Tamil Christian Website

Tamil Christian Website

 


Posted on : 15/09/2016

உரையாடல்

 

வாலிபர்: நான் கர்த்தரிடம் ஜெபிக்கிற ஜெபம் என்னவென்றால் இந்த உலகத்தில் உள்ள எல்லா காரியங்களையும் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்?!

முதியவர்: தம்பி அப்படி ஜெபிக்காமல் கர்த்தாவே உம்முடைய கற்பனைகளைக் கற்றுக் கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும் என்று ஜெபிக்கவும்

வாலிபர்: என்னுடைய வாழ்க்கையில் நிறைவேறப் போகிற உலக இலட்சியத்திற்காக காத்திருக்கிறேன்

முதியவர்: தம்மி முதலாவது தேவனுடைய வசனத்திற்காகக் காத்திரு

வாலிபர்: உபத்திரவம் இல்லாத ஒரு வாழ்க்கையை விரும்புகிறேன்

முதியவர்: உண்மையான கிறிஸ்தவர்களுக்கு இந்த உலகத்தில் அனேக உபத்திரவங்கள் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

வாலிபர்: உலகில் உள்ள எல்லா காரியங்களும் எனக்கு ஆறுதலாக நினைக்கிறேன்

முதியவர்: கர்த்தரை தவிர ஒன்றையும் ஆறுதலாக நினைக்காதே

வாலிபர்: என் மனமகிழ்ச்சியெல்லாம் சினிமா பார்ப்பது மற்றும் உலக புஸ்தகங்களை படிப்பதும் ஆகும்

முதியவர்: வேதம் தான் நம்முடைய மனமகிழ்ச்சியாகும்

வாலிபர்: என் எதிரிகள் வெட்கப்பட்டுப் போகும்படி என்னுடைய அறிவை உபயோகப்படுத்துகிறேன்

முதியவர்: தம்பி கர்த்தராகிய இயேசுவின் கட்டளைகளைத் தியானி அப்பொழுது உன்னுடைய எதிரிகள் வெட்கப்பட்டுப் போவார்கள்.

வாலிபர்: என்னுடைய தாலந்தை பார்த்து அனேகர் என்னுடைய நண்பர்களாக மாறி வருகிறார்கள்

முதியவர்: என்னுடைய தாலந்து என்று சொல்லி உன்னை மேன்மைப்படுத்தாமல் எல்லாம் கர்த்தரால் வந்தது என்று சொல்லி அவரை மேன்மைப்படுத்தக் கற்றுக்கொள்

வாலிபர்: அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதே என்னுடைய உயிராய் இருக்கிறது

முதியவர்: கர்த்தருடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே உன்னுடைய உயிராய் இருக்க வேண்டும்

வாலிபர்: நான் அதிக வருஷம் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக என் சரீரத்தை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்

முதியவர்: நம்முடைய மாமிசமெல்லாம் ஒரு பூவைப் போல வாடிப்போகிறது என்பதை மறந்து விட வேண்டாம்

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே நீங்கள் இந்த வாலிபனைப் போல வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்களா? அல்லது

இந்த முதியவர் சொல்லுகிற காரியங்களுக்கு உங்களை ஒப்புக் கொடுத்திருக்கிறார்களா? சிந்தியுங்கள்

யாருடைய வழியைப் பின்பற்றப் போகிறீர்கள்

1.வாலிபரின் வழி இந்த உலகத்தோடு முடிவடைந்துப் போகிறது.

2.ஆனால் முதியவரின் வழியோ நித்திய ஜீவன் வரைக்கும் செல்லுகிறது......


Posted on : 15/09/2016

ஏன் வேதத்தைப் படிக்க வேண்டும்???

 

1.ஜென்ம மற்றும் மாமிச சுபாவங்களை மாற்ற வேண்டுமானால் நமக்கு ஆவிக்குரிய பெலன் வேண்டும் -    1கொரி 3:1-2

2.நாம் குழந்தையைப் போல இராதப்படி ஆவிக்குரிய முதிர்ச்சியை அடைய வேண்டும் -    எபி 5:12-14

3.வெட்கப்படாத ஊழியக்காரனாய் ஆவிக்குரிய வாழ்க்கையில் பயணம் செய்ய வேண்டும். -    1தீமோத்தேயு 5:17

4.குற்றம் சாட்டப்படாத ஒரு நல்ல சாட்சியுள்ள வாழ்க்கையை சமுதாயத்தில் கிறிஸ்துவின் முன்பாக வாழ வேண்டும். -    1தீமேத்தேயு 5:17

5.நற்குணசாலிகள் என்கிற பட்டத்தை பெற வேண்டும். -    அப்போஸ்தலர் 17:11

6.பிசாசை எதிர்த்து போராட வேண்டும். -    எபேசியர் 6:11,17

7.நாம் பிழைத்து நித்திய ஜீவன் வரைக்கும் உயிர் வாழ வேண்டும். -    மத்தேயு 4:4

8.கர்த்தருடைய ஆவி எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். -    ஏசாயா 34:16

9.வானத்தின் நட்சத்திரங்களைப் போல இவ்வுலகில் மாத்திரமல்ல மறுமையிலும் பிரகாசிக்க வேண்டும். -    2பேதுரு 1:19

10.தெளிவான மற்றும் சரியான சத்தியத்தை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். -    மத்தேயு 17:2-5

11.தேவ மகத்துவத்தை காண வேண்டும். -    2பேதுரு 1:16-18

12.பாக்கியவான்களாக வாழ வேண்டும். - வெளி 1:3

13.எல்லாவற்றையும் அதாவது இனி சம்பவிக்கப் போகிறவைகளையும் முந்தி சம்பவித்ததையும் அறிந்து கொள்ள வேண்டும். - ஏசாயா 41:22-23

14.கர்த்தரே தெய்வம் என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். - ஏசாயா 46:9-10

குறிப்பு: வேதம் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மெனு கார்டு ஆகும் அவருக்கு எவைகள் பிடிக்கும் எவைகள் பிடிக்காதது என்பதை அறிந்து கொள்ள உதவும் ஜீவ புஸ்தகம் ஆகும்.

 


Posted On: 10/08/2016

வேதம்

 

* பசியாயிருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் மன்னா

* குழந்தையாய் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் பால்

* தாகமாயிருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் ஜீவ தண்ணீர்

* நோயினால் கஷ்டப்படுகிறவர்களுக்கு கொடுக்கப்படும் ஒளஷதம்

* மரித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு தரப்படும் நித்திய ஜீவன்

* தரித்திரருக்கு கொடுக்கப்படும் பொக்கிஷம்

* தனிமையானவர்களுக்கு தரப்படும் மெய்யான ஆறுதல்

* பிணியாளிகளுக்கு அனுப்பப் படும் வைத்தியர்

* பாவிகளுக்கு கொடுக்கப்படும் இரட்சிப்பு

* பரிசுத்தமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் ஜீவ கிரீடம்

* குருடராய் இருக்கிற கிறிஸ்தவர்களுக்கு தரப்படும் சத்தியம்

* பணமில்லாதவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் அன்பு

* காத்திருக்கிறவர்களுக்கு தரப்படும் செட்டைகள்

* பயப்படுகிறவர்களுக்கு கொடுக்கப்படும் ஞானம்

* ஜெபிக்கிறவர்களுக்கு கொடுக்கப்படும் வழிகாட்டி

* இருளில் இருக்கிறவர்களுக்கு கொடுக்கப்படும் விளக்கு

* இயேசுவை தெய்வமாய் கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் அழியாத       பரிசு     

                                        இப்படிக்கு

                           பரிசுத்த, சத்திய மற்றும் அன்பு வேதாகமம்    

 


வாலிபரும் முதியோரும் உரையாடுதல்

 

வாலிபர்: ஐயா நான் இந்த உலகத்தில் அதிக பணம் சம்பாதித்து பெரிய பணக்காரனாக மாற வேண்டும்

முதியோர்: தம்பி கர்த்தருடைய வேதத்தின்படி யாரெல்லாம் நடக்கிறார்களோ அவர்களே உணமையான பணக்காரன்

வாலிபர்: என்னுடைய பெலத்தையெல்லாம் இந்த உலகத்தில் பயன்படுத்தி எப்படியாவது இந்த உலகத்தில் காணப்படும் எல்லா வழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

முதியோர்: உன்னுடைய பெலத்தையெல்லாம் தேவனுடைய பிரமாணங்களைக் கற்று கொள்ள பயன்படுத்தினால் நலமாயிருக்கும்

வாலிபர்: தேவனைத் துதிப்பதற்கு ஆலயத்திற்கு சென்றால் போதும்

முதியோர்: செம்மையான இருதயம் நிச்சயமாக தேவனைத் துதிப்பதற்கு வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் ஆலயம் சென்று தேவனைத் துதிப்பதினால் எந்த ஒரு பயனும் இல்லை

வாலிபர்: நான் எப்பொழுதும் குளித்து சுத்தமாக என்னுடைய சரீரத்தை வைத்திருக்கிறேன்

முதியோர்: தேவனுடைய வசனமே ஒரு மனுஷனை சுத்தப்படுத்துகிறது என்பதை மறந்து விடாதே

வாலிபர்: நான் இந்த உலகத்தில் காணப்படும் செல்வத்தில் களிகூர விரும்புகிறேன்

முதியோர்: கர்த்தருடைய சாட்சிகளே ஒரு மனுஷனை களிகூரச் செய்கிறது என்பதை மறந்து விடாதே.

வாலிபர்: என் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதற்கு தியானம் பண்ணுகிறேன்.

முதியோர்: கர்த்தருடைய கட்டளைகளைத் தியானிப்பது உடலுக்கு நல்லது

வாலிபர்: என்னுடைய ஜெபம் எல்லாம் நான் பிழைத்து இந்த உலகத்தில் உள்ள எல்லா காரியங்களையும் அனுபவிக்க வேண்டும் என்பதே

முதியோர்: நம்முடைய ஜெபம் எல்லாம் நாம் பிழைத்து தேவனுடைய வசனங்களை கைக்கொள்ள வேண்டும் என்பதாக இருக்க வேண்டும்

வாலிபர்: இந்த உலகத்தில் காணப்படுகிற எல்லா அதிசயங்களையும் எப்படியாவது பார்க்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசையாய் இருக்கிறது

முதியோர்: தம்பி உன்னுடைய குறிக்கோள் எப்படியிருக்க வேண்டும் என்றால் ஆண்டவரே நான் உம்முடைய வேதத்தில் உள்ள அதிசயங்களை பார்க்க வேண்டும் என்பதாக அமைய வேண்டும்.

வாலிபர்: பூமியில் உள்ள அனேக இடங்களுக்கு நான் சொந்தக்காரராக மாற வேண்டும்

முதியோர்: தம்பி, நாம் பூமியிலே பரதேசி என்பதை மறக்க வேண்டாம். பரலோகம் தான் நம்முடைய சொந்த ஊராகும்.

வாலிபர்: இந்த உலகத்தில் உள்ள பொல்லாத வழிகள் மற்றும் குறுக்கு வழிகளை அடையாளம் கண்டு கொள்ளும்படியாக அனேக புஸ்தகங்களைப் படிக்கிறேன்

முதியோர்: இந்த உலகத்தில் உள்ள பொல்லாத வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் வேதம் நமக்கு அவசியம் என்பதை மறக்க வேண்டாம்.

இந்த உரையாடல் மூலம் அனேக காரியங்களை கற்றுக் கொண்டிருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன்.


ஒளஷதங்கள்

 

1. உலகத்தில் இருக்கிறவைகளைப் பார்த்து ஆச்சரியப்படாதீர்கள் ஏனென்றால் மாயை மாயை எல்லாம் மாயை என்பதை மறந்து விடாதீர்கள் பிரசங்கி 1:2

2. தேவன் நம்முடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய் செய்து கொடுப்பார், ஆகவே ஒன்றையும் குறித்து கவலைப் படாதிருங்கள் பிரசங்கி 3:11

3. முதலாவது தேவனுக்கு பயந்திருக்க பழகிக் கொள்வோம், அப்பொழுது மாத்திரமே தேவ பக்தி நமக்குள் அதிகரிக்கும் பிரசங்கி 5:7

4. நம்முடைய வாழ்க்கையின் துவக்கம் எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டாம் நம்முடை முடிவு எப்படி இருக்கப் போகிறது என்பதை சிந்தியுங்கள் பிரசங்கி 7:8

5.அனேக நன்மைகள் தேவனிடம் இருந்து வருவதற்கு தடையாக இருப்பது நம்முடைய பாவம் ஆகும் பிரசங்கி 9:18

6.நல்ல நேரம் மற்றும் சாதகமான சூழ்நிலை எப்பொழுது வரும் என்று காத்திருக்க வேண்டாம், உன் ஆகாரத்தைத் தண்ணீர் மேல் போடு அனேக நாட்களுக்குப் பின் அதின் பலனை நிச்சயமாக காண்பேன் என்று விசுவாசமாய் இரு பிரசங்கி 11:1

7. ஞானத்திற்காகவும் அறிவிற்காகவும் இன்பத்திற்காகவும் ஓடாதே தேவனுடைய பார்வைக்கு நல்லவனாய் இரு அப்பொழுது எல்லாம் உங்களுக்கு கொடுக்கப்படும் பிரசங்கி 2:26

8.தேவ ஐக்கியத்தை விட்டுவிடாதே அதாவது பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்கிற ஐக்கியத்தை விட்டுவிடாதே ஏனென்றால் முப்புரி நூல் சீக்கிரமாய் அறாது பிரசங்கி 4~12

9.நாம் பிறப்பதற்கு முன்னமே நம்முடைய பெயரை தேவன் தம்முடைய புஸ்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார், ஆகவே உன்னுடைய பெயரின் அர்த்தம் தெரிய வேண்டுமானால் வேத புஸ்தகத்தைத் திருப்பி பார் பிரசங்கி 6:10

10.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய வார்த்தை மாத்திரம் நமக்கு தராமல் அதனோடு தம்முடைய அதிகாரத்தையும் நமக்கு அளித்திருக்கிறார் பிரசங்கி 8:4

11.ஒவ்வொரு நாளும் ஆவிக்குரிய ஆயுதத்தை ஜெபத்தின் மூலமாக தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது மாத்திரமே அவைகள் மிகவும் கூர்மையாக இருக்கும் பிரசங்கி 10:10

12.எதை மறந்தாலும் உன் சிருஷ்டிகரை நினைப்பதற்கு ஒருபோதும் மறந்து விடாதே, ஏனென்றால் நாம் சிருஷ்டிகரை நினைக்காதப் பட்சத்தில் பிசாசானவன் நம்மை நினைத்து விடுவான் பிரசங்கி 12:1

 


தேவனாகிய இயேசு எங்கெல்லாம் வாசம் செய்கிறார்??

 

1.தேவனுடைய நாமத்தை பிரஸ்தாபப்படுத்தும் இடத்தில் யாத் 20:24

2.இரண்டுபேராவது மூன்று பேராவது இயேசுவின் நாமத்தினாலே கூடுகிற இடத்தில் மத் 18:19

3.முழு இருதயத்தோடு தேடுகிற இடத்தில் எரே 29:13

4.தேவனுடைய சத்தத்தை கேட்கிறவர்களிடத்தில் வெளி 3:20

5.தேவனுக்காக வாசலை திறந்து வைத்திருக்கிற இடத்தில் வெளி 3:20

6.ஒருமனப்பட்டு ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருக்கிற இடத்தில் அப்போஸ்தலர் 1:14

7.தேவனுடைய வசனத்தை கருத்தாய் உட்கொள்கிறவர்களிடத்தில் அப் 10:44

8.தேவனைத் துதித்துப்பாடுகிற இடத்தில் அப் 16:25,26

9.தேவனை விசுவாசிக்கிற இடத்தில் அப் 16:31

10.தேவனை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட இடத்தில் யோவான் 1:12

11.ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்கிற இடத்தில் யோவான் 3:5

12.தேவனுடைய கடிந்துகொள்ளுதலுக்கு திரும்புகிறவர்களிடத்தில் நீதி 1:23

13.அதிகாலையில் தேவனைத் தேடுகிறவர்களிடத்தில் நீதி 8:17

14.கர்த்தரை நம்புகிறவர்களிடத்தில் நீதி 28:25, நீதி 29:25

15.சாந்தகுணமுள்ளவர்கள் இருக்கிற இடத்தில் சங் 147:6

16.கர்த்தருக்குப் பயந்தவரகளிடத்தில் சங் 147:11

17.கர்த்தருக்காக காத்திருக்கிறவர்களிடத்தில் சங் 147:11, ஏசாயா 40:31

18.உண்மையாக கர்த்தரை நோக்கி கூப்பிடுகிற இடத்தில் சங் 145:18

19.கர்த்தரிடத்தில் அன்புகூருகிறவர்களிடத்தில் சங் 145:20

20.மனந்திரும்புகிற இடத்தில் மத் 4:17

21.தேவனுடையக் கதவைத் தட்டுகிறவர்களிடத்தில் மத் 7:7

22.தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுகிற இடத்தில் மத் 6:33

23.இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறவர்களிடத்தில் யோவான் 14:14

24.தாழ்மையான இடத்தில் ஏசாயா 44:3, 55:1

25.இருதயத்தில் சுத்தமுள்ளவர்களிடத்தில் மத் 5:8

26.இரவும் பகலும் உபவாசித்து ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கிற இடத்தில் லூக்கா 2:37,38

28.கர்த்தருடைய மாமிசத்தையும் இரத்தத்தையும் பானம் பண்ணுகிறவர்களிடத்தில் யோவான் 6:56

29.பிதாவின் சித்தம் செய்கிற இடத்தில் மத்தேயு 7:21

30.தேவனை அழைக்கிற இடத்தில் யோவான் 2:1

31.தேவனுடைய வார்த்தைகள் இருக்கிற இடத்தில் யோவான் 15:7

32.தேவனைக் கனம்பண்ணுகிறவர்கள் இடத்தில் 1சாமுவேல் 2:30  

 


குணமடையும் வழிகள்

 

1.இயேசுவின் இரத்தத்தால் குணமடைகிறோம்

2.இயேசுவின் தழும்புகளால் குணமடைகிறோம்

3.இயேசுவின் வார்த்தைகளால் குணமடைகிறோம்

4.இயேசுவின் அன்பினால் குண்மடைகிறோம்

5.இயேசுவின் ஆவியினால் குணமடைகிறோம்

6.இயேசுவின் நாமத்தினால் குணமடைகிறோம்

7.இயேசுவின் கட்டளைகளால் குணமடைகிறோம்

8.இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தால் குண்மடைகிறோம்

9.இயேசுவுக்கு கீழ்ப்படிவது மூலம் குணமடைகிறோம்

10.இயேசுவின் வஸ்திரத்தை தொடும் போது குணமடைகிறோம்

11.இயேசுவை துதிப்பது மூலம் குணமடைகிறோம்

12.இயேசுவை நோக்கி ஜெபம் செய்வது மூலம் குணமடைகிறோம்

                   - குணமாக்குகிற வேதாகமம்

 


சப்தங்கள்

தேவனுடைய சப்தம்:

1.நன்மை தீமை அறியத்தக்க கனியை புசிக்க வேண்டாம்

2.சத்துருக்களை நேசியுங்கள் அவர்கள் செய்த தவறை மன்னியுங்கள்

3.நம்பிக்கை உண்டாகும்

4.நன்மை மாத்திரம் பரலோகத்திலிருந்து வருகிறது.

5.தைரியம் உண்டாகிறது.

மனுஷருடைய சப்தம்:

1.நன்மை தீமை என்கிற கனியிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்

2.சத்துருவை வெறுக்க வேண்டும், அவன் தண்டிக்கப்பட வேண்டும்

3.சந்தேகம் உண்டாகும்

4.நன்மை தீமை இரண்டுமே தேவனால் உலகத்தில் உண்டானது.

5.பலவீனம் உண்டாகிறது

பிசாசின் சப்தம்:

1.நன்மை தீமை என்கிற கனியை புசிக்க வேண்டும் அப்பொழுது தேவர்களைப் போல மாறிவிடுவீர்கள்

2.சத்துருவை கொன்று போட வேண்டும்

3.குழப்பம் உண்டாகிறது

4.நன்மை தீமை இரண்டுமே தேவனால் அனுபவிப்பதற்கு உண்டாக்கப்பட்டது.

5.பயம் உண்டாகிறது

 


கர்த்தராகிய இயேசு கிறிஸ்து

 

ஆவிக்குரிய வீடு அசையாமல் இருப்பதற்கான கன்மலை

எதிரிகளின் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்குகிற கோட்டை

பாவத்தின் கறையை மாற்றுகிற இரட்சகர்

எதிரிகளின் ஆயுதங்களை மழுங்கலாக மாற்றுகிற கேடகம்

தம்மை நம்புகிறவர்களுக்கு செழிப்பு

களையை பிடுங்கி எறிகிற இரட்சணிக் கொம்பு

தேவனுடைய ஆலயமாகிய நாம் இடியாமல் இருப்பதற்கான உயர்ந்த அடைக்கலம்

இருளை அகற்றி வெளிச்சத்தைத் தருகிற விளக்கு

பலத்தால் இடைகட்டுகிற கச்சை

யுத்தத்தை பழக்குவிக்கிற சேனைகளின் கர்த்தர்

தாழ்ந்து போகிறவர்களை பெரியவனாய் மாற்றுகிற காருணியம்

மரித்தோரை உயிர்ப்பிக்கிற ஜீவனுள்ளவர்

கால்கள் வழுவாதப்படிக்கு நடக்கச் செய்கிற அகலமான பாதை

 


உலகத்திலும், பரலோகத்திலும் பாக்கியவான்களாக வாழ்வதற்கு வேதம் தரும் அறிவுரைகள் என்னவென்று பார்ப்போம்

 

1.கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிறவர்கள்

2.கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாயிருக்கிறவர்கள், சங் 1:2

3.கர்த்தரை அண்டிக்கொள்ளுகிறவர்கள், சங் 2:12

4.கர்த்தரை நம்புகிறவர்கள், சங் 84:12

5.கர்த்தருடைய வீட்டில் வாசமாயிருப்பவர்கள், சங் 84:4

6.கர்த்தரில் பெலன் கொள்ளுகிறவர்கள்

7.கர்த்தருடைய வழிகளில் நடக்கிறவர்கள், சங் 84:5, சங் 128:1

8.கர்த்தருடைய பிரகாரங்களில் வாசமாயிருக்கிறவர்கள், சங் 65:4

9.கர்த்தரை தெய்வமாய்க் கொண்டவர்கள்

10.கர்த்தர் தமக்குச் சுதந்தரமாய் தெரிந்து கொண்டவர்கள், சங் 33:12

11.கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள், ஏசாயா 30:18

12.கர்த்தரை ருசிப்பார்க்கிறவர்கள், கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருப்பவர்கள், சங் 34:8

13.கர்த்தருடைய வேதத்தைக் கொண்டு போதிக்கிறவர்கள், சங் 94:13

14.கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள்

15.கர்த்தருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிறவர்கள், சங் 112:1

16.கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிறவர்கள், சங் 119:1

17.கர்த்தருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு நடக்கிறவர்கள்,

18.கர்த்தரை முழு இருதயத்தோடும்  தேடுகிறவர்கள், சங் 119:2

19.கர்த்தருடைய அம்புகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பினவர்கள், சங் 127:6

20.கர்த்தரைக் தன் துணையாகக் கொண்டிருக்கிறவர்கள், சங் 146:5

21.கர்த்தரால் தண்டிக்கப்படுகிறவர்கள், சங் 5:17

22.கர்த்தருடைய வேதத்தைக் காக்கிறவர்கள், நீதி 29:18

23.கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கிறவர்கள், னீதி 328:14

24.கர்த்தருடைய புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக் கொள்ளுகிறவர்கள், வெளி 22:7

25.கர்த்தருடைய கற்பனைகளின் படி செய்கிறவர்கள், வெளி 22:14

26.கர்த்தருடைய வாசற்படியில் விழித்திருக்கிறவர்கள் கர்த்தருடைய கதவு நிலையருகே காத்திருக்கிறவர்கள் கர்த்தருக்குச் செவிக்கொடுக்கிறவர்கள், நீதி 8:34

27.கர்த்தர் நிமித்தம் இடறல் அடையாதிருக்கிறவர்கள், லூக்கா 7:23, மத் 11:6

28.கர்த்தராகிய இயேசுவை காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள், யோவான் 20:29

29.கர்த்தர் வரும்வரை உண்மையாக இருகிறவர்கள், மத் 24:46

30.கர்த்தர் நிமித்தம் துன்பப்படுகிறவர்கள், மத் 5:11, 1போது 4:14

31.கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள், வெளி 14:13

32.கர்த்தர் வரும்வரை தன் வஸ்திரங்களைக் காத்துக் கொள்ளுகிறவர்கள், வெளி 16:15

33.கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு அதைக் காத்துக் கொள்ளுகிறவர்கள், லூக் 11:28

34.கர்த்தர் வரும் வரை விழித்துகிறவர்கள், லூக் 12:37, லூக் 12:43

35.கர்த்தர் நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவர்கள், ரோமர் 14:22

 


தேவனுடைய பலம்

 

1.அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் 2ராஜாக்கள் 6:16

2.பாடித் துதி செய்யத் தொடங்கின போது எதிரிகள் விழுந்தனர் 2நாளாகமம்2 0:22

3.ஒரே மனுஷனை முறியடிப்பது போல மீதியானியரை முறியடித்தல் நியாயா 6:16

4.கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீங்கள் சும்மாயிருப்பீர்கள் யாத் 14:14

5.அனேகம் பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும் ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை 1சாமு 14:6

6.உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் 1யோவான் 4:4

7.தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும் 1யோவான் 5:4

8.உன் பக்கத்தில் ஆயிரம் பேரும் உன் வலது புறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் அது உன்னை அணுகாது சங் 91:7


கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யாருக்கு கிரீடம் சூட்டுகிறார்??

 

1.கர்த்தருடைய கையில் அடங்கி இருக்கிறவர்களுக்கு

2.சோதனையை சகிக்கிறவர்களுக்கு

3.உத்தமமாய் வாழ்கிறவர்களுக்கு

4.மரணபரியந்தம் உண்மையாய் இருப்பவர்களுக்கு

5.தனக்கு தேவன் கொடுத்ததை கடைசி வரை பாதுகாக்கிறவர்களுக்கு

6.நீதியின் வழியில் நடக்கிறவர்களுக்கு

7.பரிசுத்த ஸ்தலத்தில் குடியிருப்பவர்களுக்கு

8.தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்த குலைச்சலாக்காதவர்களுக்கு

இவர்களுக்கு கீரிடம் சூட்டவே நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வரப் போகிறார்.

 


கர்த்தருக்கு யாரெல்லாம் பயப்படுகிறார்களோ அவர்களுக்கு மாத்திரமே கீழே சொல்லப்பட்ட வாக்குத்தத்தங்களுக்கு சொந்தமாகும் உரிமை வழங்குகிறது வேதம்

கர்த்தருக்குப் பயப்படும் பயம்

 

1.ஞானத்தைத் தருகிறது, சங் 111:10

2.பாக்கியவான் பட்டத்தைத் தருகிறது, சங் 128:1

3.ஆயுசு நாட்கள் பெருகுகிறது, நீதி 10:27

4.திட நம்பிக்கையைத் தருகிறது மற்றும் பிள்ளைகளுக்கு அடைக்கலம் தருகிறது, நீதி 14:26

5.ஜீவ ஊற்று உருவாகிறது, மரண கண்ணிகளுக்குத் தப்புவிக்கிறது, நீதி 14:27

6.நம்மை தேவனுக்கு உகந்த வாசனையாய் மாற்றுகிறது, ஏசா 11:3

7.இரக்கம் கிடைக்கிறது, லூக் 1:50

8.ஜீவன் உண்டாகிறது, திருப்தி வருகிறது, தீமை நெருங்குவதில்லை, நீதி 19:23

9.ஐசுவரியம் வருகிறது, மகிமை ஏற்படுகிறது, ஜீவன் வருகிறது, நீதி 22:4

10.கர்த்தருடைய வழி வெளியாகுகிறது, சங் 25:12

11.பரலோக இரகசியம் மற்றும் தெய்வீக உடன்படிக்கை வெளிப்படுகிறது, சங் 25:14

12.பொக்கிஷம் கிடைக்கிறது, ஏசாயா 33:6

13.மரணத்திற்கு விலக்கிப் பாதுகாக்குகிறது, பஞ்சத்தில் உயிரோடு பாதுகாக்குகிறது, சங் 33:18,19

14.கர்த்தருடைய கிருபை வருகிறது, சங் 103:11

15.கர்த்தரின் பிரியம் கிடைக்கிறது, சங் 147:11

16.நம்முடைய விருப்பம் நிறைவேற்றப்படுகிறது, நம்முடைய கூப்பிடுதல் கேட்கப்படுகிறது, நமக்கு இரட்சிப்பு வருகிறது, சங் 145:19

17.நாம் பரிசுத்தப்படுத்தப்படுகிறோம் மற்றும் நிலைப்படுத்தப்படுகிறோம்,  சங் 19:9

18.துதியைக் கற்றுத் தருகிறது, மற்றும் கனம் பண்ணுதலை கற்றுத் தருகிறது, சங் 22:23

19.குறைவுகள் மாறுகிறது, சங் 34:9

20.ஆகாரம் கிடைக்கிறது, உடன்படிக்கை நினைவு கூறப்படுகிறது, சங் 111:5

21.ஆசீர்வாதம் உண்டாகிறது, சங்கீதம் 115:13

 


Posted On: 15/04/2016

வார்த்தை யோவான் 1 : 1

        வெறுமையை நிரப்புகிறது

        ஒழுங்கின்மையை நேராக்குகிறது

        இரவை பகலாய் மாற்றுகிறது

        மண்ணை மனுஷனாக்குகிறது

        பாவத்தை அறியச் செய்கிறது

        சாபத்தை ஆசீர்வாதமாக்குகிறது

        நோயை குணமாக்குகிறது

        அழுக்கை கழுவுகிறது

        புறஜாதியரை இஸ்ரவேலராய் மாற்றுகிறது [ தேவ பிள்ளை ]

        அந்நியரை சொந்தமாக்குகிறது

        கடினத்தை கரையச் செய்கிறது

        மறைவை வெளியாக்குகிறது

        கசப்பை மதுரமாக்குகிறது

        துன்பத்தை சந்தோஷமாக்குகிறது

        காத்திருப்பை புதுபெலனாக்குகிறது

        வறட்சியை செழிப்பாக்குகிறது

        சத்துருவை சினேகிதனாக்குகிறது

        பேதையை ஞானியாக்குகிறது

        தோல்வியை வெற்றியாக்குகிறது

        ஜெபத்தை மொழியாக்குகிறது

        இரக்கத்தை இரட்சிப்பாக்குகிறது

        பாவத்தை மன்னிக்கிறது

கடைசியாக,

        நீதியை வெளிப்படுத்துகிறது

        மரணத்தை ஜெயமாக்குகிறது.

 


Posted on : 15/04/2015

கர்த்தருடைய வார்த்தை (சங்கீதம்:119)

சங்கீதம் 119 லிருந்து கர்த்தருடைய வார்த்தை என்கிற தலைப்பில் சில காரியங்களை இங்கு தந்துள்ளேன்

.கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:

 

கர்த்தருடைய வார்த்தை: 1. பாக்கியவான்களாக மாற்றுகிறது [சங் 119:1,2]

2.வெட்கப்பட்டு போவதில்லை [சங் 119:6]

3.செம்மையான இருதயம் உருவாகிறது [சங் 119:7]

4.துதியைக் கற்றுத் தருகிறது [சங் 119:7 மற்றும் 171]

5.பரிசுத்தம் உண்டாகிறது [சங் 119:9]

6.பாவஞ் செய்யாதப்படி தடுக்கப்படுகிறது [சங் 119:11]

7.களிகூறுதல் ஏற்படுகிறது [சங் 119:14]

8.இன்பமும் ஆலோசனையும் வருகிறது [சங் 119:24]

9.மரித்தவர்களை உயிர்ப்பிக்கிறது [சங் 119:25]

10.விழுந்தவர்களை எழும்பச் செய்கிறது [சங் 119:28]

11.பொய் வழி நீங்குகிறது [சங் 119:30]

12.மெய் வழி உருவாகிறது [சங் 119:30]

13.தேவனுக்குப் பயப்படும் பயம் உண்டாகிறது [சங் 119:38]

14.தயவும் இரட்சிப்பும் வருகிறது [சங் 119:41]

15.விசாலமான இடம் உண்டாகிறது [சங் 119:45]

16.நம்பிக்கை உண்டாகிறது [சங் 119:49]

17.ஆறுதல் வருகிறது [சங் 119:76]

18.தனிமை கீதங்களாக மாறுகிறது [சங் 119:54]

19.இரக்கம் வருகிறது [சங் 119:58]

20.கிருபை வருகிறது [சங் 119:64]

21.உத்தம நிதானிப்பும் அறிவும் வருகிறது [சங் 119:66]

22.தேவனுடைய பிள்ளைகளின் நட்பு கிடைக்கிறது [சங் 119:74]

23.மன மகிழ்ச்சி வருகிறது [சங் 119:77]

24.துக்கம் மாறுகிறது [சங் 119:92]

25.ஞானம் உண்டாகிறது [சங் 119:98]

26.அறிவு உண்டாகிறது [சங் 119:99]

27.வாயானது இனிமையானவைகளைப் பேசச் செய்கிறது. [சங் 119:103]

28.கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது [சங் 119:105]

29.பேதைகளை உணர்வுள்ளவர்களாக்குகிறது [சங் 119:130]

30.சுத்தமான வாழ்க்கை வாழச் செய்கிறது [சங் 119:140,138]

31.சத்தியத்தை தருகிறது [சங் 119:142]

32.உண்மையான சம்பவங்களை வெளிப்படுத்துகிறது [சங் 119:151]

33.சமாதானம் கிடைக்கிறது [சங் 119:165]

34.இடறல் வருவதில்லை [சங் 119:165]

35.விடுதலை உண்டாகிறது [சங் 119:170]

36.தேவன் நமக்கு துணையாயிருக்கிறார் [சங் 119:173]

.கர்த்தருடைய வார்த்தையை நேசிக்க வேண்டுமானால் நாம் வெறுக்க வேண்டிய காரியங்கள்?

1.பாவத்தை வெறுக்க வேண்டும் [119:11]

2.உலகத்தை வெறுத்தல் [119:19]

3.பொருளாசையை வெறுத்தல் [119:36]

4.மாயையை வெறுத்தல் [119:37]

5.அகந்தையை வெறுத்தல் [119:51]

6.துன்மார்க்கத்தை வெறுத்தல் [119:53]

7.பொய்களை வெறுத்தல் [119:69,128,163]

8.தூக்கத்தை வெறுத்தல் [119:62,148]

9.உலக உணவின் மேல் இருக்கிற ஆசையை வெறுத்தல் [119:70]

10.அனேகமாயிரம் பொன் வெள்ளியை வெறுத்தல் [119:72]

11.உலக ஞானத்தையும் அறிவையும் வெறுத்தல் [119:97-104]

12.வீண் சிந்தனைகளை வெறுத்தல் [119: 113]

13.கர்த்தருடைய பிரமாணங்களை விட்டு வழி விலகுகிறவர்களை வெறுத்தல் [119:118]

14.பொன்னையும் பசும் பொன்னையும் வெறுத்தல் [119:127]

15.அநியாயத்தை வெறுத்தல் [119:133]

16.தேவனுடைய வசனத்தைக் காத்துக் கொள்ளாத துரோகிகளை வெறுத்தல் [119:158]

.கர்த்தருடைய வார்த்தையின் முக்கியத்துவம் என்ன?

1.பரிசுத்தமாயிருக்கிறது [119:9]

2.அதிசயமாயிருக்கிறது [119:18]

3.இன்பமாயிருக்கிறது [119:24]

4.உயிராயிருக்கிறது [119:25]

5.வழியாயிருக்கிறது [119:32]

6.ஆறுதலாயிருக்கிறது [119:50]

7.மகிழ்ச்சியாயிருக்கிறது [119:77]

8.அழியாததாயிருக்கிறது [119:89]

9.விஸ்தாரமானது [119:96]

10.மதுரமாயிருக்கிறது [119:103]

11.தீபமாயிருக்கிறது [119:105]

12.வெளிச்சமாயிருக்கிறது [119:105]

13.நீதியாயிருக்கிறது [119:123]

14.சுத்தமாயிருக்கிறது [119:140]

15.சத்தியமாயிருக்கிறது [119:142,160]

16.உண்மையாயிருக்கிறது [119:151]

17.சமாதானமாயிருக்கிறது [119:165]

.கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் நாம் செய்ய வேண்டிய ஜெபம்

 

1.முற்றிலும் என்னைக் கைவிடாதேயும் [119:8]

2.என்னை உமது கற்பனைகளை விட்டு வழி தப்ப விடாதேயும் 119:10]

3.உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும் [119:17]

4.வேதத்திலுள்ள அதிசயங்களைப் பார்க்கும்படிக்கு கண்களைத் திறந்தருளும் [119:18]

5.நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டகற்றும் [119:22]

6.உமது வசனத்தின் படி ஆத்துமாவை உயிர்ப்பியும் [119:25]

7.உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும் [119:27]

8.பொய் வழியை என்னை விட்டு விலக்கியருளும் [119:27]

9.நீர் என் இருதயத்தை விசாலமாக்கும் [119:32]

10.உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும் [119:35]

11.எனக்கு உணர்வைத் தாரும் [119:34]

12.பொருளாசையை என் இருதயத்திலிருந்து அகற்றும் [119:36]

13.மாயையைப் பாராதப்படி என் கண்களை விலக்கியருளும் [119:37]

14.நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும் [119:39]

15.உமது தயவும் இரட்சிப்பும் எனக்கு வருவதாக [119:41]

16.சத்திய வசனம் என் வாயினின்று நீங்கவிடாதேயும் [119:43]

17.நீர் என்னை நம்பப் பண்ணின வசனத்தை அடியேனுக்காக நினைத்தருளும் [119:49]

18.எனக்கு இரக்கம் செய்யும் [119:58]

19.உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும் [119:66]

20.உமது கிருபை என்னைத் தேற்றுவதாக [119:76]

21.நான் வெட்கப்பட்டுப் போகாதப்படிக்கு செய்யும் [119:116]

22.உமது அடியேனுடைய நாட்கள் எம்மாத்திரம் [119:84]

23.என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நியாயத்தீர்ப்பு செய்யும் [119:84]

24.நான் உம்முடையவன் என்னை இரட்சியும் [119:94]

25.என்னை ஒடுக்குகிறவர்களுக்கு ஒப்புக்கொடாதேயும் [119:121]

26.உமது அடியேனுக்கு நன்மையாகத் துணை நில்லும் [119:122]

27.என் வாயை ஆவென்று திறந்து உம்முடைய வார்த்தைகளுக்காக ஏங்குகிறேன் [119:131]

28.ஒரு அநியாயமும் என்னை ஆள வொட்டாதேயும் [119:133]

29.மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும் [119:134]

30.உமது அடியேன் மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப் பண்ணும் [119:135]

31.என் உபத்திரவத்தைப் பார்த்து என்னை விடுவியும் [119:153]

32.எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக் கொள்ளும் [119:154]

33.என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது [119:168]

34.என் கூப்பிடுதல் என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக [119:169,170]

35.காணாமற் போன ஆட்டைப் போல வழி தப்பிப் போனேன் உமது அடியேனைத் தேடுவீராக [119:176]

குறிப்பு: வானமும் பூமியும் ஒழிந்து போம் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை மாற்கு 13:31

புல் உலர்ந்து பூ உதிரும் நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் ஏசாயா 40:8

 

 

 


Posted on: 06/02/2016

 

இயேசு கிறிஸ்துவினுடைய வம்சவரலாற்றின் சிறப்பம்சம்

 

விசுவாசிகளின் தகப்பன்                                : ஆபிரகாம்

ஜெபவீரர்கள்                                            : ஈசாக்கு, எசேக்கியா

தேவனோடும், மனுஷரோடும் போராடினவன்   : யாக்கோபு

துதியின் சப்தம்                                 : யூதா

தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவன்         : தாவீது

ஞானம் ஆரம்பிக்கப்பட்ட இடம்                 : சாலமோன்

இரக்கத்தின் பிறப்பிடம்                         : போவாஸ்

கர்த்தரின் பார்வைக்கு குளிர்ச்சியானவன்               : யோசபாத்

நீதியாய் செயல்பட்டவள்                                : தாமார்

தேவனுடைய பிள்ளையாய் மாறினவள் (அடைக்கப்பட்ட வாசலைத் திறந்தவள்): ராகாப்

நற்குணசாலி                                           : ரூத்

தேவனுடைய வீட்டைத் தேடி வந்தவள்         : பத்சேபாள்

பரிசுத்தமானவள்                                       : மரியாள்

 

                              

சர்வாயுதவர்க்கங்கள்:

1.         சத்தியம் என்னும் கச்சை

8

ஆவிக்குரிய வாழ்க்கை என்கிற ஆடை பாதிக்கப்படக்கூடாது அதாவது உலகம் என்கிற நிலத்தில் விழுந்து அழுக்காகி விடக்கூடாது என்பதற்காகவும் மற்றும் எல்லாவற்றையும்(ஆவிக்குரிய பிற காரியங்களை) சரியான நிலையில் வைத்திருப்பதற்காகவும் தேவனால் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ஆயுதம்

2.        ஆயத்தம் என்னும் பாதரட்சை

நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாகவும் மற்றும் வேகமாகவும் செல்வதற்கு நமக்கு கொடுக்கப்பட்ட ஆயுதம். இந்த ஆயுதம் இல்லாததின் நிமித்தமே அனேகருடைய வாழ்க்கையில் எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் தாமதம் ஆகுகின்றன.

3.        விசுவாசம் என்னும் கேடகம்

நம்முடைய பரிசுத்த ஆலயத்தை உடைப்பதற்காக பிசாசானவன் எய்யும் ஆயுதங்களை மழுங்கலாக்கிப் போடும் தற்காப்பு ஆயுதம்.

4.        நீதி என்னும் மார்க்கவசம்

நம்முடைய வழியை மாற்றி பிசாசானவனுடைய பாதைக்கு அழைத்துச் செல்லாதப்படி தடுப்பதற்காக தரப்பட்ட பாதுகாப்பு ஆயுதம்

5.        இரட்சிப்பு என்னும் தலைச்சீரா

நம்முடைய கிறிஸ்துவின் சிந்தையை மனுஷ சிந்தையாய் மாற்ற முயலுகிற பிசாசாசின் திட்டத்தை தவிர்ப்பதற்காக இந்த ஆயுதம்

6.        தேவ வசனம்

நம்முடைய வாழ்க்கையில் வளருகிற தேவையில்லாத களைகளை அதாவது வேற்று உபதேசங்களை வெட்டி எறிவதற்கு இந்த ஆயுதம் பயன்படுகிறது

7.        ஜெபம்

எல்லா ஆயுதங்களையும் எப்பொழுதும் கூர்மையாய் வைத்திருப்பதற்கு தேவைப்படும் ஆயுதம் ஆகும்

இப்படிப்பட்ட ஆயுதங்கள் யாரிடம் எல்லாம் இருக்கிறதா அவர்கள் மட்டுமே தேவனுடைய இராணுவத்தில் சேரும் தகுதியை பெறுகிறார்கள் என்பதை மறந்து விடாதீர்.


ஓய்வுநாளின் பெயர்கள்

1.பரிபூரண நாள்:

தேவன் எல்லாவற்றையும் அதாவது ஆறு நாளுக்குள் நேர்த்தியாக முடித்தார். இனி குறைவு ஒன்றும் இல்லை என்பதை அறிந்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். ஆகவே நாமும் ஆறுநாளின் பரிபூரணத்தை அடைய வேண்டுமானால் இந்த நாளுக்குள் நாம் நுழைந்தே ஆக வேண்டும். மேலும் இந்த நாள் தேவன் பரிபூரணமானவர் என்பதையும் நமக்கு தெளிவுப்படுத்துகிறது.

2.ஆராதனை நாள்:

தேவன் இந்த நாளை ஓய்வாக நமக்கு தந்ததற்கு காரணம் என்னவென்றால் அவரை நாம் ஆராதிக்கும்படியாகவும், அவருடைய மகத்துவங்களை ஜனங்கள் பார்க்கும்படியாகவும் என்பதை மறக்க வேண்டாம். நாம் அவரை மாத்திரமே ஆராதனை செய்ய வேண்டும் ஏனென்றால் வேதம் சொல்லுகிறது அவர் தம்முடைய ஆராதனையை வேறு யாருக்கும் தருவதில்லை.

3.கிருபையின் நாள்:

இஸ்ரவேல் ஜனங்கள் தேவனைப் பார்த்து ஏழாம் நாளில் நாங்கள் ஓய்ந்திருந்தால் நான்களும் எங்கள் பிள்ளைகளும் சாப்பிடும்படியான போஜனத்தை யார் தருவார்? என்று தேவனிடம் கேட்டதற்கு, அதற்கு தேவன் கொடுத்த பதில் இந்த நாளை எனக்கு கொடுப்பீர்களானால் ஆறுநாளின் பலனை இரட்டிப்பாக மாற்றித் தருவேன் அதாவது என்னுடைய கிருபையை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் அளிப்பேன் என்பதாகும்.

4.ஆசீர்வாதமான நாள்:

ஆறுநாளின் பலனை நாம் முழுமையாக சாப்பிட வேண்டுமானால் அதாவது நாமும் நம்முடைய தலைமுறையும் அனுபவிக்க வேண்டுமானால் தேவனுடைய ஏழாம்நாளின் ஆசீர்வாதம் நமக்கு வேண்டும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்.

5.பெருக்குகிற நாள்:

இன்று அனேகர் தங்களுடைய செல்வத்தை பெருக்குவதற்காக அவர்கள் செய்கிற காரியம் ஏழுநாளையும் தங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். இதனிமித்தம் என்ன நடக்கிறது அவர்களுடைய மரணம் மட்டும் குறைவே காணப்படுகிறது. ஆனால் இந்த நாளில் நாம் தேவனிடம் வருவோமானால் 5 அப்பம் 2 மீன்களை பெருக்கினது போல நம்முடைய குறைவுகள் பெருகும் என்பதில் சிறுதும் சந்தேகமேயில்லை.

6.ஒருமுக[மன] நாள்:

இந்த நாளில் தான் பல பிரிவுகளை உடையவர்கள் அதாவது ஆறுநாளின் பிரிவுகள் ஒன்று கூடுகிற நாள் ஆகவேதான் தேவன் சொன்னார் எங்கே இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினிமித்தம் ஒன்று கூடுகிறார்களோ அங்கே நான் இருக்கிறேன் என்றார். ஆகவே நாம் ஒருமனதோடு இந்த நாளில் கூடி இயேசுவின் நாமத்தை உயர்த்துவோமாக.

7.மனமகிழ்ச்சியின் நாள்:

ஆறு நாளும் வேலையினிமித்தமாகவோ, குடும்ப பிரச்சனையின் நிமித்தமாகவோ அல்லது வேறு பலவித பிரச்சனைகளின் நிமித்தமாகவோ பல துன்பங்களை நாம் அனுபவிக்கலாம் ஆனால் இந்த ஒய்வுநாளில் நம்முடைய ஆறுநாளின் துக்கங்கள் ஒரு நிமிஷத்தில் மனமகிழ்ச்சியாக மாற்றப்படும். என்பதில் சந்தேகமேயில்லை. ஏனென்றால் இந்த நாளின் தலைவர் யார் என்றால்? சந்தோஷத்தை மட்டும் தருகிற இயேசு கிறிஸ்துவே ஆவார்.

நாம் ஆசரிக்கிற ஓய்வுநாளில் இந்த நாட்கள் எல்லாம் அடங்கியிருக்கிறா? அப்பொழுதுதான் அந்த நாள் ஓய்வுநாள் என்று அர்த்தம் கொள்ளும்.......

 

 


போதகர் முதன்முதலில் தன்னுடைய சபையில் உள்ள ஒரு குடும்பத்தைச் சந்திக்க போகிறார், அப்பொழுது நடந்த உரையாடலை உங்களுக்குச் செய்தியாக தருகிறேன்.

போதகர்: யாரும் இல்லையா?

குடும்பத்தின் தலைவர்: கதவைத் திறந்துப் பார்க்கிறார், அங்கு போதகர் நின்று கொண்டிருக்கிறார் அதைப் பார்த்த குடும்பத்தின் தலைவர் சந்தோஷப்பட்டு ஐயா ஸ்தோத்திரம் உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறார்

போதகர்: ஸ்தோத்திரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறேன்

குடும்பத்தின் தலைவர்: ஐயா ரொம்ப சந்தோஷம் உங்கள் வாழ்த்துதல் சோர்வாக இருந்த எனக்கு மிகவும் உற்சாகமாய் இருக்கிறது

போதகர்: என்ன நடந்தது? ஏன் உற்சாகம் குறைவாகக்காணப்படுகிறீர்கள், சபைக்கு வருகிறீர்கள் அங்கு பார்க்கும் போது சந்தோஷமாய் தெரிகிறீர்கள்!

குடும்பத்தலைவர்: ஆமாம் ஐயா ஆனால் வீட்டிற்குள் வந்தவுடன் எங்களுக்கு சமாதானம் இல்லை, பிள்ளைகள் கீழ்ப்படிவதில்லை இப்படியாக அனேக சொல்ல முடியாத பிரச்சனைகள் என்னுடைய இருதயத்தில் காணப்படுகிறது.

போதகர்: இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் பொறுப்பெடுத்துக் கொள்வார், நீங்கள் எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டாம். சில கேள்விகளை உங்களிடம் கேட்க விரும்புகிறேன் ஆகவே உங்கள் மனைவி பிள்ளைகள் எல்லாரையும் கூப்பிடுங்கள்

குடும்பத்தலைவர்: போதகர் ஐயா கூப்பிடுகிறார் எல்லாரும் வாருங்கள்

போதகர்: நான் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்பேன். நீங்கள் உண்மையாக அதற்கு பதில் சொல்ல வேண்டும். பிறகு அதின் அடிப்படையில் உங்களுக்கு சில அறிவுரைகளை வேதத்தில் இருந்து தருவேன்.

குடுப்பத்தலைவர்: சரிங்க ஐயா நீங்கள் சொன்னபடியே கேட்கிறோம்

போதகர்: நீங்கள் ஒருநாளில் எத்தனை தடவை ஜெபிக்கிறீர்கள், எவ்வளவு மணிநேரம் ஜெபிக்கிறீர்கள் அதுமட்டுமல்லாமல் குடும்ப ஜெபம் மற்றும் வேத வாசிப்பு நடைபெறுகிறாதா என்பதை எனக்கு சொல்லுங்கள்

குடுப்பத்தலைவர்: ஐயா இல்லை ஜெபித்தால் எப்போதாவது 10 நிமிடம் ஜெபிப்போம்

போதகர்: ஐயோ! மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறீர்களே

குடும்பத்தலைவர்: ஐயா மன்னிக்கவும் எங்களுக்கு சரியான வழிநடத்துதல் இல்லாததின் நிமித்தம் இத்தகைய குறைபாடு எங்களுக்கு காணப்படுகிறதய்யா?

போதகர்: கிறிஸ்துவுக்குள் என்னையும் மன்னியுங்கள் நானும் சரியாக உங்களை கவனிக்க வில்லையே குழந்தைகளே நீங்கள் தினமும் ஜெபித்து வேதம் வாசிக்கிறீர்களா?

பிள்ளைகள்: எங்கள் பெற்றோர் எங்களுக்குச் சொல்லித் தரவில்லை ஐயா

போதகர்: நீங்கள் நம்முடைய சபையில் நடக்கும் வேதாகம பள்ளியில் கலந்து கொள்வதில்லையா?

பிள்ளைகள்: அந்த நேரத்தில் நாங்கள் வீட்டில் இருந்து குழைந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருப்போம்

போதகர்: குடும்பத்தலைவரை நோக்கி ஏன் ஐயா பிள்ளைகளை இப்படியாக வளர்க்கிறீர்கள், நாளடைவில் அவர்கள் சீர்கெட்டு போகக் கூடுமே

குடும்பத்தலைவி: ஐயா இடையில் குறிக்கிடுவதற்கு மன்னிக்கவும் நான் எத்தனை தடவை சொல்லியும் குழைந்தைகள் கேட்பதில்லை ஏனென்றால் இவர்கள் தந்தை அதிக சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தவறு செய்தாலும் இவர்களை தண்டிப்பதேயில்லை

போதகர்: ஏன் இப்படியாக இருக்கிறீர்கள் உங்களுக்கு கொஞ்ச கூட தேவனுடைய ராஜ்ஜியத்தைக் குறித்து பயம் இல்லையா?

குடும்பத்தலைவர்: என்னை மறுபடியும் மன்னியுங்கள் நான்தான் இவைகளுக்கெல்லாம் மூலக்காரணம், நான் சரியாக இருந்தால் இவர்கள் எல்லாரும் சரியாக மாறி விடுவார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.

போதகர்: ஐயா வேதம் சொல்லுகிறது தன் சொந்த குடும்பத்தை விசாரியாமல் இருப்பவன் பாவம் செய்தவனாவான், முதலில் குடும்பத்தில் சாட்சி, பிறகு வேலையில் சாட்சி, அதன்பிறகு சபையில் சாட்சியாக இருக்க வேண்டும். நாமே இப்படியாக இருந்தால் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் எப்படியாக இருப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.

குடும்பத்தைலைவர்: ஐயா இனிமேல் இப்படியாக வாழமாட்டேன், அதுமட்டுமல்லாமல் நீங்கள் என்ன சொல்லுகிறீர்களோ அதின்படியே என்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன்

போதகர்: என்னையும் மன்னியுங்கள் நானும் சரியாக உங்களை கவனிக்கவில்லை இதனிமித்தமே நீங்கள் வழித் தவறி சென்றீர்கள். இனிமேல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களை சந்திக்க வருவேன். அதுமட்டுமல்லாமல் நான் தருகிற வேதாகம அறிவுரையை பின்பற்றிதான் நடக்கிறீர்களா என்பதையும் அறிந்து கொள்வேன். ஒரு காரியத்தை மறக்காதீர் நீங்கள் இயேசுவை மறந்தால் அவர் உங்களை மறந்து விடுவார்.

குடும்பத்தலைவர்: இனிமேல் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, நீங்கள் சொல்லுகிறபடியெல்லாம் நடப்போம் என்று தேவனுக்கு முன்பாக வாக்குறுதி கொடுக்கிறோம்.

போதகர்: தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.

குறிப்பு: போதகர்களே நீங்கள் உங்கள் சபையில் எப்படி இருக்கிறீர்கள் உங்களுடைய விசுவாசிகளை உற்றுக் கவனித்து வருகிறீர்களா? ஏனென்றால் இன்று அனேக ஆடுகள் தவறி செல்வதைப் பார்க்க முடிகிறது. ஒரு காரியத்தை நாம் மறக்க வேண்டாம். நாம் எல்லாரும் கர்த்தராகிய இயேசுக்கு முன்பாக ஒரு நாள் நிற்க வேண்டும். ஆகவே தேவ பயத்தோடு தேவன் கொடுத்த ஆடுகளை தங்களுடைய ஆதாயத்திற்காக மேய்க்காமல் தேவனுக்காக மேய்க்கும் படி முன்வாருங்கள்.

மறக்க வேண்டாம்: பட்சபாதம் பார்க்கிறவர்களுக்கு அழகான நரகம் காத்திருக்கிறது. [ அழகான நரகம் உலகத்தின் அருவருப்புகளை அழகாக பார்க்கிறவர்களுக்கு ]

 


Posted on: 12/01/2015

புதிய காரியங்கள் எப்பொழுது நம்முடைய வாழ்க்கையில் தோன்றுகிறது

[ இந்த புத்தாண்டில் புதிய காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் நடைபெற வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும் ]

 

1.முந்தினாவைகளையும், பூர்வமானவைகளையும் மறக்கும் போது புதிய வழி உண்டாகிறது [ ஏசா 43:19,20 ]

2.கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேல் தாகமாய் மாறும் போது புதிய செழிப்பு உண்டாகிறது [ ஏசா 44:3 ]

3.தேவனுடைய ஆவி நம்மேல் வரும் போது புதிய நன்மை உண்டாகிறது [ ஏசா 44:3 ]

4.தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப் போட்டு கொடுக்கும் போது புதிய நாமம் [ ஏசா 44:5 ]

5.ஒருவன் கிறிஸ்துவுக்குள் வரும் போது புதிய சிருஷ்டி உருவாகிறது [ 2கொரி 5:17 ]

6.கர்த்தரைத் தேடும் போது புதிய ஜீவன் உண்டாகிறது [ செப்பனியா 2:3 ]

7.கர்த்தருக்கு பயப்படும் போது புதிய வெளிச்சம் உண்டாகிறது [ மல் 4:2 ]

8.கர்த்தருக்காகக் காத்திருக்கும் போது புதிய பலன் உண்டாகிறது [ ஏசா 40:31 ]

9.கர்த்தரிடத்தில் திரும்பும் போது புதிய மன்னிப்பு உண்டாகிறது [ ஏசா 55:7 ]

10.கர்த்தரைத் தேடும் போது புதிய இரக்கம் கிடைக்கிறது [ ஏசா 55:6,7 ]


புத்தாண்டு தோட்டம்

தோட்டத்தின் சொந்தக்காரர்: இயேசு கிறிஸ்து

தோட்டத்தின் பெயர்: விசுவாசிகள்

தோட்டம் இருக்கும் இடம்: விசுவாசிகளின் ஆவி, ஆத்துமா, சரீரம்

தோட்டத்தில் விதைக்கப்படும் விதை: தேவ வசனம், ஆரோக்கியமுள்ள போதகம்

தோட்டத்தில் நிற்கும் மரங்களின் பெயர்கள்: ஒலிவ மரமாகிய அபிஷேகம், திராட்சச் செடியாகிய அன்பு, ஒலிவக் கன்றாகிய பரிசுத்தம்.

தோட்டத்தில் விளையும் கனிகள்: ஸ்தோத்திரப்பலி, ஆவியின் கனி, நீதியின் கனி, இரட்சிப்பின் கனி

தோட்டத்திற்கு ஊற்றப்படும் தண்ணீர்: ஜீவத்தண்ணீர்

தோட்டத்தில் பயன்படுத்தப்படும் உரங்கள்: கிறிஸ்துவின் தழும்புகள், கிறிஸ்துவின் இரத்தம்

தோட்டத்தில் விளையும் கனியின் சுவை: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், விசுவாசம், இச்சையடக்கம்

தோட்டத்தின் காவலாளி: ஜெபவீரன், தேவதூதர்கள்

தோட்டத்தில் விளைச்சலை உண்டுபண்ணுகிறவர்: பரிசுத்த ஆவியானவர்

தோட்டத்தில் வேலை செய்கிறவர்கள்: இரட்சிக்கப்பட்டவர்கள்

தோட்டத்தில் வேலை செய்கிறவர்களுக்கு கொடுக்கப்படும கூலி: ஜீவ விருட்சத்தின் கனி, வெண் வஸ்திரம், புதிய நாமம், ஜிவ கிரீடம்

குறிப்பு: யாருடைய வாழ்க்கையில் இந்த தோட்டம் இல்லையோ அவர்களுக்கெல்லாம் தேவன் புதிய ஆண்டின் இந்த மாதத்தில் ஒரு புதிய தோட்டத்தைக் கொடுக்கிறார்.

நிபந்தனை: இயேசுவிடம் கேட்பவர்களுக்கு


வேதாகமம்

நம்முடைய பிறப்பின் தேதியை அறிவிக்கிற ஒரு மருத்துவர்

நம்மை தூக்கி சுமக்கிற ஒரு தந்தை

நம்மை தேற்றுகிற ஒரு தாய்

நமக்கு அறிவைத் தருகிற ஒரு ஆசிரியர்

நமக்கு நியாயத்தைக் கர்றுக் கொடுக்கிற ஒரு நீதியுள்ள நியாயாதிபதி

நமக்காக பரிந்து பேசுகிற ஒரு வழக்கறிஞர்

நம்மை பரிசுத்த வழியில் நடத்துகிற ஒரு போதகர்

நம்முடைய எதிர்காலத்தை அறிவிக்கிற ஒரு தீர்க்கதரிசி

நம்மை செழிப்புள்ள இடத்திற்கு கொண்டு செல்லுகிற ஒரு மேய்ப்பர்

நமக்கு நல்வாழ்க்கையைத் தருகிற ஒரு மணவாளன்

கடைசியாக,

நம்மை பரலோகம் கொண்டு செல்கிற ஒரு பரிசுத்த புஸ்தகம்


Posted on : 25/12/2014

கிறிஸ்துமஸ் [ எவ்வாறு கொண்டாடுதல் ]

 

கிறிஸ்துமஸின் தலைவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து

கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டிய இடங்கள் நம்முடைய இருதயம் மற்றும் உள்ளம் [ ஆலயமாகிய விசுவாசிக்குள் ]

கிறிஸ்துமஸிற்கு அழைக்க வேண்டிய விருந்தாளிகள் ஏழைகள், கடன்பட்டோர், வியாதியஸ்தர், சிறுமைப்பட்டவர்கள், துன்பத்தில் இருப்பவர்கள், கிறிஸ்துவை அறியாதவர்கள்.

கிறிஸ்துமஸ் அன்று தொங்கவிட வேண்டிய நட்சத்திரத்தின் பெயர் தேவ வசனம்

கிறிஸ்துமஸ் அன்று ஸ்நானம் பண்ண வேண்டிய தண்ணீரின் பெயர் அபிஷேகம்

கிறிஸ்துமஸ் அன்று நம்முடைய அலங்கரிப்பு தெளிந்த புத்தி, உண்மை, பரிசுத்தம், இச்சையடக்கம், நீடிய பொறுமை, நற்குணம்.

கிறிஸ்துமஸ் அன்று பரிமாற வேண்டிய பலகாரங்கள் அன்பு, சந்தோஷம், இரக்கம், கிருபை

கிறிஸ்துமஸ் அன்று பறிமாற வேண்டிய உணவு மற்றும் பானம் இயேசு என்கிற ஜீவஅப்பம் மற்றும் ஜீவதண்ணீர்

கிறிஸ்துமஸ் அன்று அணிய வேண்டிய ஆடை கிறிஸ்துவின் மகிமையின் ஆடை, இரட்சிப்பின் ஆடை,

கிறிஸ்துமஸ் அன்று பயன்படுத்த வேண்டிய பட்டாசுகள்: துதி, ஆராதனை மற்றும் ஜெபம்

கிறிஸ்துமஸ் அன்று நம்மை எப்படிப் பாதுகாக்க வேண்டும் சத்தியம், நீதி, ஆயத்தம், விசுவாசம், வசனம், இரட்சிப்பு

கிறிஸ்துமஸ் அன்று பறிமாறவேண்டிய செய்தி: இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், அவர் தந்த இரட்சிப்பைக் குறித்தும்

கிறிஸ்துமஸ் எத்தனை நாட்கள் கொண்டாடப்படுகிறது கிறிஸ்துமஸின் தலைவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வரும் வரை.

ஒவ்வொருவருக்கும் இயேசுவின் நாமத்தினால் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

 


Posted on: 24/12/2014

 

வேதம் தரும் நல்லவைகள்

 

1.கிறிஸ்துவுக்குள் எச்சரிக்கையைப் பெற்றுக் கொள்ளுதல் நல்லது எபே 4:17

2.கிறிஸ்துவுக்குள் வளருதல் நல்லது எபே 4:15

3.கிறிஸ்துவுக்குள் சாட்சியாக மாறுதல் நல்லது எபே 4:15

4.கிறிஸ்துவுக்குள் வரும் வாக்குத்தத்தங்கள் நல்லது எபே 3:3

5.கிறிஸ்துவுக்குள் பங்காளியாயிருப்பது நல்லது எபே 3:3

6.கிறிஸ்துவுக்குள் வரும் ஆசீர்வாதங்கள் நல்லது எபே 1:3

7.கிறிஸ்துவுக்குள் இருக்கும் கிருபை நல்லது எபே 1:5

8.கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொள்ளப்படுதல் நல்லது எபே 1:4

9.கிறிஸ்துவுக்குள் கூட்டப்படுதல் நல்லது எபே 1:9

10.கிறிஸ்துவுக்குள் வரும் தயவு நல்லது எபே 2:6

11.கிறிஸ்துவுக்குள் வரும் நற்கிரியை நல்லது எபே 2:10

12.கிறிஸ்துவுக்குள் பரிசுத்த ஆலயமாய் இருத்தல் நல்லது எபே 2:21

13.கிறிஸ்துவுக்குள் முத்திரைப் போடப்படுதல் நல்லது எபே 1:13

குறிப்பு:இப்படியாக நம்முடைய வாழ்க்கை கிறிஸ்துவுக்குள் இருக்கும் போது மட்டுமே நாம் இந்த உலகத்தால் கறைபடாமல் இருக்க முடியும் என்பதை மறக்க வேண்டாம். அதாவது அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ளும் போது மட்டுமே மேலே சொன்ன எல்லா காரியங்களும் நடைபெறுகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். கிறிஸ்து என்பது பரிசுத்த ஆவியையே குறிக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

 


Posted on: 24/12/2014

ஆவிக்குரிய வீடு:

வீட்டின் பாதுகாப்பிற்கு தேவப்படும் உணவு:கிருபையும் சத்தியமும்

வீடு நிலைத்திருப்பதற்கு தேவைப்படும் உணவு:தேவனுடைய போதகம், கட்டளை

வீட்டிற்கு செல்லும் பாதை நேராக இருப்பதற்கு தேவைப்படும் உணவு:கர்த்தர் மேல் நம்பிக்கை

வீடு பெலமாயிருப்பதற்கு தேவைப்படும் உணவு:கர்த்தர் மேல் பயம்

வீட்டின் களஞ்சியங்கள் நிரம்ப தேவைப்படும் உணவு:கர்த்தரை கனம் பண்ணுதல்

வீட்டில் அநேக ஆத்துமாக்கள் நிரம்ப தேவைப்படும் உணவு:கர்த்தருடைய சிட்சையை ஏற்றுக் கொள்ளுதல்

வீடு ஆசீர்வாதமாய் இருப்பதற்கு தேவைப்படும் உணவு:தேவஞானம், தேவபுத்தி

வீட்டிற்கு தேவன் வர தேவைப்படும் உணவு:பெருமையுள்ள வழிகளில் ஒன்றையும் தெரிந்து கொள்ளக்கூடாது, தாழ்மையுடன் இருக்க வேண்டும். நீதியாய் வாழ வேண்டும்.

வீடு பயமில்லாமல் இருக்க தேவைப்படும் உணவு:நல்லாலோசனை, மெய்ஞ்ஞானம்

குறிப்பு: இப்படிப்பட்ட வீட்டைக் கட்ட ஒவ்வொருவரும் பிரயாசப்படுவோம்.

 


Posted on: 26/11/2014

 

என்னுடைய வாழ்க்கையில் வேதாகமம்

 

நான் வாழுகிற ஒரு ஜெபவீடு

என் தேவனைப்பார்க்கும்படி அதிகாலையில் என்னை எழுப்புகிற கடிகாரம்

நான் மூன்று வேளை சாப்பிடும் அனுதினவுணவு

எனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தந்த உண்மை பெற்றோர்

என்னை ஜெபத்தில் விழித்திருக்கச் செய்யும் ஒரு காவலாளி

நான் வழி தவறி சென்ற போது சரியான பாதையைக் காண்பித்த ஒரு வழிகாட்டி

நான் மெய்யான உறவை அடையாள கண்டு கொள்ள செய்த ஒரு நண்பர்

இருளில் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு [விளக்காய்] வெளிச்சத்தை தரும்படி வந்த ஒரு விளக்கு

பரீட்சையில் வெற்றி பெறச் செய்த ஒரு உண்மை ஆசிரியர்

என்னை ஓமன் தேசத்துக்குக் கொண்டு சென்ற வாகனம்

எனக்கு ஒரு நல்ல வேலையைத் தந்த ஸ்தாபனம்

என் வேலையில் ஒழுங்கைக் கற்றுக் கொடுத்த ஒரு இராணுவ அதிகாரி

என் பாவ அழுக்கைக் கழுவிய ஜீவத் தண்ணீர்

என்னை நித்திய ஜீவனுக்கு கொண்டு செல்லுகிற ஒரு ஜீவ புஸ்தகம்.


Posted On: 24/11/2014


நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுடன் உரையாடுதல்:

விசுவாசி: ஐயா ஸ்தோத்திரம்

ஆபிரகாம்: ஸ்தோத்திரம் தேவனுடைய பிள்ளையே கிறிஸ்துவுக்குள் உன்னை வாழ்த்துகிறேன்

விசுவாசி: நீங்கள் எங்களோடு பேசும்படி நேரத்தை ஒதுக்கியதற்காக கிறிஸ்துவுக்குள் மறுபடியும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆபிரகாம்: நான் உங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

விசுவாசி: ஐயா கிறிஸ்துவுக்குள் உங்கள் அனுபவத்தை எங்களுக்கு சொல்லுங்கள்

ஆபிரகாம்: என்னுடைய சாட்சி உங்களுக்கு பிரயோஜனமாயிக்குமானால் நிச்சயமாக சொல்லுகிறேன்.

விசுவாசி: ஐயா நீங்கள் எப்பொழுது தேவனை அறிந்து கொண்டீர்கள்?

ஆபிரகாம்: என்னுடைய பிதாக்கன்மார் தேவ வழியில் வந்தவர்களாய் இருந்த போதும், அவர்கள் செய்த தவறின் நிமித்தம் சிதறடிக்கப்பட்டோம் ஆகவே என்னுடைய பெற்றோர் ஒரு விக்கிரக ஆராதனைக்காரராய் வாழ்ந்தனர். ஆனால் நானோ உண்மையான தெய்வத்தை தேடி அழைந்து கொண்டிருந்தேன். அப்பொழுது தேவன் என்னை சந்திக்கலானார்.

விசுவாசி: தேவன் எப்படியாக உங்களை சந்தித்தார்

ஆபிரகாம்: அவர் என்னை பேர் சொல்லி அழைத்து எனக்கு தெய்வீக வாக்குத்தத்தங்களை தந்து என்னை எல்லாவற்றையும் விட்டு வெளியே புறப்பட்டு வரச் சொன்னார்

விசுவாசி: உண்மையில் நீங்கள் தேவனுக்குப் பிரியமான மனுஷர்தான். எப்படி எல்லாவற்றையும் விட்டு தேவனோடு செல்ல முடிந்தது?

ஆபிரகாம்: இதுவரை கேட்டிராத சப்தத்தைக் கேட்டேன் அதுமட்டுமல்லாமல் நாங்கள் தெய்வம் என்று சொல்லியிருந்தவர்கள் என்னை பெயர் சொல்லி அழைத்ததில்லை. அதுமட்டுமல்லாமல் எனக்காக அவர் சொர்க்கத்தை திறந்து காண்பித்தார், அங்கே எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் ஒதுக்கப்பட்ட நித்திய பவனத்தைப் பார்த்தேன். உடனே இந்த அழிந்து போகிறவைகளை விட முடிவு எடுத்தேன்.

விசுவாசி: அப்படியென்றால், நீங்கள் உலகில் உள்ள கானான் தேசத்திற்காக கடந்து செல்லவில்லையா?

ஆபிரகாம்: என் மகனே உலகம் இப்படியாகத்தான் சொல்லுகிறது. ஆனால் மறக்க வேண்டாம் இந்த பூமியில் எந்த கானான் தேசமும் நமக்கு நிரந்தரம் இல்லை, பூமியில் நாம் பரதேசி என்பதை மட்டும் மறக்க கூடாது, நம்முடைய நிரந்தர வீடு பரமகானானாகிய சொர்க்கம் ஆகும்.

விசுவாசி: இத்தனை மகிமையான தேவதாசனை நேரடியாக பார்ப்பதில் மிகவும் சந்தோஷம் ஐயா. உங்களுடைய வாக்குத்தத்தம் எப்பொழுது நிறைவேறியது? எத்தனை வயதில் வாக்குத்தத்தத்தைப் பெற்றீர்கள்?

ஆபிரகாம்: என்னுடைய 75 வது வயதில் வாக்குத்தத்தைப் பெற்றுக் கொண்டேன். ஆனால் இந்த வாக்குத்தத்தம் நிறைவேற 25 ஆண்டுகள் நான் காத்திருக்க வேண்டியதாயிருந்தது.

விசுவாசி: எப்படி இவ்வளவு காலம் காத்திருக்க முடிந்தது?

ஆபிரகாம்: என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் அதுமட்டுமல்லாமல் அவர் மனுஷர் அல்ல அவர் வாக்குத்தத்தை நிறைவேற்ற வல்லவர் என்பதை நான் நன்றாக அறிந்திருந்தேன். ஆகவேதான் தேவனால் விசுவாசிகளின் தகப்பன் என்கிற பெயரை பெற முடிந்தது என்பதை எப்படி நான் மற்க்க முடியும்.

விசுவாசி: ஐயா எப்படி எல்லா சூழ்நிலையிலும் தேவனை விசுவாசிக்க முடிந்தது?

ஆபிரகாம்: தேவபிள்ளையே இது மிகவும் சுலபமான வழி நீ உன்னை வெறுத்துவிட்டு உன் இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளை கொண்டு நிரப்பிவிட்டால் போதும் அப்பொழுது நீ விட்டுவந்த பழைய மனுஷனை மறுபடியும் தேடமாட்டாய்.

விசுவாசி: ஐயா சரியாக சொன்னீர்கள் இன்னும் ஒரே ஒரு கேள்வி இந்த உலகத்துக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஆபிரகாம்: எனக்கு அருமையான தேவப்பிள்ளைகளே இந்த உலகத்தில் ஆசீர்வாதமாய் இருப்பதோ அல்லது பெரிய வீட்டைக் கட்டி சாட்சி சொல்வதோ முக்கியமல்ல நீ உன்னுடைய வீட்டை பரலோகத்தில் கட்டியிருக்கிறாயா? உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே போகிறதா அல்லது இன்னும் நீ தரித்திரனாகத்தான் இருக்குகிறாயா? என்று சோதித்துப்பாருங்கள். ஏனென்றால் தேவன் சீக்கிரமாய் வரப்போகிறார். ஆகவே சீக்கிரமாய் ஆயத்தப்படு பிறரையும் ஆயத்தப்படுத்து.

விசுவாசி: ஐயா மிகவும் சரியாக சொன்னீர்கள், நாங்கள் அப்படியே செய்கிறோம் இவ்வளவு நேரம் எங்களோடு உங்கள் விலையேறப் பெற்ற நேரத்தை செலவழித்தீர்கள் அதற்காக  உங்களுக்கு இயேசு கிறிஸ்துவுக்குள் மிகவும் நன்றிகளை ஏறெடுக்கிறேன்.

குறிப்பு: எனக்கு பிரியமான விசுவாசிகளே கேட்டதை இருதயத்தில் பதித்துக் கொண்டு மனமகிழ்ச்சியின் நாளுக்காக ஆயத்தமாகுவோம். 


Posted On: 09/10/2014

தேவனுடைய இராணுவம்

இராணுவத்தின் தலைவர்:இயேசு கிறிஸ்து [ சேனைகளின் கர்த்தர் ]

இராணுவத்தில் சேருவதற்கான தகுதி:பரிசுத்தம்

இராணுவத்தில் நடத்தப்படும் தேர்வு:ஆவிக்குரிய தேர்வு [ பிசாசுடன் எதிர்த்து நிற்குதல் ]

இராணுவத்தின் வீரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி:துதி

இராணுவத்தின் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆடை:மகிமையின் ஆடை

இராணுவத்தில் வழங்கப்படும் உணவு:ஜீவ அப்பம்

இராணுவத்தில் வழங்கப்படும் பானம்:ஜீவதண்ணீர்

இராணுவத்தின் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்:சந்தோஷம்

இராணுவத்தில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கை: 12 லேகியோனுக்கு மேல்

இராணுவ வீரர்களின் பலம்:1,85,000 மாமிச மனுஷர்களின் பலத்திற்கு சமம் மற்றும் இதை விட அதிகம்

இராணுவத்தில் இருக்கும் ஆயுதங்கள்:மின்னல், இடி, மழை, துதி, ஆவியின் பட்டயம், கொள்ளை நோய் இன்னும் அதிகம்

இராணுவத்தில் இருக்கும் வாகனத்தின் பெயர்:மேகம், அக்கினி, பனி

இராணுவத்தின் தலைமை இடம்:பரலோகம்

இராணுவத்தலைவரின் வருகை எப்படியிருக்கும்:திருடனைப் போல வருகிறார்

இராணுவத் தலைவர் வரும் நாழிகை மற்றும் நாள்:பிதா ஒருவர் தவிர வேறொருவரும் அறியார்.

சிந்திக்கவும்: நாமும் இந்த இராணுவத்தில் ஒரு போர் வீரராக இருக்கிறோமா?

 


Posted On: 08/10/2014

1 12 செய்திகள்:

யாக்கோபின் கூடாரம் சொல்லும் சாட்சி:

1.கர்த்தர் முதல் கோத்திரத்தின் மூலம் என் கூடாரத்தின் சிறுமையை மாற்றினார் ரூபன்

2.கர்த்தர் இரண்டாவது கோத்திரத்தின் மூலம் நான் அற்பமாய் எண்ணப்பட்டதை கேட்டருளினார் சிமியோன்

3.கர்த்தர் மூன்றாவது கோத்திரத்தின் மூலம் என்னை அவருடைய குடும்பத்தோடு சேர்த்துக் கொண்டார் லேவி

4.கர்த்தர் நான்காவது கோத்திரத்தின் மூலம் என்னை துதிக்கப் பண்ணினார் யூதா

5.கர்த்தர் ஐந்தாவது கோத்திரத்தின் மூலம் என் வழக்கைத் தீர்த்து என் சத்தத்துக்குச் செவிக் கொடுத்தார் தாண்

6.கர்த்தர் ஆறாவது கோத்திரத்தின் மூலம் என்னுடைய போராட்டத்துக்கு வெற்றியைத் தந்தார் நப்தலி

7.கர்த்தர் ஏழாவது கோத்திரத்தின் மூலம் என்னை பெருகச் செய்தார் காத்

8.கர்த்தர் எட்டாவது கோத்திரத்தின் மூலம் என்னை ஆசீர்வதித்தார் ஆசேர்

9.கர்த்தர் ஒன்பதாவது கோத்திரத்தின் மூலம் எனக்கு பலன் தந்தார் இசக்கார்

10.கர்த்தர் பத்தாவது கோத்திரத்தின் மூலம் எனக்கு நல்ல ஈவைத் தந்தார் செபுலோன்

11.கர்த்தர் பதினோராவது கோத்திரத்தின் மூலம் என் நிந்தையை மாற்றினார் யோசேப்பு

12.கர்த்தர் பன்னிரண்டாவது கோத்திரத்தின் மூலம் மரணகாலத்திலும் எனக்கு ஆறுதல் தந்தார் பென்யமீன்

           - ஆதியாகமம் 29:31 35:18


Posted On: 07/09/2014

 

தேவன் தருகிற ஒளியின் ஆயுதங்கள் அல்லது ஆவிக்குரிய ஆயுதங்கள்

 

1.ஆவிக்குரிய வஸ்திரங்கள் விழாமல் இருப்பதற்கு பயன்படுகிறது சத்தியம் என்னும் கச்சை

 

2.நம்முடைய பரிசுத்தம் குறையாமல் இருப்பதற்கு பயன்படுகிறது நீதி என்னும் மார்கவசம்.

 

3.நம்முடைய வாக்குத்தத்தங்கள் கீழே விழாமல் இருப்பதற்கு பயன்படுகிறது விசுவாசம் என்னும் கேடகம்

 

4.நம்முடைய சுவிசேஷம் பாதி வழியில் நின்று போகாமல் இருப்பதற்கு பயன்படுகிறது ஆயத்தம் என்னும் பாதரட்சை

 

5.நமக்கு கொடுக்கப்பட்ட தேவ வார்த்தைகள் மறக்காமல் இருப்பதற்கு பயன்படுகிறது இரட்சணியம் என்னும் தலைசீரா

 

6.நமக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் நம்முடைய எதிராளியாகிய பிசாசை வெட்டுவதற்கு பயன்படுகிறது தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம்

 

7.நம்முடைய ஆவிக்குரிய வீடு இடிந்து விழாமல் இருப்பதற்கு பயன்படுகிறது ஜெபம்

 

8.நம்முடைய ஆவிக்குரிய வீடு மேலும் மேலும் எழும்புவதற்கு பயன்படுகிறது துதி                          

        - எபேசியர் 6:14-18, ஏசாயா 11:5

 


Posted On: 16/08/2014

இயேசுவின் குடும்பம்

 

குடும்பத்தின் தலைவர்: இயேசு கிறிஸ்து

குடும்பத்தின் தலைவி: இயேசுவின் இரத்தத்தால் தோய்க்கப்பட்டு, இந்த உலகத்தால் தன்னை கறைப்படுத்தாதபடி வாழும் பரிசுத்தவான்கள்

குடும்பத்தின் பிள்ளைகள்: இயேசுவிற்காக உபத்திரம் அனுபவிக்கிறவர்கள்

குடும்பத்தின் தலைவர் அணியும் ஆடை: இரத்தத்தில் தோய்க்கப்பட்ட மகிமையான ஆடை

குடும்ப தலைவர் அணியும் ஆடையின் நிறம்: சிவப்பு

குடும்பத்தினர் அணியும் ஆடை: பரிசுத்த ஆடை

குடும்பத்தினர் அணியும் ஆடையின் நிறம்: வெள்ளை

குடும்ப தலைவரின் வேலை: மேய்த்தல்

குடும்ப தலைவர் செய்யும் வேலை நேரம்: 24 மணிநேரம்

குடும்பத்தலைவர் தன்னுடைய பிள்ளைகளுக்கு வழங்கும் உணவின் பெயர்: தேவ வசனம்

குடும்ப தலைவர் தன்னுடைய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் உடற்பயிற்சி: துதி, ஜெபம், ஆராதனை, உபவாசம்

குடும்ப தலைவர் தன்னுடைய பிள்ளைகளின் பெலத்தை அதிகப்படுத்த வழங்கும் உணவின் பெயர்: பரிசுத்த ஆவி

குடும்ப தலைவர் கட்டிவைத்திருக்கிற வீட்டின் பெயர்: நித்திய வீடு

குறிப்பு:

நம்முடைய கிறிஸ்தவ குடும்பம் இப்படியாகத்தான் அமைந்திருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள், ஒரு வேளை நம்முடைய குடும்பத்தில் தலைக்குப் பதிலாக வால் ஆட்சி செய்யுமானால், அதாவது தலைவருக்குப் பதிலாக தலைவி ஆட்சி செய்வார்களானால் இப்பொழுதே தலைமை பொறுப்பை மாற்றிக்கொள்ளுங்கள், ஏனென்றால் ஆவியின் படி பேசுகிறேன், ஆவிக்குரிய வாழ்க்கையில் தலையில் இருந்து தான் மற்றப் பாகங்களுக்கு அபிஷேகம் கடந்து செல்கிறது என்பதை மறக்க வேண்டாம், ஏதேன் தோட்டத்தில் தலைகீழாக நடந்ததினால், ஆவிக்குரிய குடும்பத்தில் இருந்து ஆதாமும் ஏவாளும் தள்ளப்பட்டார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

 


Posted on: 16/07/2014

தேவனுடைய பரலோகம்

 

பரலோகத்தின் அதிகாரி: ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து

பரலோகத்தில் இருப்பவர்கள்: தேவதூதர்கள், 24மூப்பர்கள், நான்கு ஜீவன்கள், பரிசுத்தவான்கள் [ மணவாட்டிகள், மறுமனையாட்டிகள், கன்னிகைகள்]

பரலோகத்தின் தேவன் அணிந்திருக்கும் வஸ்திரத்தின் பெயர்: இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரம்.

பரலோக தேவனின் வஸ்திரத்தில் இருக்கும் நாமம்: தேவனுடைய வார்த்தை, ராஜாதிராஜா, கர்த்தாதி கர்த்தா

பரலோகத்தில் இருக்கும் சிங்காசனத்தின் பெயர்: மகிமையான சிங்காசனம்

பரலோக சிங்காசனத்தின் கால்களின் பெயர்: நீதி, நியாயம்

பரலோகத்தில் தேவன் எப்படியாயிருக்கிறார்: ஆவியாய் அதாவது மகிமையாய் இருக்கிறார்

பரலோகம் எவ்வாறு கட்டப்பட்டிருக்கிறது: தேவனுடைய மகிமையினாலும் அவருடைய பரிசுத்தத்தாலும்

பரலோகத்திற்கு வழங்கப்படும் ஆவிக்குரிய பெயர்கள்: பரம எருசலேம், நித்திய வீடு, பரம கானான்

பரலோகத்தில் இருக்கும் வாசஸ்தலங்கள்: அனேகம்

பரலோகத்தின் ஆயுதங்கள்: மழை, இடி, மின்னல், காற்று, மற்றும் நோய்கள்

பரலோக தேவனிடம் இருக்கும் இரதங்கள்: பதினாயிரம், ஆயிரமாயிரம்

பரலோக தேவனின் இரதத்தின் பெயர்: மேகம்

பரலோகத்தில் இருக்கும் தேவாலயம்: சர்வவல்லமையுள்ள தேவனாகிய ஆட்டிக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்து

பரலோகத்திற்கு வெளிச்சம் கொடுக்கும் விளக்கின் பெயர்: தேவனுடைய மகிமை

குறிப்பு: இந்த புதிய ராஜ்ஜியத்திற்கு நாம் செல்ல வேண்டுமானால் நமக்கு தேவையான தகுதி: முழுமையான இரட்சிப்பு

முழுமையான இரட்சிப்பு: தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் அபிஷேகம், முடிவுபரியந்தம் இவைகளைக் காத்துக் கொள்ளுதல்.

மறக்க வேண்டாம்: சிலர் இப்படியாக நினைப்பதுண்டு ஒரு தடவை ஞானஸ்நானம் எடுத்துவிட்டால் போதும் மற்றும் சிலர் இப்படியாக சிந்திப்பதுண்டு ஒரு தடவை மூழ்கு ஞானஸ்நானமும், பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் பெற்றுவிட்டால் போதும் என்று

என் அருமை ஜனங்களே உங்கள் இரட்சிப்பு முடிவு பரியந்தம் நிலைத்திருக்க வேண்டுமானால். ஒவ்வொருநாளும் புதிய புதிய அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும், பாருங்கள் நம்முடைய தொலைபேசிக்கு ஒவ்வொரு நாளும் மின்சாரம் தேவைப்படுகிறது அப்பொழுதுதான் அவைகள் வேலை செய்ய முடியும், அதே போலத்தான் நம்முடைய இரட்சிப்பும் இருக்கிறது.

வேதம் சொல்லுகிறது,

உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும் உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக என்று பிரசங்கி 9:8 நமக்கு சொல்வதை மறக்க வேண்டாம்,

ஆகவேதான் இந்த இரட்சிப்பை பாதுகாக்க சங்கீதக்காரன் இப்படியாக சொல்லுகிறார்,

புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன் [ அதாவது என்னை ஒவ்வொரு நாளும் புதிய அபிஷேகத்தால் நிரப்பும் என்றே அர்த்தமாகும் ] - சங்கீதம் 92:10

 


Posted on: 16/07/2014

கிறிஸ்தவர்களின் அன்பு [ எப்படியாக இருக்க வேண்டும்? ]

 

அன்பின் பெயர்: இயேசு கிறிஸ்து

அன்பிற்கு கொடுக்கப்படும் வெகுமதி: தம்மையே ஒப்புக்கொடுத்தல் [ அர்ப்பணிப்பு]

அன்பின் நீளம்: நீடிய சாந்தமுள்ளது, தயவுள்ளது

அன்பின் அகலம்: அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது

அன்பின் உயரம்: சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்

அன்பின் தன்மை: தீங்கு செய்பவர்களுக்கு நன்மை செய்தல்

அன்பின் காலம் [தொடக்கம் மற்றும் முடிவு காலம்] உலகம் தோன்றுவதற்கு முன்னே இருக்கிறது, ஒருக்காலும் முடிவு கிடையாது[ஒழியாது]

அன்பின் கட்டளை: தன்னை நேசிக்கிறது போல பிறனையும் நேசிக்க வேண்டும்.

 

 


Posted on: 10/05/2014

*** பலவீனமான மனுஷனும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் உரையாடுதல் ***

மனுஷன்: எங்கே ஆலயம் இருக்கிறது?

இயேசு: நீ தான் அந்த ஆலயம்

மனுஷன்: இந்த ஆலயம் அடிக்கடி சோர்ந்து போகிறதே?

இயேசு: சோர்ந்து போகிறவர்களுக்கு என்னிடத்தில் பெலன் உண்டு

மனுஷன்: எனக்கு சரியான உணவு கிடைப்பதில்லை

இயேசு: மகனே, உன் வாயை விரிவாய்த் திற நான் அதை நிரப்புவேன்

மனுஷன்: எனக்கு இளைப்பாற நல்ல இடம் இல்லையே?

இயேசு: நானே நல்ல இளைப்பாறுதல்

மனுஷன்: சத்துருவோடு போராட முடியவில்லையே

இயேசு: நீ சும்மா இரு, நான் உனக்காக யுத்தம் பண்ணுவேன்

மனுஷன்: அடிக்கடி எனக்கு நோய் வருகிறது

இயேசு: நானே உன் பரிகாரியாகிய தேவன்

மனுஷன்: எனக்கு வேலை செய்ய பலம் இல்லையே

இயேசு: உன்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்து நானே

மனுஷன்: என் வாழ்க்கையில் அடிக்கடி செங்கடல்கள் வருவதுண்டு

இயேசு: அந்த செங்கடல்களை கடக்க உதவும் விசுவாச கப்பல் நானே என்பதை மறக்க வேண்டாம்

மனுஷன்: நான் சாப்பிடுகிற உணவு அடிக்கடி எனக்கு பசி உண்டாக்குகிறது

இயேசு: என்னை சாப்பிடுகிறவர்களுக்கு பசியே உண்டாவதில்லை

மனுஷன்: நான் அடிக்கடி கடன் வாங்க நேரிடுகிறது

இயேசு: என்னிடத்தில் வருகிறவர்களுக்கு நீயோ கடன் வாங்காதிருப்பாய் என்கிற வாக்குத்தத்தம் கொடுக்கப்படுகிறது

மனுஷன்: எனக்கு சரியான வேலை கிடைப்பதில்லை

இயேசு: என்னுடைய ஸ்தாபனத்தில் மாத்திரமே உனக்கு தகுந்த வேலை இருக்கிறது

மனுஷன்: ஆண்டவரே நீர் சொன்னது போல உம்முடைய ஸ்தாபனத்தில் சேர்ந்து விட்டேன், ஆனாலும் நான் என்னுடைய நிலையில் நிற்கமுடியாமல் அடிக்கடி விழுந்து விடுகிறேன்

இயேசு: சரியான அபிஷேகத்தைப் பெற்றுக் கொள், அப்பொழுது விழமாட்டாய்

மனுஷன்: எனக்கு நல்ல வீடு இல்லையே

இயேசு: உனக்காக அழகான இடிந்து போகாத வீட்டை பரலோகத்தில் நான் கட்டி வைத்திருக்கிறேன்.

மனுஷன்: ஆண்டவரே என்னை எப்பொழுது அங்கு அழைத்துச் செல்வீர்

இயேசு: உன்னை நான் பெலப்படுத்தினது போல நீயும் சென்று அநேகரை எனக்காகப் பெலப்படுத்து, அப்பொழுது நான் வந்து உங்களை அழைத்துச் செல்வேன்

மனுஷன்: இப்பொழுதே நான் போகிறேன், ஆண்டவரே

இயேசு: மகனே, நானும் உன்னுடன் வருகிறேன்

குறிப்பு: தேவனுக்காக நாம் வேலை செய்யும் போது, நாம் தனியாக அதைச் [ வேலை ] செய்வதில்லை என்பதை மறக்க வேண்டாம், தேவனும் நம்மோடு கரம் கோர்ப்பார்.

 

 


Posted on: 03/05/2014

*** கணிதப்பாடம் - பூவுலகத்திலும், விண்ணுலகத்திலும் எப்படி நடத்தப்படுகிறது என்பதைப் பார்க்க போகிறோம் ***

 

1. பூவுலகம் -  5+2 = 7

விண்ணுலகம் -  5+2 = 5000 [ 5 அப்பம் மற்றும் 2 மீன்களை தேவன் 5000 பேருக்கு கொடுத்தார் -  மத் 14:17-21 ]

2. பூவுலகம் - 1 = 1

விண்ணுலகம் -  1 = 1,85,000, 1 = 450 [ ஒரு தூதர் 185000 பேரை அடித்தார், அதே போல ஒரு எலியா 450 பாகால் தீர்க்கதரிசிகளை அடித்தார் -  ஏசா 37:36, 1இரா 18:17-40 ]

3. பூவுலகம் -  20 =20

விண்ணுலகம் -  20 = 100 [ தேவன் எலிசாவைக் கொண்டு 20 அப்பங்களை 100 பேருக்கு பங்கிடச் செய்தார் -  11 இரா 4:42-44 ]

4. பூவுலகம் -  நட்சத்திரங்களின் எண்ணிக்கை எண்ணற்றவை [ infinite ]

விண்ணுலகம் -  தேவன் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார் - சங் 147:4 ]

5. பூவுலகம் -  ஒரு உயிரி தோன்ற 9 மாதங்களுக்கு மேல் ஆகிறது

விண்ணுலகம் -  ஒரு நாள் அல்லது அதற்கு குறைவான நேரமே ஆகிறது [ 6 ஆம் நாள் ஆதாமை தேவன் படைத்தார் - ஆதி 1:24-31 ]

6. பூவுலகம் - ஒரு மனுஷன் இந்தியாவிலிருந்து ஓமனுக்கு செல்ல அதாவது மனுஷன் கண்டுபிடித்த வாகனமாகிய வானூர்தியின் மூலம் செல்ல வேண்டுமானால் குறைந்தது 4 மணிக்கூர் ஆகிறது ]

விண்ணுலகம் - பரலோகத்தில் எத்தனை தூரமாக இருந்தாலும் சரி ஒரு வினாடியோ அல்லது அதற்கு குறைவான நேரமோ போதும் [ அப். பிலிப்பு எத்தியோப்பிய அமைச்சருக்கு சுவிசேஷம் சொல்லி முடித்தவுடனே பரிசுத்த ஆவியானவர் அவரை கொண்டு சென்றதை நாம் அறியலாம் - அப் 8:30 ]

குறிப்பு: என் அருமை விசுவாசிகளே தேவனுடைய வல்லமைகளை உலகத்தோடு ஒப்பிடாதீர்கள், ஏனென்றால் தேவன் சொல்லுகிறார் என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல - ஏசாயா 55:8 


                   Posted on: 06/04/2014

தேவன் நடத்தும் உணவகம்

 

உணவகத்தின் அதிகாரி                    : வானத்திலிருந்து இறங்கி வந்த  அப்பம்[ இயேசு கிறிஸ்து ]  யோவான் 6:58

உணவகத்தின் பெயர்                        : அப்பத்தின் வீடு

உணவகத்தில் வேலை செய்கிறவர்கள்       : அப்பம் என்கிற இயேசுவை சுமக்கிறவர்கள்

உணவகத்தில் இருக்கும் அறைகள்           : 2, பழைய மன்னா. புதிய மன்னா

உணவகத்தில் வழங்கப்படும் உணவு வகைகள்                                  : ஜீவ அப்பம் C யோவா 6:35,48

                                            மெய்யான அப்பம் C யோவ:32

                                            மறைவான மன்னா C வெள:17

                                            புளிப்பில்லாத அப்பம்-1கொர:8

                                            கிறிஸ்துவின் அப்பம்-

                           1 கொரி 10:16

                           கர்த்தருடைய அப்பம் C

                           1 கொரி 11:27

                           ஞானபோஜனம் C 1 கொர��:3

                            மெய்யான போஜனம் C

                            யோவான் 6:55

உணவகத்தில் வழங்கப்படும் பானங்கள்       : ஜீவத்தண்ணீர் C யோவா 4:10

                                               ஊற்றுத்தண்ணீர் C சக 13:1

                                               ஞானபானம் C 1கொரி 10:4

                                               மெய்யான பானம் C

                                               யோவான் 6:55

                                               கிறிஸ்துவின் இரத்தம் C

                                               1 கொரி 10:16

                                                இரட்சிப்பின் தண்ணீர் C

                                                ஏசா 12:3

உணவகம் இருக்கும் இடம்                     : சீயோன் பர்வதம் [சங?:13]

உணவகத்தின் சிறப்பு:

இந்த உணவகத்தின் உணவை சாப்பிடுகிறவர்களுக்கு மறுபடியும் பசி உண்டாகாது C யோவான் 6:35

இங்கு பானம் பண்ணுகிறவர்களுக்கு மறுபடியும் தாகம் உண்டாகாது C யோவான் 6:35

இங்கு வந்து சாப்பிடுகிறவர்களுக்கு நித்திய மரணம் இல்லை C யோவான் 8:51

இங்கு எல்லாமே இலவசமாக கொடுக்கப்படுகிறது C ஏசா 55:1

 

குறிப்பு : இந்த உணவகம் எப்பொழுதும் உங்களுக்காக திறந்தே இருக்கிறது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டும்.


Posted on: 28/02/2014
 

தேவன் நடத்தும் மருத்துவமனை

1.மருத்துவமனையின் பெயர்: மாறாத அன்பு

2.மருத்துவரின் பெயர்: பரிகாரியாகிய கர்த்தர் [ யாத்திராகமம் 15:26 ]

3.செவிலியரின் பெயர்: இரட்சிக்கப்பட்ட விசுவாசி

4.நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுகிற

வரிசை எண்கள்    : ஆதி 1:1 C வெளி 22:21

5.வசூலிக்கப்படும் பணம்: நம்பிக்கை [ விசுவாசம் ]

6.மருத்துவமனையில் இருக்கும்

ஆம்புலென்ஸின் பெயர் : பரிசுத்த ஆவி

7.மருந்தகத்தின் பெயர் [ பார்மஸி ]: பரிசுத்த வேதாகமம்

8.மருந்தகத்தில் இருக்கும்

மருந்துகள்           : பிசின் தைலம் [ எரேமியா 8:22 ]

                      தேவனுடைய வார்த்தை [ சங்கீதம் 107:20 ]

                      இனியச் சொற்கள் [ நீதிமொழிகள் 16:24 ]

                      தேவனுடைய தழும்புகள் [ ஏசாயா 53:5 ]

9.மருத்துவமனை அமைந்துள்ள இடம்                 : பெத்தேல்

10.மருத்துவமனையின் காவல்காரன்: ஜெபவீரன்

11.மருவத்துவ மனை இயங்கும் நேரம்       : இரவும் பகலும் [ 24 மணி நேரம் ]     

  


 
Posted on: 11/02/2014
 

தேவனுடைய நூல்நிலையம்

 

நூல் நிலையத்தின் சொந்தக்காரர் C கர்த்தராகிய இயேசு கிறிஸ்து

நூல் நிலையத்தின் பெயர் C பரிசுத்த வேதாகமம்

உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை C இரட்சிப்பு

செலுத்தப்பட வேண்டிய பணம் C விசுவாசம்

இருக்கையின் பெயர் C பரிசுத்தம்

நூல் நிலையத்தில் இருக்கும் அறைகள் C 2, பழைய மற்றும் புதிய ஏற்பாடு

நூல் நிலையத்தில் இருக்கும் புஸ்தகங்களின் எண்ணிக்கை C 66

பழைய அறையில் இருக்கும் புஸ்தகங்கள் C 39 [ 929 பிரிவுகள் ]

புதிய அறையில் இருக்கும் புஸ்தகங்கள் C 27 [ 260 பிரிவுகள் ]

நூல் நிலையத்தில் புஸ்தகங்கள் அமைக்கப்பட்டுள்ள

வரிசைகள்  -  ஆகமங்கள் C 5

               வரலாற்று புஸ்தகங்கள் C 14

               பாடல் புஸ்தகங்கள் C 5

               தீர்க்கதரிசன புஸ்தகங்கள் C 18

               இயேசு கிறிஸ்துவின் சுவிஷேங்கள் C 4

               அப்.பவுலின் நிருபங்கள் C 14

               பொதுவான நிருபங்கள் C 6

நூல் நிலையம் நிறுவப்பட்டுள்ள இடத்தின் பெயர் C பரலோகம்

நூல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வாகனத்தின்

பெயர் C பரிசுத்த ஆவி

வாகனம் வந்து நிற்கும் இடத்தின் பெயர் C ஜெபம்

நூல் நிலையத்தின் அதிகாரியை தொடர்பு

கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் C ஆதியாகமம் 1:1 C வெளி 22:21