Tamil Christian Website

Tamil Christian Website

Posted On: 15/09/2014

பாத்திரம்

என் பெயர் பாத்திரம், பாத்திரம் என்றாலே அது பிறருக்காக ஏதாவது ஒரு வகையில் பிரயோஜனமுள்ளதாய் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் பாத்திரம் என்கிற பெயர் மிகவும் பொருத்தமாய் இருக்கும். ஆனால் நானோ இந்த உலகத்திற்கு பயன்படாத ஒரு அழுக்கான பாத்திரமாய் காணப்பட்டேன்.

ஆகவேதான் ஜனங்கள் என்னை எடுத்து அவர்களின் அசிங்கத்தைக்[அழுக்கை] கழுவதற்காக, அவர்களின் வீட்டின் வெளியே வைத்திருந்தனர். அந்த வீட்டில் இன்னும் அழகான பாத்திரங்கள் உள்ளே இருந்தது, அவைகளை அவர்கள் தினமும் துடைத்து மிகவும் அழகான உடையை எல்லாம், அதாவது பளப்பளப்பான உடையையெல்லாம் அவர்கள் தரித்து வைத்திருந்தனர். அவைகளைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் கோபமும், அழுகையும் வரும். என்னை மாத்திரம் ஏன் இப்படியாக மழையிலும், வெயிலிலும் வைத்திருக்கிறார்கள், நான் என்ன தவறு செய்தேன் என்று எண்ணி அடிக்கடி வருத்தப்பட்டுக் கொள்வேன். எனக்காக யாரும் இந்த உலகத்தில் இல்லையா, என்னையும் அவர்களில் ஒருவனாக எண்ணமாட்டார்களா, என்றெல்லாம் நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பேன்.

ஒருநாள் அந்த வீட்டில் கலியாண நிகழ்ச்சி ஒன்று வந்தது, அதற்கு இயேசு கிறிஸ்து என்னும் ஒரு பெரியவரை அந்த வீட்டிற்கு விருந்தாளியாக அழைத்திருந்தனர். அவர் அந்த வீட்டிற்குள் வரும் போது எனக்குள் ஒரு மகிழ்ச்சி உண்டானது, என்னவென்றால் அவர் மற்றவர்களில் இருந்து மாறுபட்டுக் காணப்பட்டதை என்னால் உள்ளத்தில் உணர முடிந்தது.

அப்பொழுது நான் அங்கு நின்றவர்களிடம் விசாரிக்க தொடங்கினேன், அவர்கள் சொன்னார்கள் இவர் தான் தாவீதின் குமாரன், இந்த உலகத்திற்கு மனுஷ குமாரனாய் வந்தவர், அதாவது இவரே பரலோகத்தின் அதிபதி, இவர்தான் எல்லா பாத்திரத்தையும் இந்த உலகத்தில் அனுப்பினவர் என்றனர். உடனே எனக்குள் ஒரு ஆவல் உண்டானது எப்படியாவது அவர் என்னை பார்க்க மாட்டாரா? என்று ஆனால் அவர் என்னைக் கண்டு கொள்ளவேயில்லை.

ஆனால் சிலநேரம் கழித்து அந்த வீட்டிலே பெரிய சலசலப்பு உண்டானது, அதாவது அந்த கல்யாண வீட்டிலே திராட்சரசம் இல்லாமல் போனது, உடனே அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம் சென்று முறையிட்டனர், ஆண்டவரே எங்களுக்கு உதவி செய்யும் என்று,

உடனே தேவன் அவர்களுக்கு சொன்ன பதில் உங்களிடம் இருக்கும் பாத்திரங்களை எடுத்து வாருங்கள். உடனே அவர்கள் பொன்னாலும் வெள்ளியினாலும் மற்றும் பிற விலையுயர்ந்த பாத்திரங்களையும் அவரிடத்தில் கொண்டு வந்தனர். உடனே நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்ன பதில், இவர்களுக்கு என்மேல் தாகமில்லை, இவர்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க விரும்புகிறார்கள். இவர்களை பயன்படுத்துவதற்கு என்னால் முடியாது

ஆகவே நீங்கள் சென்று வெளியில் எல்லாராலும் ஒதுக்கிவைக்கப்பட்ட பாத்திரம் ஒன்று இருக்கிறது, அந்த பாத்திரம் அனேக நாட்களாய் என்னை ஏன் தேவபயன் பயன்படுத்தாமால் இருக்கிறார் என்று கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறது, எனவே அந்த பாத்திரமே எனக்கு போதும் ஏனென்றால் அந்த பாத்திரத்தின் தண்ணீர்தான் அனேகருடைய அழுக்கை நீக்குவதற்கு உதவினது என்பதை நான் எப்படி மறக்க முடியும், அதுமட்டுமல்லாமல் இப்படிப்பட்ட பாத்திரத்தைக் கொண்டுதான் என்னால் இந்த கல்யாண வீட்டில் அற்புதத்தை செய்ய முடியும் என்று அவர் சொன்ன போது, ஐயோ நான் மனுஷரால் தள்ளப்பட்டதைக் குறித்து அதாவது இந்த உலகத்தால் வெறுக்கப்பட்டதைக் குறித்து மிகவும் சந்தோஷப்பட்டேன்.

ஏனென்றால் வேதம் சொல்லுகிறது

மனுஷன் முகத்தைப் பார்க்கிறான், அதாவது புறம்பான பேச்சையும் புறம்பான மாய ஜாலத்தையும் பார்த்து மயங்கி விடுகிறான். ஆனால் என் தேவனாகிய இயேசு மாத்திரமே மனுஷருடைய இருதயத்தைப் பார்த்து தம்முடைய பிள்ளைகளை தமக்காக தெரிந்து கொள்கிறார் என்று வேதம், 1 சாம��:7ல் சொல்வதை  நாம் உணரமுடிகிறது.

எனக்குப் பிரியமான பாத்திரங்களே,

இனிமேலாவது மனுஷர் நம்மை பார்க்கவில்லையே என்று கவலைப்படாதீர்கள், ஏனென்றால் நம்முடைய தகப்பன் தம்மை உண்மையாக நேசிக்கிறவர்களைப் பரலோகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆகவே அவருடைய வேளை வரும் வரை காத்திருங்கள் என்று சொல்லி இந்த பாத்திரத்தை நிரப்பியிருக்கிற கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்திரித்து இந்த செய்தியை முடிக்கிறேன்.

-          சகோ. எட்வின்