Tamil Christian Website

Tamil Christian Website

Posted on:  22/04/2013

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக!

தேவனுடைய வார்த்தை

வேதம் சொல்லுகிறது,

வானமும் பூமியும் ஒழிந்துபோம் என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. மத்தேயு 24 : 35, மாற்கு 13 : 31

     மேலும், வேதம், தேவனுடைய வார்த்தையைப் பற்றி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம். கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது.

     இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள், பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பபடதக்கதும், தேனிலும் தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது என்றும், நாம் சங்கீதம் 19 : 7 10 வரை வாசிக்கும் போது தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் வார்த்தையின் மகத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.

     பாருங்கள், இன்று அநேக ஜனங்கள் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின் மகத்துவத்தை அறியாமல், தங்களைப் பலப்படுத்தும்படியும், தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும்படியும் எங்கெல்லாம் சென்று கொண்டிருப்பதை நாம் நம்முடைய கண்களால் காணமுடிகிறது.

     ஏன் இந்த அவநிலை? முக்கியமாக கிறிஸ்தவர்கள் என்று சொல்லிகொள்ளுகிற, தேவனாகிய இயேசுகிறிஸ்துவை மகிமைப்படுத்தாமல், தன்னுடைய பாரம்பரிய சபையையும், மனுஷரையும் மகிமைப்படுத்திக் கொண்டிருக்கிறவர்களுக்கே இந்த சீர்கேடான அவநிலைமை காணப்படுகிறது என்பதை அறியமுடிகிறது.

     வேதம் சொல்லுகிறது,

     சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். என்றார் என்று, யோவான் 8 : 32ல் காணலாம். இன்று அநேக ஜனங்களுக்கு சத்தியம் என்றால் என்ன? என்பதை அறியாமல் கிறிஸ்தவர்கள் என்று தங்களை மார்த்தட்டிக் கொண்டிருக்கின்றனர். 

     நான் இந்தக்காரியத்தை வேதத்தின் மூலம் சுட்டிக்காட்டுகிறேன். பாருங்கள் சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும், அதாவது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்படிவதே அந்த சத்தியம்.

     எப்படியென்றால் சத்தியம்  என்பது தேவன்னுடைய வார்த்தையைக் குறிக்கிறது.

     நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே அந்த வார்த்தை என்றும், அந்த வார்த்தையே உங்களுக்கு ஜீவன் கொடுக்கிறது என்றும், மேலும் நீங்கள் அந்த வார்த்தையில் நிலைத்திருந்தால் இவ்வுலகத்தின் பாவமரணத்தை ருசிப்பார்ப்பதில்லை என்றும் வேதம் நமக்கு அழகாகச் சுட்டிக்காட்டுகிறது.

     இதை நாம் யோவான் 1 : 1 14 மற்றும் யோவான் 8 : 51ஐ வாசிக்கும்போது தெரிந்துக்கொள்ளலாம்.

     அதுமாத்திரமல்ல, மேலும் வேதம் சொல்லுகிறது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று அப்போஸ்தலர் 2 : 21 மற்றும் யோவேல் 2 : 32ல் நாம் வாசிக்க முடிகிறது,

     அதாவது இயேசுகிறிஸ்துவின் நாமம் என்பது தேவனுடைய வார்த்தையே என்று நாம் வெளிப்படுத்தின சுவிசேஷம் 18 : 13ல் காணலாம்.

     ஆகவேதான் நாம் ஒவ்வொருநாளும், இந்த வல்லமையான, மகத்துவமான இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை நம்முடைய வாழ்க்கையில் பயன்படுத்தும்போது, நாம் எல்லா பிரச்சனைகளிலிருந்து விடுதலைப்பெற்று, இயேசு கிறிஸ்துவின் ஒளியாக மாறமுடியும் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

     பாருங்கள் நம்முடைய அப்போஸ்தலனாகிய பவுலும் இதையேதான், அதாவது தேவனுடைய வார்த்தையையே முக்கியப்படுத்தி எல்லா நிருபங்களிலும் எழுதிவைத்திருக்கிறார். அவர் சொல்லுகிறார்,

     இந்த ஜீவனுள்ள தேவனாகிய இயேசுகிறிஸ்துவுக்காக, அதாவது தேவனுடைய வார்த்தைக்காக

1.       எனக்கு லாபமாய் இருந்தவைகள் எவைகளோ

2.       எனக்கு நன்மையாய் இருந்தவைகள் எவைகளோ

3.       நான் பலம் என்று எவைகளைச் சொல்லிக்கொண்டு, சுமந்த நியாயப்பிரமாணத்தையும் கூட நஷ்டமென்றும், குப்பையென்றும் எண்ணுகிறேன் என்று பிலிப்பியர் 3 : 7,8 மற்றும் 11ல் நாம் வாசித்து தெரிந்துக்கொள்ளலாம்.

இப்படிப்பட்ட பலமான தேவனுடைய வசனத்தைக் கொண்டு, உங்களைப் பலப்படுத்த விரும்புகிறேன்.

 

II. இதை நாம் தியானிக்கலாம், எப்படியென்றால் ஆண்டவராகிய  இயேசுகிறிஸ்துவின் பரிசுத்த ஆவியைக் கொண்டு நாம் இத்தகைய பெரிய பலத்தை தியானிக்கமுடியும்.

1.       இதோ, தன்னுடைய ஜீவனுக்காக ஒடிக்கொண்டிருகிறவர்களைப் பார்த்து, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பேசுகிறார். என் ஜனங்களே என்னுடைய புஸ்தகமாகிய வேதத்தை தேடி வாசியுங்கள் அவைகளில் உங்கள் ஜீவன் பரிபூரணமாய் இருப்பதை அறிந்து கொள்ளலாம். என்று நான் உங்களுக்கு ஏசாயா 34 : 16 மற்றும் யோவான் 8 : 51, 1 ; 1 14ல் எழுதி வைக்கவில்லையா என்று, நம்மைப்பார்த்து வருத்தப்படுகிறார்.

அடுத்ததாக,

2.       எப்படி இந்த பாவ உலகத்தில் தன்னைப் பரிசுத்தமாய் வைத்துக்கொள்ளமுடியும் என்று கலங்குகிற தேவப்பிள்ளைகளைப் பார்த்து, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பேசுகிறார்

மகனே,

     என்னுடைய வார்த்தைகளைக் கொண்டு உன்னைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளமுடியும் என்று சங்கீதம் 119 : 9ல் நான் உங்களுக்கு சொல்லவில்லையா என்று தேவன் நம்மை பார்த்து கேட்கிறார்

அடுத்ததாக,

3.       நாங்கள் என்னத்தை உண்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படுகிற தேவப்பிள்ளைகளைப் பார்த்து ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பேசுகிறார்.

 

ஆகாயாத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, ஆனாலும் பரமபிதாவாகிய இயேசுகிறிஸ்து இவைகளைப்பிழைப்பூட்டவில்லையா?

     காட்டு புஷ்பங்களைக் கவனித்துப்பாருங்கள் அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை இவைகளை உங்கள் பரமபிதாவாகிய இயேசுகிறிஸ்து உடுத்துவிக்கவில்லையா?

     இவைகளைப் பாதுகாக்கிற தேவன் உங்களுக்கு இதைவிட மேலாக செய்வார் என்று மத்தேயு 6 : 25 : 31ல் எழுதி வைக்கவில்லையா என்று தேவன் நம்முடைய இயலாமையைப் பார்த்து மிகவும் வருத்தப்படுகிறார்.

அடுத்ததாக,

4.       தனக்கு விரோதமாய் எழும்புகிற பிசாசின் கெர்ச்சிப்பைப் பார்த்து பயந்து நடுங்குகின்ற ஜனங்களைப் பார்த்து கர்த்தர் பேசுகிறார்.

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் என்று நான் உனக்கு ஏசாயா 54 : 17ல்  பதித்துவைக்கவில்லையா என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம்மைப்பார்த்துக் கேட்கிறார்.

 

5.       மேலும்,

நான் கைவிடப்பட்டேன் என்று கவலைப்படுகிற மனுஷனைப் பார்த்து, தேவனாகிய இயேசு கிறிஸ்து இப்படி சொல்லுகிறார்,

     இமைப்பொழுதும் உன்னை கைவிட்டேன், ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக் கொள்வேன் என்று நான் அன்பாக, ஏசாயா 54 : 7, 8 ல் சொல்லவில்லையா என்று கேட்கிறார்.

 

6.       அடுத்ததாக,

ஐயோ, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு செய்த உடன்படிக்கையை மறந்துவிட்டாரே? என்று புலம்பிக் கொண்டிருக்கிற ஜனங்களைப்பார்த்து சொல்லுகிறார்.

 

மகனே, மகளே,

மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும் என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலை பெயராமலும் இருக்கும் என்று நான் ஏசாயா 54 : 10ல் எழுதி வைக்கவில்லையா என்று தேவனாகிய இயேசு கிறிஸ்து இப்படி கேட்கிறார்.

 

7.       மேலும், நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம்மோடு பேச விரும்புகிறார்.

ஐயோ என் தாகத்தையும், என் பசியையும் யார் தீர்ப்பார் என்றும், என்னிடத்தில் பணமொன்றும் இல்லையே என்று புலம்பி கொண்டிருக்கிறவர்களைப் பார்த்து இயேசுகிறிஸ்து இவ்விதமாய் பேசுகிறார்.

     ஓ தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள், பண்மில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள் நீங்கள் வந்து, பண்முமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள் என்று நான் தான் ஏசாயா 55 : 1ல் எழுதி வைத்திருக்கிறேனே கொஞ்சம் வேதத்தைத்தான் திறந்து பாருங்கள் என்று நம்மைப்பார்த்து கதறுகிறார்.

 

8.       மேலும்,

ஐயோ என்னுடைய வாழ்க்கையில் சமாதானமே இல்லையே என்று தவித்துக்கொண்டிருக்கிற தம்முடைய ஜனங்களைப் பார்த்து இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், மகனே, என் மகனே, கலங்கவேண்டாம்.

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக என்று நான் தானே யோவான் 14 : 27ல் அழகாக வடித்து வைக்கவில்லையா? என்று நம்முடைய தேவன் நம்மைப்பார்த்து குமுறுகிறார்

.

9.       அடுத்ததாக,

எப்பொழுது புலம்பிக்கொண்டிருக்கிற மனுஷனைப் பார்த்து சொல்லுகிறார்.

உங்கள் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணுவேன் என்று சங்கீதம் 30 : 11ல் எழுதவில்லையா என்று இயேசு பேசுகிறார்.

10.   அடுத்ததாக,

ார் எங்களுக்குப் போதிப்பார்? யார் எங்களை செம்மையான வழியிலே நடத்துவார் என்று கலங்குகிற தெய்வப் பிள்ளைகளைப் பார்த்து அன்பு தகப்பனாகிய இயேசு கிறிஸ்து இவ்விதமாக சொல்லுகிறார்.

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்று சங்கீதம் 32 : 8ல் சொல்லியிருக்கிறேன் என்கிறார்.

11.   வாருங்கள், அடுத்த வசனத்தைப் பார்க்கலாம்.

எனக்காக யார் யுத்தம் செய்வார்கள்? என்று தவித்து நிற்கிறவர்களே? நீங்கள் பயப்படவேண்டாம் என்று தேவன் சொல்லுகிறார்.

எப்படியென்றால்,

           கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார் நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்று யாத்திராகமம் 14 : 14ல் எழுதவில்லையா என்று தேவன் சொல்லுகிறார்.

 

12.   கடைசியாக,

எங்களிடத்தில் அன்பு செலுத்த யாரும் இல்லையே என்று தவித்து கண்ணீரோடு நிற்கிற உங்களையும், என்னையும் பார்த்து நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பேசுகிறார்.

இதோ,

           உங்களுக்காக மகிமையின் தேவனாகிய நான் மனுஷரூபமாய் மாறி, உங்களிடத்தில் அன்பு செலுத்துவதற்காக இறங்கி வந்தேனே! இதை ஏன் நீங்கள் இன்னும் அறியாமல் இருக்கிறீர்கள்.

 

           இவ்வளவு பெரிய தியாகத்தை செய்த நான், மற்ற எல்லாவற்றையும் உங்களூக்குத் தரமாட்டேஓ என்று நம்மைப் பார்த்து, யோவான் 3 : 16, ரோமர் 8 : 32, 1தீமோ 3 : 16 இவற்றின் மூலம் கேட்கிறார்.

           ஆகவே என் அன்புள்ள ஜனங்களே நீங்கள் பயப்பட வேண்டாம்.

           உன்னைக் காக்கும்படியாகவும், உன்னை இரட்சிக்கும்படியாகவும், உன்னைத் தப்புவிக்கும் படியாகவும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைப் பார்த்து சொல்லுகிறார். எரேமியா 1 : 8, 19

 

III            * இயேசு கிறிஸ்து *

என் தாய் எனக்குப்பால் கொடுப்பதை நிறுத்தினாள்

என் தந்தை என்னை சுமப்பதை விட்டுவிட்டார்

என் சகோதரர் என்னிடத்தில் அன்பு செலுத்துவதை நிறுத்தினர்.

என் நண்பர் எனக்கு உதவி செய்வதை நிறுத்திவிட்டனர்.

 

இந்த சூழ்நிலையை எதிர்ப்பார்க்காத நான்

கலங்கிப் போனேன்

ஐயோ! நான் என்ன செய்வேன்

எனக்கு உதவிச் செய்ய யாரும் இல்லையே!

என்று  கண்ணீர் விட்ட போது

என் கண்ணீரைத் தாங்குவதற்காக

ஒருவர் எனக்காக காத்திருந்தார்

நான் அவரை அநேகம் தரம் பார்த்திருக்கிறேன்

ஆனால் நான் அவரை அசட்டை செய்ய வில்லை, [கண்டுகொள்ளைல்லை]

இப்பொழுது அவர் பேசத்தொடங்கினார்,

மகனே, இதேபோல அனாதையாக வாழ்பவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக வந்த இயேசு நான் தான் என்று சொல்லி அன்பின் முத்தங்களால் என்னை முத்தமிட்டார். அவர் முத்தமிட்டபோது, என்னுடைய துக்கம் அந்த முத்தத்தில் மறைந்து போயிற்று என்ன ஆச்சரியம்..........

-    இப்படிக்கு,

இந்த உலகத்தில் கைவிடப்பட்ட, ஆனால் இயேசுவின் அன்பினால் நிலைநிறுத்தப்பட்ட உங்கள் அன்பு சகோதரன்.

 

* யாரை கனம் பண்ணவேண்டும் *

என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான், அதாவது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவாகிய நான் கணம் பண்ணுவேன்.

எப்படியென்றால்,

என்னுடைய வார்த்தையின்படி எனக்குக் கீழ்படிகிறவர்களையும், என் வார்த்தைக்குச் செவிக்கொடுக்கிறவர்களையும் நான் கனம் பண்ணுவேன். 1 சாமுவேல் 2 : 30

 

* தேவனுடைய வார்த்தை எப்படிப்பட்டது? *

     தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப்பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும் இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. எபிரெயர் 4 : 12

எல்லாக்காரியங்களும்

தேவ வசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.  1தீமோத்தேயு 4 : 5

 

 

 

===========================================================================

 

 

உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?

ஏன் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம்மைப் பார்த்து இந்த கேள்வியைக் கேட்க வேண்டும். கொஞ்சம் இந்தக் காரியத்தைப் பற்றி சிந்திக்கலாம்.

 

வேதம் சொல்லுகிறது,

     நம்மை ஆசீர்வதிப்பது தான் தேவனுக்குப் பிரியம் என்றும் (எண்ணாகமம் 24 : 1)

     நாம் ஆபிரகாமின் ஆசீர்வாதத்திற்குப் பாத்திரமாய் இருக்கிறோம் என்றும். (கலாத்தியர் 3 : 14)

     நாம் நோய் இல்லாத வாழ்க்கையை வாழவேண்டும் என்றும் (உபாகமம் 7 : 15, 14)

     நாம் தேவனுக்காக எழுந்து பிரகாசிக்க வேண்டும் என்றும் (ஏசாயா 60:1)

     நம்முடைய தேவனாகிய இயேசுகிறிஸ்து விரும்புகிறார் என்றும் வேதம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

     இதை வேதத்தின்மூலம் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்,  எப்படியென்றால்.

     இயேசுதாமே நமது பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று வேதம் நமக்குச் சொல்லுகிறது இதை நாம் ஏசாயா 53 : 4 மற்றும் 8 : 17ல் வாசிக்கலாம்.

 

     ஆனால் நாமோ இன்னும் குணமாகாமலும், வேதத்திலுள்ள வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொள்ளாமலும் இருக்கிறோம். நாம் குணமாகாமல் நோயுடன் வாழ்வதைப் பார்த்த தேவன் இவ்விதமாய் சொல்லுகிறார்.

     கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னே ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற் போனாள்? எரேமியா 8 : 22.

     அதாவது, தேவன் சொல்லுகிறார்.

என்னிடத்தில் உங்களை குணமாக்கும்படியாக பிசின் தைலம்போன்ற வல்லமையான வார்த்தைகள் இல்லையா? அதுமாத்திரமல்ல, நான் உன்னை குணமாக்குகிற இரணவைத்தியன் என்று, யாத்திராகமம் 15 : 26ல் சொல்லவில்லையா?

     பின்னே ஏன் நீங்கள் இன்னும் குணமாகவில்லை இதைதான், அதாவது நாம் ஏன் இன்னும் குணமாகாமல் இருக்கிறோம், என்பதைப்பற்றி வேதத்தின் மூலம் தியானிக்கலாம்.

 

வேதம் சொல்லுகிறது

     நம்முடைய பாவங்களே, அதாவது நம்முடைய இருதயம் பழுதடைந்து இருப்பதே என்று ஏசாயா 58 : 2 லும்

மேலும்:

     இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்கு தூரமாய் விலகியிருக்கிறது. அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. என்று ஏசாயா 28 :13 லும் நாம் காணமுடிகிறது. இப்படியாக நம்முடைய இருதயம் பழுது அடைந்து இருப்பதே. நாம் குணமாகாமல் இருப்பதற்குக் காரணம்.

     நம்முடைய இருதயம்தான், தேவனுக்கு அவசியம் எப்படியென்றால், பழைய ஏற்பாட்டின் படி தேவனுக்கென்று ஒரு பரிசுத்த ஆசரிப்புக் கூடாரம் உருவாக்கப்பட்டிருந்தது. எதற்காகவென்றால் அவர் வந்து வாசம் செய்யும் படியாகவும் அங்கேயிருந்து தம்முடைய பிள்ளைகளிடத்தில் பேசும்படியாகவும் என்று வேதம் சொல்லுகிறது. (எபிரெயர் 9ம் அதிகாரம்).

 

     ஆனால் புதிய நியமத்தின்படி, நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கைகளினால் கட்டப்பட்ட ஆலயத்தில் வாசம் செய்யாமல், நம்முடைய இருதயங்களில் வாசம் பண்ணும்படியாக விரும்புகிறார் என்று வேதம் சொல்லுகிறது.

 

     இதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுல் இவ்விதமாக வர்ணிக்கிறார். எப்படியென்றால்,

     நாம் தேவனுடைய ஆலயமாகிருக்கிறோம் என்றும் 1 கொரி 3 : 16லும்

     நாம் பரிசுத்த ஆவியின் ஆலயமாயிருக்கிறோம் என்றும் 1 கொரி 6 : 19லும்

     நாம் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம் என்றும் 2கொரி 6 : 16லும் நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.

     ஆகவேதான் இந்த ஆலயம் சுத்தமாய் இராத பட்ச்சத்தில் நாம் என்னதான், ஆலயத்தில் சென்று ஆராதனைச் செய்தாலும், நாம் ஒருபோதும் குணமடைய முடியாது என்று தெளிவாகச்சொல்லி கொள்ளுகிறேன்.

 

     இத்தகைய காரியத்தை நான் பின்வருமாறு, வேதத்தின் மூலம் சொல்லிக்கொள்ளும்படி ஆசைப்படுகிறேன்,

     வேதம் சொல்லுகிறது,

           கணவனானவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டுப்பிரிந்து தன் மனைவியுடன் இசைந்திருப்பான், அதாவது, கணவனும், மனைவியும் மாம்சத்தின்படி வெவ்வேறாக இருந்தாலும், அவர்கள் இருதயத்தின்படி, அதாவது ஒரே ஆவியாய் மாறிவிடுகின்றனர். (எபேசியர் 5 : 31 - 33)

 

     அதாவது கண்வனின் இருதயமும், மனைவியின் இருதயமும் ஒன்றாக மாறிவிடுகிறது. அப்பொழுதுதான் அவர்களுடைய வாழ்க்கை என்கிற கப்பல் மேடு, பள்ளங்கள் இல்லாமல் நேராக மகிழ்ச்சியுடன் செல்லமுடியும்.

 

     அதுபோலத்தான் மணவாட்டியாகிய நம்முடைய இருதயம், நம்முடைய மணவாளனாகிய இயேசுகிறிஸ்துவுடன் ஒன்றி போகும்போதுதான், அதாவது ஒரே ஆவியாக மாறும்போது தான் நாம் குணமடைய முடியும்.

     இதை வேதம் நமக்கு மிக அழகாக சொல்லுகிறது,

எப்படியென்றால்,

     கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான் என்று 1 கொரி 6 ; 17ல் நாம் காண்முடிகிறது.

     ஆனால் நாமோ,  குணமடையாதபடி நம்முடைய இருதயத்தை உலக ஆசைகளின் மேல் வைத்துக்கொண்டு, அதாவது உலகத்தை நேசிக்கிறவர்காளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

     இப்படியாக தன்னுடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டு, தன்னுடைய பாவங்களினால் இந்த உலகத்தில் மரித்துக்கொண்டிருக்கிற ஜனங்களைப்பார்த்து நம்முடைய தேவனாகிய இயேசுகிறிஸ்து இப்படியாக பேசுகிறார்.

     மகனே, மகனே.

           உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்? ஏசாயா 22 : 16

 

இத்தகைய காரியத்தை நான் வேதத்தின்மூலம், அதாவது சில உதாரணங்கள் மூலமாய் விளக்கிக் காட்டுகிறேன். வேதத்தில் சில மனிதர்கள், தங்கள் இருதயத்தை தேவனிடம் இருந்து விலக்கினதால், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தையும் அதனால் அவர்கள் தேவன் கொடுத்த ஆசீர்வாதத்தை இழந்து போனதையும் நாம் ஒரு சிலவரிகளில் பின்வருமாறு காணலாம்.

 

1)      முதலாவதாக நான் உங்களுக்குக் காண்பிக்க போகிற மனுஷன் ஆதாம்:

நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் முதல் ஆவிக்குரிய மகன்.

வேதம் இவ்விதமாய் சொல்லுகிறது

இந்த மனுஷனை தம்முடைய சாயலாக, அதாவது தம்முடைய மகிமையை அவனுக்குத் தந்தார் என்றும்,

அதுமாத்திரமல்ல

தன்னுடைய ஜீவசுவாசத்தை அவனுக்குத் தந்தார் என்றும் வேதம் நமக்குக் காட்டுகிறது. ஆதி 1 : 27, 2 : 7

இதினிமித்தமாக ஆதாமின் ஆவியும், தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் ஆவியும் ஒன்றாகவே இருந்தது. ஆகவே தான் ஆதாமின் வாழ்க்கையுல் எப்பொழுதும் சந்தோஷம் மட்டுமே காணப்பட்டது.

 

     தன்னுடைய மகனைப் பார்ப்பதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பரலோகத்தில் இருந்து இறங்கி வருவார். பாருங்கள் என்ன ஒரு அழகான ஐக்கியம். இதைப்பார்த்து தேவதூதர்களே பொறாமைப்பட்டிருப்பார்கள்.

     அதுமாத்திரமல்ல, நம்முடைய தேஅன் ஆதாமிற்கு துணையாக ஒரு ஏவாளையும் பரிசாகக்கொடுத்திருந்தார். ஆனால் அவர் ஒரே ஒரு நிபந்தனையை அவனுக்கு முன்பாக வைத்திருந்தார். அதுவென்னவெனில்,

     மகனே, நீ வாசம் செய்கிற இந்த ஏதேன் தோட்டத்தில் ஒரு பொல்லாத மனுஷன் உண்டு, அவன் நன்மைதீமையை அறிந்தவன். அவன் பெயர் சாத்தான், அதுமாத்திரமல்ல அவனுக்கு அநேக பெயர்களும் உண்டு. அவன் மற்றவர்களை வஞ்சித்து அவர்களுடைய இருதயத்தை சேதப்படுத்துகிறவன். ஆகவே நீ அவனோடு எந்த ஐக்கியமும் வைக்கவேண்டாம் என்று அறிவுரை சொல்லியிருந்தார்.

     ஆனால் இந்த மனுஷனோ, தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் அறிவுரையை மறந்து, தன்னுடைய இருதயத்தை அந்த பொல்லாங்கனாகிய சாத்தானுக்கு கொடுத்துவிட்டான். இதன் நிமித்தம் இந்த ஆதாம் எல்லாவற்றையும் இழந்து, ஒளிந்துக்கொண்டிருந்தான். பாருங்கள், அப்பொழுது நம்முடைய கர்த்தராகிய இயேசு அந்த தோட்டத்திற்கு வருகிறார். அங்கே தம்முடைய மகனை காணாமல் அங்கலாய்ப்புடன் சத்தமிட்டு, ஆதாமே நீ எங்கே இருக்கிறார் என்றார்.

     இந்த சத்தத்தைக்கேட்ட ஆதாம், ஆண்டவரே நான் உம்முடைய சத்தத்தைக் கேட்டு நிர்வாணியாயிருப்பதினால் பயந்து ஒளித்துக்கொண்டேன் என்றான்.

     அப்பொழுது, நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஆதாமைப்பார்த்து, மகனே ஏன் நீ நிர்வாணியாய் மாறினாய், உனக்கு இங்கே என்ன இருக்கிறது, உனக்கு இங்கே யார் இருக்கிறார்? என்றுஅங்கலாய்ப்புடன் கேட்பதாக நாம், ஆதியாகமம் 3 : 9 11 வரை வாசிக்கும்போது அறிந்து கொள்ளலாம்.

ஏன் அவன் நிர்வாணியாய் மாறினான்.

     முதலாவதாக,

     அவன் தன் இருதயத்தை, மனுஷனுக்குக் கீழ்ப்படியும் படியாகக் கொடுத்தான்.

இரண்டாவதாக,

     ஆதாம் தேவனுடைய வார்த்தையை அசட்டை செய்கிறவனாகக் காணப்பட்டான்.

     மூன்றாவதாக,

     இந்த மனுஷன், தேவன் தனக்குக் கொடுத்த மகிமையின் இரட்சிப்பையும், அபிஷேகத்தையும் தன்னுடைய மனைவிக்குக் கற்றுக்கொடுக்க மறந்துபோனான்.

     இதை அறிந்த சாத்தான், இதோ இரட்சிப்பையும், அபிஷேகத்தைலமும் இல்லாத அவன் மனைவியின் மூலம் ஆதாமை வஞ்சித்துப்போட்டான் என்பதை அறிந்து கொள்ளலாம் என் அருமையான பிள்ளைகளே, ஒருவேளை

     நம்முடைய வீட்டிலும் நாம் இப்படியாகயிருப்போமானால் அதாவது ஒருவர் இரட்சிக்கப்பட்டு மற்றவர் இரட்சிக்கப்படாமலும் இருப்போமானால் உடனடியாக அந்த இரட்சிக்கப்படாத நபரை இரட்சிப்பிற்குள்ளாக நடத்தும்படியாக நாம் தேவனிடம் ஜெபம் பண்ணுவோமாக. நாம் இந்த ஆதாமைப்போல, நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வரும்போது, நிர்வாணியாய் இருக்கவேண்டாம்.

2. அடுத்ததாக, இரண்டாவது மனுஷன் எலியா தீர்க்கதரிசி

வேதம் சொல்லுகிறது,

     இந்த மனுஷன் தனிமனிதனாக இருந்துகொண்டு தெய்வகிருபையுடன் ஆகாப் இராஜாவுடன் போராடினான் என்றும்,

     தேவனாகிய இயேசுகிறிஸ்து, இந்த எலியாவைக்கொண்டு அனேக அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்தார் என்றும் (1இராஜாக்கள் 17ம் அதிகாரத்தில் காணலாம்) அதுமாத்திரமல்லாமல், கர்த்தரே தெய்வம் என்று ஜனங்களெல்லாம் அறிந்து கொள்ளும்படியாகச் செய்தான் (1 இராஜாக்கள் 18 : 39) என்றும் வேதம் சொல்லுகிறது.

     மேலும் தேவனுக்கு முன்பாக முழங்கால் இடாத பாகாலின் தீர்க்கதரிசிகளை, ஒருவனாக இருந்து வெட்டிப்போட்டான் என்றும் நாம் 1 இராஜாக்கள் 18 : 40 ல் வாசிக்கும்போது அறிந்துக் கொள்ளலாம்.

     இப்படியாக, தேவனால் ஓடிக்கொண்டிருந்த எலியா தீர்க்கதரிசி இப்பொழுது, ஒரு குகையிங்கீழ் மடங்கி படுத்துக்கொண்டிருக்கிறார் என்று நாம் 1இராஜாக்கள் 19 : 9 ல் வாசிக்கும்போது தெரிந்துகொள்ளலாம். இதைப்பார்த்த நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, எலியாவைப்பார்த்து மகனே உனக்கு இங்கே என்ன இருக்கிறது, உனக்கே இங்கே யார் இருக்கிறார்கள் என்று கேட்பதாக நம்முடைய வேதம் 1இராஜாக்கள் 19 : 9-ல் பதிவு செய்து இருக்கிறது. ஏன் இந்த சூழ்நிலை எலியா தீர்க்கதரிசிக்கு ஏற்பட்டது என்ன?

வேதம் சொல்லுகிறது.

இவ்வளவு நாட்களாக தேவனைப்பார்த்து ஓடிக் கொண்டிருந்த அவருடைய இருதயம், இப்பொழுது கெர்ச்சிக்கிற சிங்கம்போல் இருக்கிற பிசாசின் மகளாகிய யேசபேலைப்பார்த்தது என்று வேதம் நமக்கு 1இராஜாக்கள் 19 : 2, 3 ல் தெளிவாகக் காட்டுகிறது.

அதாவது எலியா தீர்க்கதரிசி தேவனுக்குப் பயப்படுவதற்குப் பதிலாக முதல்தடவையாக ஒரு மனுஷியைக் கண்டுபயந்தான். வேதம் இத்தகைய காரியத்தை பின்வருமாறு சொல்லுகிறது. அது என்னவென்றால்.

மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும் என்று நீதிமொழிகள் 29 : 25ல் வாசிக்கலாம்.

இந்த பயம் எலியா தீர்க்கதரிசியின் வாழ்க்கையில் ஒரு கன்ணியை வருவித்தது.

இதினிமித்தமாக எலியா தீர்க்கதரிசி, தேவனாகிய இயேசுகிறிஸ்து தம்மை அனுப்பினதின் நோக்கத்தை மறந்து போனார் என்றும் நாம் காணமுடிகிறது.

என் அருமையான ஜனங்களே, ஆகவேதான் நம்முடைய ஆண்ட்வராகிய இயேசுகிறிஸ்து நம்மிடம் தங்கத்தையோ, வைரத்தையோ அல்லது தசமபாகத்தையோ, காணிக்கையோ எதிர்ப்பார்க்காமல், அவர் நம்மை நோக்கி இவ்விதமாக சொல்லுகிறார், என் மகனே, என் மகளே!

உன் இருதயத்தை எனக்குத்தா! உன் கண்கள் என் வழிகளை நோக்கியே இருப்பதாக! நீதிமொழிகள் 23 : 26

-    உங்கள் பிரியமான சகோதரன்.

Download this Article in PDF