென்றால் எதற்கு ஜெபிக்க வேண்டும், ஏன் ஆலயம் செல்ல வேண்டும். இந்த உலகம் முழுவதும் உங்களுக்கு அனுபவிக்கதான் தேவன் வைத்திருக்கிறர் என்றெல்லாம் பலவிதமான கேள்விகளை எழுப்புவதுண்டு, இதற்கு மயங்கி இன்று அனேக கிறிஸ்தவர்கள் சாத்தானுக்கு அடிமையாக வாழ்வதுண்டு, தயவு செய்து ஒரு நாள் வாழ்வை இன்பம் என்று எண்ணாதிருங்கள் அதாவது இந்த உலக வாழ்க்கை தான் நமக்கு சந்தோஷம் என்று எண்ணாதிருங்கள். ஒரு காரியத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள், வேதம் சொல்லுகிறது நம்முடைய சந்தோஷம் இந்த நிலையில்லாத உலகத்தில் அல்ல மாறாக நம்முடைய நிலையான சந்தோஷம் பரலோகத்தில் இருக்கிற இயேசு கிறிஸ்துவிடம் மாத்திரமே என்பதை மறந்து விடாதீர்கள்.

       நாம் யாருக்கு பிள்ளைகளாய் இருக்கிறோம்?

எல்லா மதங்களின் தெய்வமும் தம்முடைய ஜனங்களை அடிமை என்று அழைக்கிறது, ஆனால் கர்த்தராகிய இயேசு மாத்திரமே தம்மை தகப்பன் நம்மை அவர்களுடைய பிள்ளைகள் என்றும் அழைக்கிறார்.

பிள்ளை என்கிற பட்டம் வேண்டுமா? அல்லது அடிமை வேண்டுமா? தெரிந்து கொள்ளுங்கள். [ யோவான் 1:12, எசேக்கியேல் 36:28, 11 கொரி 6:16 ]


Posted on: 23/02/2015

பழைய மனுஷரிடமிருந்து கடிதம்

சகோ. எட்வின் (சோஹார்)

பழைய மனிதன் பேசலானான், நான் தான் உன்னுடைய பழைய உருவம், எத்தனை அழகாக நீ இந்த உலகத்தில் இருந்தார் அதுமட்டுமல்லாமல் விதவிதமான நண்பர்கள் எப்பொழுதும் உன்னை சூழ்ந்து கொண்டே இருப்பார்களே. எத்தனை விதமான சந்தோஷங்கள் உனக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்ததே. அதுமட்டுமா எத்தனை நிகழ்ச்சிகளில் நீ சந்தோஷமாக மது அருந்தி விட்டு நடனம் பண்ணிருக்கிறாய். அந்த நடனத்தைப் பார்த்த எத்தனை பேர் உன்னை புகழ்ந்து பேசினார்கள். இப்பொழுதோ நீ தனிமையில் உட்கார்ந்து கொண்டு எதாவது எழுதுவதும், வேதம் வாசிப்பதும் அதுமட்டுமல்லாமல் ஜெபம் செய்கிறதுமாய் இருக்கிறாயா? இது தேவைதானா இதனால் உனக்கு என்ன சந்தோஷம் இந்த உலகத்தில் கிடைத்தது.

உன்னோடு கூட இருந்தவர்களைப் பார், எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். எத்தனை விதமான படங்களை நாம் கண்டு களித்தோம், அத்துடன் விட்டோமா. மேலும் பலவிதமான பொழுதுபோக்குகளை நாம் தேடிச் சென்றது ஞாபம் இல்லையா நண்பா? கொஞ்சம் வெளியே வா. இந்த உலகத்தில் உள்ள எல்லா காரியங்களும் நாம் அனுபவிக்கிறதற்கே படைக்கப்பட்டுள்ளது என்பதை ஏன் மறந்து போகிறாய்? இப்பொழுது நீ இவைகளை அனுபவிக்க தவறுவாய் ஆனால் பின்பு வயதான பிறகு இதைக் குறித்து மிகவும் கவலைப் பட வேண்டிய சூழ்நிலை வரும் என்பதை உனக்கு மறுபடியும் ஞாபகப் படுத்துகிறேன். நண்பா இவ்வளவு நாட்கள் நீ பேதையாய் இருந்தது போதும், இப்பொழுது ஒன்றும் குறைந்து விடவில்லை, எனக்கு சிறிது இடம் கொடு நான் உன்னோடு வந்து சேர்ந்துக் கொள்கிறேன். உன்னுடைய பதிலுக்காக காத்திருக்கும் உன் பழைய நண்பன்.

அடுத்ததாக, புதிய மனிதன் கொடுக்கும் பதில் கடிதம்

நண்பா நான் உன்னோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை உண்டு அது இப்பொழுது என்னால் முடியாது ஏனென்றால், என்னுடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய விலையுயர்ந்த இரத்தத்தினால் என் பழைய மனிதனை வாங்கி சிலுவையில் ஆணியடித்து விட்டார். ஆகவே நான் நரகம் செல்ல தாயாராக இல்லை என்னை விட்டு விட்டு. தேவன் அறியாமையினால் செய்த காரியத்தை காணாமல் போல் இருந்தார். இப்பொழுதோ நான் இயேசுவை அறிந்து விட்டேன். இந்த பழைய வாழ்க்கையை என்னால் தொடர முடியாது. அப்.பவுல் சொன்னது போல்,

நான் இயேசுவோடு கூட சிலுவையில் அறையப்பட்டேன். ஆயினும் பிழைத்திருக்கிறேன் ஆனாலும் நான் அல்ல இயேசுவே எனக்குள் பிழைத்திருக்கிறார் கலா 2:20

பழைய மனிதரிடம் இருந்து உங்களுக்கு கடிதம் வருகிறதா மிகவும் ஜாக்கிரைதையாய் இருங்கள்.


Posted on: 14/02/2015

இரட்சிப்பின் ஆடை

சகோ. எட்வின் (சோஹார்)

ஒரு ஊரில் வியாபாரி ஒருவர் இருந்தார், அவர் துணி வியாபாரம் செய்கிறவராய் காணப்பட்டார். அவருடைய கடையில் கிடைக்காத ஆடைகளே இல்லை என்று சொல்லலாம், அவ்வளவு பெரிய வியாபாரியாய் அந்த ஊரில் காணப்பட்டார். ஆகவே அவர் அந்த ஊரில் பெரிய மனுஷனாக மக்களால் மதிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் அனேக நாடுகளிலும் இருந்து புதிய புதிய ஆடைகளை இறக்குமதி செய்து கொண்டு வந்தார். இதனிமித்தம் அவருடைய செல்வமும் நாளடைவில் பெருகிக் கொண்டே சென்றது.

ஆகவே அவர் புதிய புதிய கடைகளையும், இடங்களையும் விலை கொடுத்து வாங்கி குவிக்க தொடங்கினார்.  அவர் தன்னுடைய கடையில் ஒரு விளம்பர பலகையை இப்படியாக வைத்திருந்தார் அதுஎன்னவென்றால் இந்த கடையில் உலகத்தில் உள்ள எல்லா வகை துணிகளும் கிடைக்கும், உண்மையாகவே  எல்லாவித ஆடைகளும் இந்த கடையில் கிடைக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்படியாக நாட்கள் சென்றன, அந்தக் கடைக்கு ஒரு ஏழை விசுவாசி அதாவது ஆணடவராகிய இயேசு கிறிஸ்துவை நன்றாக அறிந்த விசுவாசி துணி வாங்குவதற்காக வந்தார். அப்பொழுது அவர் அங்கு வைத்திருந்த அந்த விநோதமான விளம்பர பலகையை பார்த்து நன்றாக சிரித்தார், உடனே அங்கு நிற்கிறவர்களிடம் எனக்கு ஒரு ஆடை வேண்டுமென்று கேட்டார், அதற்கு அவர்கள் உங்களுக்கு எப்படிப்பட்ட ஆடை வேண்டும் என்று கேட்டனர், அவர் சொன்னார் எனக்கு இரட்சிப்பின் ஆடை வேண்டும் என்பதாக, அதைக் கேட்ட எல்லாரும் ஒரு நிமிடம் அதிர்ச்சிக்குள்ளானர் ஏனென்றால் முதன் முதலில் இப்படிப்பட்ட ஒரு பெயரை கேட்பதினால், உடனே இத்தகைய காரியத்தை தங்கள் முதலாளிடம் போய் சொன்னார்கள்.

அவர் அதைக் கேட்டு விட்டு, இரண்டு நாட்கள் தருணம் கொடுக்கும்படி அந்த விசுவாசியிடம் கேட்டுக் கொண்டார். அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார். இப்படியாக அந்த ஆடையைத் தேடி அலைந்தார், அந்த ஆடை எங்கும் கிடைக்கவில்லை, இதனிமித்தம் ரொம்ப சோர்ந்து போனார். அவர் அந்த விசுவாசியை அழைத்து அனுப்பி தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டார். உடனே இந்த வியாபாரி விசுவாசியிடம் ஐயா இதற்கு முன் அந்த ஆடையை எங்கு வாங்கினீர்கள் என்று கேட்டார்.

அந்த விசுவாசி சிரித்து விட்டு, ஐயா இந்த ஆடை உலகத்தில் எங்கும் கிடைப்பதில்லை. இந்த ஆடையிருக்கும் இடம் சொர்க்கம் ஆகும். இதன் உரிமையாளர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆவார் என்றார். இதைக் கேட்ட வியாபாரி மிகுந்த ஆச்சரியப்பட்டு அவர் உண்மையிலே என்னை விடவும் பெரிய வியாபாரி ஆவார் என்று ஆச்சரியப்பட்டார். உடனே அந்த வியாபாரி இயேசு கிறிஸ்துவைக் குறித்து அவரிடமே விசாரிக்கத் தொடங்கினார். அந்த விசுவாசியும் இயேசு கிறிஸ்துவைக் குறித்து வேதத்திலிருந்து சொல்லத் தொடங்கினார். இதைக் கேட்டு கொண்டிருந்த வியாபாரி இவ்வளவு ஆடைகளை வைத்திருந்த என்னிடம் இந்த மகத்தான ஆடை இல்லையே என்று கண்ணீர் விட்டார். இதோ எல்லாவற்றையும் விட்டு விட்டு தன்னுடைய வாழ்க்கையில் குறைவாக இருக்கிற அந்த ஆடையை வைத்திருப்பவரை தேடி நடக்கத் தொடங்கினார்.

எனக்கு அருமையான ஜனங்களே விதவிதமான ஆடைகளை வைத்திருக்கிற நம்மிடம் இந்த இரட்சிப்பின் ஆடை இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள் இல்லாவிட்டால் இப்பொழுதே அதை வாங்க இயேசு கிறிஸ்துவை தேடிச் செல்லுவோம்.

வேதம் சொல்லுகிறது,

கத்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் அப்போஸ்தலர் 16:31


Posted on: 12/01/2015

ஜீவன் இல்லாத மனுஷன் எப்படி ஜீவன் பெற்றான்

(ஜீவனில்லாதவனின் கதை)

சகோ. எட்வின் (சோஹார்)

ஒரு மனுஷன் இருந்தான், அவன் தன்னுடைய வாழ்க்கையில் எல்லா இடத்திலும் நஷ்டத்தை மாத்திரம் பார்த்துக் கொண்டிருந்தான். அதாவது அவன் ஒரு ஜீவனற்ற வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்தான் என்று சொன்னால் மிகையாகாது. இதோ எவ்வளவு நாட்கள் தான் என்னுடைய வாழ்க்கை இப்படியாக சென்றுக் கொண்டிருக்கும் என்று யோசிக்கத் தொடங்கினான், ஆனாலும் அவனால் இந்த உயிரில்லாத வாழ்க்கையில் இருந்து மீளவே முடியவில்லை. கடைசியாக அவன் ஒரு முடிவுக்கு வந்தான், அதுஎன்னவென்றால் தன் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களைத் தேடி சென்று யோசனைக் கேட்கலாம் என்று முடிவு செய்தான்.

இதனிமித்தம் தன் நண்பர்களைத் தேடி சென்றான். வேதம் சொல்லுகிறது நாசியில் சுவாசமில்லாத மனுஷர்களால், சுவாசமில்லாத யோசனையையே தரமுடியும், ஆம் அவர்களும் அப்படியே கொடுத்தனர், இதனால் விரக்தி அடைந்த அவன் தன்னை மாய்த்துக் கொள்ளும்படி விரும்பினான்.

இதற்காக அவன் தெரிந்து கொண்ட இடம் ஒரு ஆலயத்தின் அருகே உள்ள இடம் இப்படியாக அவன் தான் சாவதற்காக அந்த இடத்தை தேடிச் சென்றான். அவன் மரிப்பதற்காக எல்லாவற்றையும் ஆயத்தம் செய்துக் கொண்டிருந்தான், அப்படியிருக்கையில் திடீரென ஆலயத்திலிருந்து வருகிற சத்தத்தைக் கேட்கத் தொடங்கினான். அந்த சப்தம் எப்படி இருந்தது என்றால்

நானோ ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்து, ஜீவனில்லாதவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கும்படி இந்த உலகத்திற்கு வந்தவர் எப்படியென்றால்

1.மரணவழியில் நடப்பவர்களுக்கு ஜீவ வழியாகவும்

2.விஷத்தை தண்ணீரைப் போல் குடிப்பவர்களுக்கு ஜீவத் தண்ணீராகவும்

3.பசியாயிருப்பவர்களுக்கு ஜீவ அப்பமாகவும்

4.வறட்சியில் இருப்பவர்களுக்கு ஜீவ ஊற்றாகவும்

5.கனியில்லாத மரத்தை உடையவர்களுக்கு ஜீவ விருட்சமாகவும்

6.சுவாசமில்லாதவர்களுக்கு ஜீவ சுவாசமாகவும் வந்தேன் என்கிற ஜீவ வார்த்தையைக் கேட்டான்.

இதனிமித்தம், நீதி 5:6 ல் சொல்லப்பட்ட ஜீவமார்க்கத்தை அதாவது ஜீவ வாழ்க்கையைப் பெற்று சந்தோஷத்துடன் முதன்முதல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தேடிச் சென்றான்.


Posted on: 26/12/2014

மாரா மதுரமான கதை

 

சகோ. எட்வின் (சோஹார்)

வேதம் சொல்லுகிறது, மாரா என்றால் கசப்பு என்று அர்த்தமாகும், ஏனென்றால் நாம் ரூத் அதிகாரத்தை வாசித்தால் புரியும். அந்த அதிகாரத்தில் நகோமி இப்படியாக புலம்புகிறார், தேவன் என்னை மாராளாய் மாற்றினார், அதாவது எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார் என்று ரூத் 1:20 ம் அதிகாரத்தில் [ வசனத்தில் ] நாம் வாசிக்க முடிகிறது.

அடுத்ததாக இஸ்ரவேல் ஜனங்கள் மாரா என்கிற இடத்தில் வந்த போது அந்த இடத்தில் தண்ணீரைப்பார்த்தும் அதை குடிக்கமுடியாத படி கசப்பாய் இருந்ததினால் அந்த தண்ணீருக்கு மாரா அதாவது கசப்பு என்று பெயரிட்டனர் என்று யாத் 15:23 ம் வசனம் நமக்கு சொல்லுகிறது.

இன்றைக்கும் அநேகருடைய வாழ்க்கையில் இந்த மாரா இருப்பதை நாம் பார்க்க முடிகிறது, இதற்கு நாம் சொல்லுகிற காரியம் எங்களுக்கு இந்த மாரவை எப்படி மதுரமாய் மாற்றுகிறது என்பது தெரியாது, இதற்கு வரம்பெற்ற தேவ ஊழியக்காரர்கள் தேவை என்றெல்லாம் சொல்வதுண்டு ஆனால் இதற்கான சரியான காரணம் என்னவென்றால் நமக்கு தேவையான வேத அறிவு இல்லாததே என்பதை நினைப்பூட்ட விரும்புகிறேன்.

இப்படியாகத்தான் என்னுடைய வாழ்க்கையிலும் இந்த மாரவை சுமந்து சென்றேன். அப்பொழுது எனக்கு அறியவில்லை என்னுடைய மாராவை மதுரமாக்குகிற மருந்து என்னிடத்தில் தான் இருக்கிறது என்பது. ஆம் நோய்கள் என்கிற மாரா எனக்கு வந்த போது மருத்துவரிடம் சென்றேன் அங்கு சென்று திருன்பின போதுதான் எனக்கு தெரிய வந்தது, என்னுடைய பணமும் உடல் நலமும் நஷ்டமானது. இப்படியாக அநேக காரியங்கள் என்னுடைய வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே போனது. இதற்கு முடிவுதான் என்ன என்பதை அறிய விரும்பினேன், ஆம் வேதம் சொல்லுகிறது,

 

ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் என்று பிலிப்பியர் 2:13 ல் அறிகிறோம்.

இந்த வசனத்தின் படி எனக்குள்ளே தேவன் வேதத்தை நன்றாக படிக்கும் ஆசையை தூண்டினார் இதன் விளைவு எரேமியா 8:22 ம் வசனம் என்னை மிகவும் பாதித்தது, அது என்னவென்றால்

கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையா? இரண வைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்? நான் யோசிக்கத் தொடங்கினேன், இவ்வளவு காரியம் நம்மிடத்தில் இருக்கிறதே பின்னே ஏன் நான் குணமாகவில்லை என்று சிந்தித்து கொண்டிருக்கும் போது யாத்திராகமம் புஸ்தகத்துக்குள் கடந்து சென்றேன், இதோ ஒரு இன்ப அதிர்ச்சி இந்த புஸ்தகத்துக்குள் அடங்கியிருந்தது, அது என்னவென்றால் வேதம் சொல்லுகிறது,

இஸ்ரவேல் ஜனங்கள் தண்ணீர் இல்லாமல் அலைந்து திரிந்த போது, இதோ மாரா என்கிற இடத்துக்கு வந்தார்கள். அந்த இடத்தில் தண்ணீர் இருப்பதைப்பார்த்து, அதை குடிக்க முற்பட்டனர், ஆனால் அந்த தண்ணீரோ கசப்பாக இருந்து மீண்டும் கசப்பைக் கொடுத்தது. இதன்நிமித்தம் ஜனங்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தனர், இதைக் கேட்ட தேவன் மோசேயைப் பார்த்து சொன்னார், அதின் அருகில் நிற்கிற மரத்தை வெட்டி அந்த தண்ணீரில் போடு, அப்பொழுது அந்த தண்ணீர் மதுரமாகும் என்றார். ஆவியில் சொல்ல வேண்டுமானால் அந்த மாராவின் பக்கம் நிற்கிற இயேசு என்கிற மரம் உண்டு, அவரை அழைத்தால் போதும் உங்கள் கசப்பு மதுரமாய் மாறும் என்றே அர்த்தமாகும். இத்தகைய காரியத்தை நாம் யாத்திராகமம் 15:22-25 ம் பாகத்தை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.

இதோ இந்தப்பாகத்தைப் படித்த பின்பு என்னுடைய ஆவிக்குரிய கண்கள் திறந்தன, ஆம் என்னுடைய மாராவை மதுரமாக மாற்றுகிற இயேசு என்னோடு உண்டு இனிமேல் நான் யாரிடமும் என் மாராவைக் கொண்டு செல்வதில்லை என்று முடுவு எடுத்தேன்.

தேவனும்[ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ]

மோசேயைப் பார்த்து சொன்னார் உன் மாராவை எல்லாம் மதுரமாக்குகிற மருந்தாகிய நான் உன்னோடு உண்டு ஆகவே நீ சொல் எனக்கு ஒன்றும் குறைவில்லை உபாகமம் 2:7


Posted On: 25/12/2014

தாகத்துக்குத்தா

சகோ. எட்வின் (சோஹார்)

அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள், இயேசு அவளை நோக்கி தாகத்துக்குத்தா என்றார் யோவான் 4:8

அதாவது தேவன் அந்த ஸ்திரீயை நோக்கி சொன்னார், ஸ்திரீயே நான் தாகமாயிருக்கிறேன், முதலாவது என் தாகத்தைத் தீர்க்கும்படி தண்ணீர் கொடு என்றார். நீங்களும் நானும் நினைக்கிறது போல தேவன் இங்கு கேட்ட தண்ணீர் அவள் ஆத்துமாவையே என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.ஏனென்றால் தேவனுக்குத் தாகம் ஏற்வடுவதில்லை அப்படியே தாகம் எடுத்தாலும் அவர் நம்மிடம் ஏன் கேட்க வேண்டும்.[ அநேகர் இப்படியாக நினைப்பதுண்டு அவர் மனுஷகுமாரன் தானே அப்படியென்றால் அவருக்கு தாகம் உண்டாகும் என்று, ஒரு காரியத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அவர் மனுஷ குமாரானாக இருந்தாலும் அவர் தேவன் என்பதை மறக்க வேண்டாம்]

வேதம் சொல்லுகிறது,

பூமியும் அதின் நிறைவும் உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது என்று சங் 24:1 ல் வாசிக்கிறோம். மேலும் அவர் சொல்லுகிறார், நான் பசியாயிருந்தால் உனக்கு சொல்லேன் ஏனென்றால் எல்லாமே என்னுடையது என்று தேவன் சொன்னதாக நாம் வேதத்தில் வாசிக்கிறோம். [ சங் 50:12 ]

ஒரு காரியத்தை நாம் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. இங்கு தேவன் ஸ்திரீயிடம் வந்ததற்கான் காரணம் அவளுடைய உலகத் தாகத்தைத் தீர்ப்பதற்காக என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவேதான் தேவன் சொல்லுகிறார். நீ அடிக்கடி இந்தத் தண்ணீரைக் குடித்தும் உனக்கு மறுபடியும் தாகம் உண்டாகிறது, அதாவது தேவன் இங்கு சொன்னத் தாகம் அவளுடைய பாவத்தையே என்பதை அறிய வேண்டும். அவள் அந்த பாவத்தைத் தண்ணீரைப் போல ஒவ்வொரு நாளும் குடித்துக் கொண்டிருக்கிறால், ஆனால் அந்தத் தண்ணீர் அவளுடைய பாவத்தை கூட்டியதே ஒழிய இன்னும் குறைந்தபாடில்லை. இத்தகைய காரியத்தை நான் வேத வசனம் மூலம் சொல்ல விரும்புகிறேன்.

அந்த ஸ்திரீ அவரை நோக்கி ஆண்டவரே எனக்குத் தாகமுண்டாகாமலும் நான் இங்கே மொண்டு கொள்ள வராமலும் இருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத்தர வேண்டும் என்றாள்.

இயேசு அவளை நோக்கி நீ போய் உன் புருஷனை அழைத்து வா என்கிறார், உடனே அவள் எனக்கு புருஷன் இல்லை எங்கிறாள்.

அதற்கு தேவன் ஸ்திரீயே நீ உள்ளபடியே சொன்னாய் ஏனெனில் உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள் இப்பொழுது இருக்கிறவனும் உன் புருஷன் அல்ல அதை உள்ளபடியே சொன்னாய் என்றார் யோவான் 4:15-18

அவள் சொன்னாள் எனக்கு புருஷன் இல்லை ஆனால் தேவன் என்ன சொன்னார், இப்பொழுது உன்னோடு வாழுகிறவனும் உன் புருஷன் அல்ல, அதாவது தேவன் இங்கே அவளுடைய தவறான உறவைச் சுட்டிக்காட்டுகிறார், என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆகவேதான் தேவன் சொன்னார் இந்த பாவத்தண்ணீரை குடித்தது போதும், இதோ இனிமேல் நான் தருகிற தண்ணீரைக் குடி இவைகள் உனக்கு ஜீவனைத்தரும் அதாவது பாவத்தின் நிமித்தம் மரித்துக் கொண்டிருக்கிற உன் பாவசரீரத்தை உயிர்பிக்கும் என்று சொல்லி அந்த ஸ்திரீயை தன்னை விசுவாசிக்கும்படி செய்தார், அதாவது இந்த உலகத்தை உயிர்பிக்க வந்த மேசியா என்பதை வெளிப்படுத்தினார்.

இதற்கு விலையாக அதாவது தான் கொடுக்கப் போகிற ஜீவத்தண்ணீருக்கு விலையாகத்தான் தேவன் அவளுடைய அழுக்கடைந்த இருதயத்தைத் தனக்குக் கொடுக்கும் படி கேட்டார், இதேயே தான் அவர் தாகத்துக்குத் தா என்று கேட்டார்.

இதோ தன்னுடைய ஆத்துமா தாகத்தைத் தீர்த்த தேவனை மற்ற ஜன்ங்கள் மத்தியில் சாட்சியாக சொன்னாள். இதைக் கேட்ட அனேகர் இயேசுவின் மேல் விசுவாசம் வைத்தனர் என்று யோவான் 4:39 ல் வாசிக்கிறோம்.

எனக்கு அருமையான ஜனங்களே

உலகம் தரும் தண்ணீர் எப்படிப்பட்டது

1.உலகத்தின் தண்ணீர் நம்முடைய ஆத்துமாவுக்கு மிகுந்த கெடுதலைக் கொடுக்கும்

2.உலகத்தின் தண்ணீரைக் குடிக்க வேண்டுமானால் அதிக விலை அதற்கு கொடுக்க வேண்டும்.

3.இந்த தண்ணீர் நித்திய மரணத்தை நமக்கு கொடுக்கும்.

4.இந்த தண்ணீர் மறுபடியும் தாகத்தை உண்டு பண்ணும் என்பதை மறக்க வேண்டாம்.

ஆனால் தேவனாகிய இயேசு தருகிற தண்ணீரைக் குடிக்கிறவர்களுக்கோ

1.மறுபடியும் தாகம் உண்டாகாது

2.விலை கொடுக்க வேண்டாம்

3.பாவசரீரத்தை உயிர்பிக்கிறது

4.நித்திய ஜீவனைத் தருகிறது.