Tamil Christian Website

Tamil Christian Website

Posted On : 23/12/2015

இயேசு கிறிஸ்து எதற்காக உலகத்திற்கு வந்தார்?

 

                                                                                       சகோதரி. அனு ஃபெஸ்லின்

 

இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவும்

 

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்[1தீமோத்தேயு:1:15] [லூக்கா:19:10].

 

ஊழியம் செய்யவும் ஜீவனைக் கொடுக்கவும்

 

அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்[மாற்கு:10:45].

 

மரித்தோரை உயிரோடு எழுப்பவும்

 

மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று[1கொரிந்தியர்:15:21]

 

பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படி

 

ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்,பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்[1யோவான்:3:8]

 

பாவிகளை மனந்திரும்புவதற்கு அழைக்க

 

பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்[மாற்கு:2:17].

 

தேவனுடைய சித்தத்தை செய்து முடிக்க

 

என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன்[யோவான்:6:38].

 

நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற

 

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்[மத்தேயு:5:17].

 

உலகத்தை நியாயந்தீர்ப்பு செய்ய

 

காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்[யோவான்:9:39]

 

தேவனுடைய அன்பை வெளிப்படுத்த

 

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது[1யோவான்:4:10]

 

தேவனுடைய சுவிசேஷத்தை அறிவிக்க

 

நான் பிரசங்கம் பண்ணவேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டு வந்தேன்[மாற்கு:1:38]

 

பரிசுத்த ஆவியானவர் நம்மோடு வாசம் பண்ண

 

நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்[யோவான்:14:16].

 

பிரிவினையை உண்டாக்க [இருளின் பிள்ளைகள்,வெளிச்சத்தின் பிள்ளைகள்]

 

நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்[லூக்கா:12:51].

 

சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்க

 

சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்[யோவான்:18:37].

 

உலகத்தின் ஒளியாக

 

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்[யோவான்:12:46].

 

புத்திரசுவிகாரத்தை அடையும்படி

 

நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக.. நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்[கலாத்தியர்:4:5].

 

பிதாவை காண்பிக்க

 

என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

 

அக்கினியை போட

 

பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன் [லூக்கா:12:48,49].

 

-