Tamil Christian Website

Tamil Christian Website

Posted on: 29/04/2013

                                                     

ஆவிக்குரிய வரங்கள்

 

1 கொரி 12:1 அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.

 

வரையறை: Definition

 

தேவன், பரிசுத்த ஆவியானவரின் செயல்பாட்டினால் விசுவாசிகளுக்கு கொடுக்கிற திறமைகள் அல்லது குணாதிசயங்கள்.

 

பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்தும் திறமை.

விசுவாசிகளின் சமூகத்தை, ஆராதிப்பை, ஊழியத்தை உயர்த்தி அதன் மூலமாக கிறிஸ்துவின் சபையை வளப்படுத்துவதற்காக, விசுவாசிகளுக்கு தேவனால் கொடுக்கப்படும் வல்லமை. ( அகில உலக வேதாகம கலைக்களஞ்சியம் ).

 

சபையை கட்டுவதற்காக, பரிசுத்த ஆவியானவரால் விசுவாசிகளுக்கு கொடுக்கப்படும் விசேஷித்த வரங்கள். ( நெல்சன் வேதாகம அகராதி ).

 

தங்களுடைய தகுதிகளின் அடிப்படையில் அல்லாமல், விசேஷித்த வரங்களாக ஒருவருக்கு கொடுக்கப்படும் அசாதாரண வல்லமைகள்.

 

வரங்கள் என்ற வார்த்தைக்கான கிரேக்க வார்த்தை - ※கேரிஸ்மா§.                                                           ஆவிக்குரிய  என்ற வார்த்தைக்கான் கிரேக்க வார்த்தை 每 ※ப்னுமாடிகஸ்§.  இவ்விரண்டு வார்த்தைகளும் சேர்த்த அர்த்தம் ※தேவன் கொடுக்கிற கிருபையின் ஈவு§.

 

ஒரு விசுவாசியின் வாழ்க்கையில், பரிசுத்த ஆவியானவரை வெளிப்படுத்திக்காண்பிக்கின்ற இரண்டு காரியங்கள்

1. பரிசுத்த ஆவியின் கனி ( கலா 5:22 )          2.  பரிசுத்த ஆவியானவரின் வரங்கள்.

 

திருச்சபையின் தொடக்க காலத்தில், சுவிசேஷம் பிரசங்கிப்பது என்பது எப்போதும் அடையாளங்களாலும் அற்புதங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டதாகவே இருந்தது ( மாற்கு 16:20 ). இயேசுகிறிஸ்துவே, தன்னுடைய கற்பித்தலையும் அதிகாரத்தையும்  உறுதிப்படுத்துவதற்காக, பரிசுத்த ஆவியானவரின் அற்புத வெளிப்பாடுகளை பயன்படுத்தினார் ( யோவான் 5:36 ; 10:37; அப் 10:38; எபி 2:4 ). கிறிஸ்துவின் சுவிசேஷம் வெறும் வார்த்தைகளால் மாத்திரம் பிரசங்கிக்கப்படுவது தேவனுடைய விருப்பம் அல்ல ( அப் 4:30; 1 கொரி 4:20 ).

1 கொரி 12:7 ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.    இவ்வசனத்தில் இருக்கும் ※அநுக்கிரகம்§ என்ற வார்த்தைக்கான ஆங்கில வார்த்தை manifestation§. இதன் கிரேக்க வார்த்தை ※பேனெரோஸிஸ்§. இவ்வார்த்தையின் அர்த்தம் ※கண்காட்சி, வெளிக்காட்டப்படுதல், ஆதாரம் கொடுத்தல். இதன் அர்த்தம் ※ ஒன்று இருக்கிறது, உண்மையானது என்பதற்கான ஒரு அடையாளம்§.

 

பரிசுத்த ஆவியானவரின் ஒரு முக்கிய ஊழியம் ※கண்ணுக்கு புலப்படாத தேவனைப்பற்றிய சத்தியங்களை, விழுந்த உலகத்துக்கு செயல்பாடுகள் மூலம் தெளிவுபடுத்தி காண்பிப்பது.§ மறுபடியும் பிறந்த, பரிசுத்த ஆவிக்குள் ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொரு விசுவாசிக்கும் வரங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அவர்கள் அதை உணர்ந்திருந்தாலும் அல்லது உணராமல் இருந்தாலும் இது உண்மை. தேவனே எனக்கு ஆவிக்குரிய வரங்களைத்தாரும், தாரும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பது முக்கியம் அல்ல. மாறாக நம்மிடத்தில் என்னென்ன வரங்களை தேவன் ஏற்கனவே தந்திருக்கிறார் என்று கண்டு பிடித்துக்கொள்வதும், அவற்றை பெற்றுக்கொள்வதும்தான் முக்கியம்.  மற்றவர்களுக்கு உபயோகப்படுவதற்காக அவைகள் நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் இருந்து, பரிசுத்த ஆவிக்குள் ஞானஸ்நானம் பெற்றிருக்கும்  ( அப் 2:4 ) ஒவ்வொரு விசுவாசிக்கும், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தையும் வல்லமையையும் வெளிப் படுத்திக்காட்டுகிற திறமை - வரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இதற்கு நாம் முக்கியமாக செய்ய வேண்டியது ※விசுவாசிப்பது§.

ஆவிக்குரிய வரங்களை ஒரு விசுவாசி பெற்றுக்கொள்வதற்கான மற்றொரு வழி ரோமர் 1:11ல் சொல்லப்பட்டிருக்கிறது. ※நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்,§. ஆவிக்குரிய வரங்கள் ஒரு விசுவாசியின் மூலமாக மற்றொரு விசுவாசிக்கு கொடுக்கப்பட, கடத்தப்பட முடியும்.  மூப்பர்கள் ஒருவர் மேல் கைகளை வைத்து அவரை ஊழியத்துக்காக சமர்ப்பிப்பதன் முக்கிய ஒரு காரணம் இதுதான்.                                        1 தீமோ 4:14 மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே.

 

1 கொரி 12:7 ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.   இவ்வசனத்தின் ஆங்கில மொழியாக்கம் But the manifestation of the Spirit is given to every man to profit withal.  என்பதாகும். இதில் கடைசியாக குறிப்பிடப்பட்டிருக்கும்  withal என்ற வார்த்தையின் அர்த்தம் ※எல்லோருக்கும் பொதுவான நன்மை§. ஆவிக்குரிய வரங்கள் ஒரு விசுவாசியை பெலப்படுத்தி உறுதிப்படுத்துகின்றன. ஆனாலும் ஆவிக்குரிய வரங்களின் முக்கிய நோக்கம் ※ மற்றவர்களின் உபயோகத்துக்கு, உதவி செய்வதற்கு§. அவைகள் நமக்குத்தாமே ஊழியம் செய்வதற்கு அல்ல. ஆவிக்குரிய வரங்கள் மற்றவர்களுக்கு உபயோகப்படுவதன் மூலம், தேவன் நம்மூலமாக கிரியை செய்ய நாம் அனுமதிக்கிறோம்.

 

ஆவிக்குரிய வரங்களின் செயல்பாட்டில் திரித்துவம்.                                                                         எல்லா வரங்களும் பரிசுத்த ஆவியானவரிடம் இருந்து வருகின்றன ( 1 கொரி 12:4 ).

 

ஆவிக்குரிய வரங்களை உபயோகப்படுத்துவதில், நிர்வகிப்பதில் பல வழிகள் உண்டு. இவ்வழிகள் அனைத்தும் இயேசுகிறிஸ்துவினால் உபயோகப்படுத்தப்படுகின்றன ( 1 கொரி 12:5 ).                                                     

 

ஆவிக்குரிய வரங்களில் செயல்படுவதற்கு பல வழிகள் உண்டு. அவையாவும் பிதாவின் வழிகாட்டுதல் மூலம் நடக்கின்றன ( 1 கொரி 12:6 )

 

வரங்கள்

1 கொரி 12:8-10

8 எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், 9 வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,

10 வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.

 

வெளிப்பாட்டு வரங்கள்

ஞானத்தைப் போதிக்கும் வசனம். ஞானம் என்றாலே அதில் புரிந்து கொள்ளுதலும் சரியான தீர்மானம் எடுத்து செயல்படுவதும் அடங்கியிருக்கிறது. ஆகவே ஞானத்தை போதிக்கும் வசனம் என்பது ※ஒரு குறிப்பிட்ட மனிதருக்கு அல்லது சூழ்நிலைக்கு தேவையான தேவனுடைய புரிந்து கொள்ளுதலையும் வழிகாட்டுதலையும் அவர் இயற்கைக்கு மாறுபட்ட விதத்தில் கொடுப்பது§. இது சம்பந்தப்பட்ட மனிதருடைய ஞானமோ அல்லது சூழ்நிலையைப்பற்றிய அறிவோ அல்ல.  இயேசு கிறிஸ்து பல முறை இந்த வரத்தை உபயோகப்படுத்தியிருக்கிறார். மாற்கு 1:44, யோவான் 5:14.

ஒரு உதாரணம்: அப் 27:21-25 22 ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது.

25 ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்.

26 ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான்.

 ( 1 ராஜா 3:16-28; மத் 2:20; லூக்கா 22:10-12; யோவான் 2:22-24; யோவான் 4:16-19; அப் 26:16; 1 கொரி 5 )  

 

அறிவை உணர்த்தும் வசனம். ஒரு உண்மையைப்பற்றியோ அல்லது ஒரு நிகழ்ச்சியைப்பற்றியோ தேவனிடம் இருந்து கொடுக்கப்படும் இயற்கைக்கு அப்பாற்பட்ட வெளிப்பாடு§. இது ஒரு மனிதரைப்பற்றியோ அல்லது ஒரு சூழ்நிலையைப்பற்றியோ தேவன் கொடுக்கும் அறிவு. இந்த அறிவு இல்லாமல் சாதாரணமான முறையில் இந்த மனிதருக்கு இதைப்பற்றிய அறிவு ஒன்றும் கிடையாது.

அப் 9: 11 அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத்தேடு; அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான்;  12 அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும்  தரிசனங்கண்டான் என்றார்.  ( ஆதி 1:1-2;25; 1 சாமு 3:7-15; 2 ராஜா 6:8-12; மத் 16:16; யோவான் 1:1-3; அப் 5:3-4; 21;11; எபே 3; லூக்கா 19:5; யோவான் 4:16-18; மாற்கு 14:13 )

ஆவிகளைப்பகுத்தறிதல். ஆவிகளின் பிரசன்னத்தைப்பற்றியும் அவைகளின் நடவடிக்கைகளைப்பற்றியும் தேவனிடம் இருந்து கொடுக்கப்படும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு வெளிப்பாடு. அப் 16:16-18. 16 நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.

இந்த ※ஆவிகள்§ என்பதை சில வேத பண்டிதர்கள் ※அசுத்த ஆவிகள்§ என்று குறிப்பிடுகின்றனர். மற்றும் சிலர் இந்த ஆவிகள் என்பதை ※ ஆவிக்குரிய உலகத்தில் இருக்கும் காரியங்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட மனப்பாங்கு§ என்றும் குறிப்பிடுகின்றனர். உ.ம் பண ஆவி, பொறாமையின் ஆவி.

( மத் 9:4; லூக்கா 13:16; யோவான் 2:25; அப் 13:9-10; 1 தீமோ 4:1-4; 1 யோவான் 4:1-6 ).

 

ஞானத்தை போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், தீர்க்க தரிசனம் உரைத்தல் ஆகிய மூன்று வரங்களும் பெரும்பாலும் சேர்ந்தே வேலை செய்யும். அதாவது ஒருவர் இதில் ஏதாவது ஒரு வரத்தில் கிரியை செய்யும்போது மற்ற இரண்டு வரங்களும் கூட சேர்ந்து இருக்கும். உதாரணத்துக்கு ஒரு பிரச்சினையான சூழ்நிலையை எடுத்துக்கொள்வோம். அறிவை உணர்த்தும் வசனம் இந்த பிரச்சினையை வெளிப்படுத்தும். ஞானத்தை போதிக்கும் வசனம் அந்த பிரச்சினையில் தேவனுடைய ஞானத்தை எப்படி உபயோகிப்பது என்று வெளிப்படுத்தும், தீர்க்க தரிசனம் உரைத்தல் அந்த சூழ்நிலையில் கீழ்ப்படிதலுக்கான விளைவுகளை வெளிப்படுத்தும். இப்படியாக ஒன்றுக்கொன்று உதவும் விதத்தில் இம்மூன்று வரங்களும் கிரியை செய்யும்.

 

வல்லமை வரங்கள்

விசுவாசம். எவ்வித சந்தேகமோ கேள்வியோ இல்லாமல் தேவனை விசுவாசிக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை.

1 கொரி 13:2 நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

எல்லா விசுவாசிகளுக்கும் விசுவாசம் உண்டு. அதனால்தான் அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் ( எபே 2:8 ). உண்மையில் அவர்களுக்கு இயேசுவைப்போன்ற விசுவாசம் உண்டு ( ரோமர் 12:3 ).ஆனாலும் அந்த விசுவாசத்தில் செயல்பட வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் மனதை புதிதாக்கி தங்கள் ஆத்துமாவை முதிர்ச்சி நிலமைக்கு  கொண்டு செல்ல வேண்டும். இதனால்தான் பல இடங்களிலும் வேதாகமம் ※இப்படிப்பட்ட விசுவாசம்§ ( மத் 8:10 ), அற்ப விசுவாசம் ( மத் 8:26 )§ என்று குறிப்பிடுகிறது. நாம் வேறுபட்ட அளவிலான விசுவாசத்த உபயோகிக்க முடியும்.

ஆனால், இங்கே பரிசுத்த ஆவியானவரின் வரமாக குறிப்பிடப்பட்டிருக்கும்   ※விசுவாசம்§, நாம் இரட்சிக்கப்பட்டபோது பெற்றுக்கொண்ட விசுவாசத்தில் இருந்து வேறுபட்ட்து. இந்த வரமாகிய விசுவாசம் பரிசுத்த ஆவியானவரால் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில்  கொடுக்கப்படுவது. சாதாரண முறையில் நமது மனதை புதிதாக்குவதால் கிடைக்கிற விசுவாசம் இது அல்ல. இவ்வரமாகிய விசுவாசம், விசுவாசிப்பதற்கு தேவையான விசுவாசம் இல்லாமல் தடுமாறுகிறவர்களுக்கு உதவி செய்வதற்கான பிரத்யேக விசுவாசம்.

நமக்கு தேவையான பல காரியங்கள் நேரடியாக ※நம் விசுவாசத்தின்படியே§ கிடைக்கும் ( மத் 9:29 ). நம்முடைய விசுவாசம் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெலகீனமாக இருக்குமானால், அதை பெலப்படுத்த வேண்டும் அல்லது நமக்கு உதவி செய்யுமாறு விசுவாச வரம் உள்ள ஒருவரை நாம் நாட வேண்டும்.

( ரோமர் 4:17; யாக் 1:5-8; மத் 17:20; 21:22; மாற்கு 9:23; 11:22-24; எபி 11:6; 12:1-3 ).

 

குணமாக்கும் வரங்கள். இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் மனித உதவியோ, மருந்துகளின் உதவியோ இல்லாமல் நோயை குணப்படுத்தும் வல்லமை.

மாற்கு 16:18 சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.                                                                                                                                                    

இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் தேவ வல்லமை ஒருவர் மூலமாக கடந்து சென்று மற்றவர்களுக்கு குணமாக்குதலை கொண்டு வருவது. இது பன்மையில் ※வரங்கள்§ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லா விசுவாசிகளாலும் நோயாளிகள் மேல் கைகளை வைத்து அவர்கள் குணமாவதை காண முடியும்

( மத் 16:17-18; யோவான் 14:12 ). ஆனால் சிலர் நோயாளிகளை குணமாக்கும் ஊழியத்துக்கு அழைக்கப்பட்டிருப்பார்கள். இவர்கள் குணமாக்கும் வரங்களை உடையவர்களாக இருப்பார்கள். இது அவர்களது இவ்வகை ஊழியத்தை எடுத்துக்காண்பிக்கும்.

 

சில வேளைகளில் ஒரு அற்புதத்துக்கும் ஒரு குணமாக்குதலுக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை வரையறுத்துக்குறிப்பிடுவது எளிதானது அல்ல. குணமாக்குதல் என்பதை, ஒரு நோயாளியிடம் இருந்த அசுத்த ஆவி அல்லது நோய் விரட்டப்படும்போது அவர்களது சரீரம் பின்னர் இயற்கையாகவே ஒரு குறிப்பிட்ட சமயத்தில் படிப்படியாக சாதாரண நிலமைக்கு திரும்புவது. ஆனால் ஒரு அற்புதம் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலமையில் நடைபெறுவது. இதன் விளைவுகள் வழக்கமாக உடனடியாக இருக்கும். அற்புதத்துக்கு ஒரு உதாரணமாக குஷ்டரோகி மத் 8:3 ல் சுகமாக்கப்படுதலை குறிப்பிடலாம்.  குணமாக்குதலுக்கு உதாரணமாக, இயேசு பேதுருவின் மாமியின் காய்ச்சலைப்போக்கி அவர் சொஸ்தமானதை குறிப்பிடலாம். மத் 8:15 ன் படி இதில் குணமாக்குதலும் அற்புதமும் சேர்ந்து சம்பவித்திருக்கலாம்.

 

அற்புதங்களைச்செய்யும் சக்தி. இயற்கை விதிகளுக்கு மாறுபட்ட தலையீட்டினால் அற்புதங்களை நடைபெறச்செய்வது.

எபி 1.3: அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

அற்புதம் என்பது ※ இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட தேவனுடைய வல்லமையின் தலையீடு§. குணமாக்குதல் என்பது இயற்கை விதிகளுக்கு உட்பட்டு நடப்பது. ஆனால் அற்புதங்கள் இயற்கை விதிகளுக்கு உட்பட்டவை அல்ல. இயேசு கிறிஸ்து வேலைக்காரனுடைய வெட்டப்பட்ட காதை மீண்டும் ஒட்ட வைத்தது அற்புதம் ( லூக்கா 22: 51 ) . 5000 பேரை போஷித்து ( மத் 14:19-20 ), தண்ணீரின் மேல் நடந்த்து ( மத் 14:25 ), படகையும் படகில் இருந்தவர்களையும் கடலின் அக்கரையில் கொண்டு சேர்த்த்து ( யோவான் 6:21 ) போன்ற அனைத்தும் அற்புதங்கள். அற்புதங்கள் எப்போதும் உடனடியாக நடப்பவை.

( 1 கொரி 15:10, 27-31; சங் 107; யாத் 7:10-14:21; 2 ராஜா 4:1-44; 6:1-7; மத் 17:20; மாற்கு 9:23; 11;22-24; யோவான் 14:12 ).

 

அருளப்பாடு அல்லது குரல் வரங்கள்

தீர்க்க தரிசனம் உரைத்தல் தேவனால் அருளப்பட்டு பேசுபவருக்கு தெரிந்த ஒரு மொழியில் பேசப்படும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சொற்கள்.

1 கொரி 14:3 தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்குப்பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.

 

தீர்க்க தரிசன வரம் என்பது, இரு தீர்க்கதரிசியின் ஊழியத்தில் இருந்து ( எபே 4:11 ) மாறுபட்டது. 1 கொரி 14:3 ன் படி இந்த வரமானது மனுஷருக்கு பக்தி விருத்திக்கும், புத்தியும், ஆறுதலும் உண்டாக்குவதற் கானது. இது சபை கூடி வரவில் உபயோகப்படுத்தப்படுவது. ஒருவர் மற்றொருவருக்கு தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட வழி காட்டுதலை சொல்வாரானால் அது தீர்க்க தரிசன ஊழியத்துக்கு உட்பட்டதாகும்.

 

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் தீர்க்க தரிசன வரம் என்பது ஒரு போதும் ஒரு நீண்ட படிப்பித்தலாகவோ, கண்டிப்பாகவோ, எச்சரிக்கையாகவோ இருக்காது. அவை எல்லாம் ஒரு தீர்க்க தரிசியின் ஊழியத்துக்கு உட்பட்டவை. இது மற்றவரை உற்சாகப்படுத்தும் விதத்தில் எளிமையாக இருக்கும். ※அருமை மக்களே நான் உங்களை நேசிக்கிறேன், உங்கள் துதிகளை ஏற்றுக்கொண்டேன், நான் உங்களுக்கு ஊழியம் செய்வதற்காக இங்கே இருக்கிறேன், உங்களை ஆசீர்வதிக்கிறேன்§ என்பது போன்று எளிமையாக இந்த தீர்க்க தரிசன வரம் கிரியை செய்யும்.

 

பற்பல பாஷைகளைப் பேசுதல் தேவனால் அருளப்பட்டு பேசுபவருக்கு தெரியாத மொழியில் பேசப்படும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சொற்கள். அப் 2:4-11. பாஷைகளைப் பேசுவதில் பல விதங்கள் உண்டு ( மாற்கு 16:17 ). இந்த வரமானது சபைகளில் செயல்பட வேண்டிய ஒரு ஊழிய வரமாகும். இது தனிப்பட்ட முறையில் பேசும் அந்நிய பாஷையில் இருந்து வேறுபட்டது. தனிப்பட்ட முறையில் பேசும் அந்நிய பாஷையை, பரிசுத்த ஆவிக்குல் ஞானஸ்நானம் பெற்ற எந்த ஒரு விசுவாசியும் பேச முடியும்     ( மாற்கு 16:17 ). சபையில் பேசப்படும் அந்நிய பாஷை வரம் சிலருக்கு மாத்திரமே கொடுக்கப்படும் விசேஷித்த வரமாகும் ( 1 கொரி 12:30 ). இந்த அந்நிய பாஷையை வியாக்யானம் செய்யும்போது அது தீர்க்க தரிசனத்துக்கு இணையானதாகும் ( 1 கொரி 14:5 ). இது சபைக்கு புதிதாக வரும் விசுவாசிகளுக்கும், மற்ற விசுவாசிகளின் வழி காட்டுதலுக்கும் மிகுந்த பிரயோஜனமாக இருக்கும்.

 

பாஷைகளை வியாக்யானம் பண்ணுதல் தேவனால் அருளப்பட்டு, பேசுபவருக்கு தெரிந்த மொழியில் பேசப்படும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சொற்கள்

1 கொரி 14:13-13 அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன். 14 என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால், என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்.

பாஷைகளை வியாக்யானம் பண்ணுதல் என்பது மொழிபெயர்ப்பது அல்ல 每 அது வியாக்யானிப்பது. அதாவது மறுபாஷையில் சொல்லப்பட்ட விஷயத்தின் அர்த்தத்தை பேசுபவருக்கு தெரிந்த மொழியில் சொல்வது. ஆகவே வியாக்யானம் என்பது அந்நிய பாஷையை விட நீளமானதாகவோ சுருக்கமாகவோ இருக்கலாம். ஆனாலும் அது சரியான வியாக்யானமாக இருக்க வேண்டும். அந்நிய பாஷைகளைப்பேசும் வரமும், பாஷைகளை வியாக்யானம் பண்ணும் வரமும் சேர்ந்து கிரியை செய்யும்போது அது தீர்க்க தரிசனத்துக்கு இணையானதாக இருக்கும் ( 1 கொரி 14:5 ).

 

அடிப்படை வரங்கள் அல்லது ஊக்குவிக்கும் வரங்கள்

ரோமர் 12: 6 நமக்கு அருளப்பட்ட கிருபையின் படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.  7 ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,  8 புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.

 

எல்லா விசுவாசிகளும் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வரங்களில் கிரியை செய்ய முடியும். ஆனால் அது அவர்களுடைய ஊழியம் என்று இருக்க வேண்டியதில்லை. உதாரணத்துக்கு  எல்லா விசுவாசிகளுக்கும் மற்றவர்களுக்கு கற்பித்துக்கொடுக்க தெரிந்திருக்க வேண்டு ஆனால் அதனால் அவர்கள் போதகர்கள் என்று சொல்ல முடியாது. 1 கொரி 14:31 ல் நீங்கள் எல்லோரும் ஒவ்வொருவராக தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும் என்று பவுல் கூறுகிறார் அதேசமயம் எல்லோரும் தீர்க்கதரிசிகளாக அழைக்கப்பட வில்லை என்று 1 கொரி 12:29 ல் பவுல் தெளிவாக கூறுகிறார். எல்லா விசுவாசிகளும் இரக்கம் செய்ய வேண்டும், ஆனாலும் சிலருக்கு இரக்கம் செய்யும்படியாக இயற்கைக்கு அப்பாற்பட்ட வரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட வரங்களைத்தான் பவுல் இங்கே குறிப்பிடுகிறார்.

 

தீர்க்க தரிசனம். தேவனால் அருளப்பட்டு பேசுபவருக்கு தெரிந்த மொழியில் பேசப்படும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சொற்கள்.

இங்கே ※தீர்க்க தரிசனம்§ என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை ※ப்ரொபெற்றியா§ என்ப தாகும். இதன் அர்த்தம் §தேவனுடைய மனதையும் ஆலோசனையையும் பேசுவதை குறிப்பது§.  பழைய ஏற்பாட்டில் இதற்கான வார்த்தை வருங்கால நிகழ்வுகளை குறிப்பிட்டு சொல்லும் தீர்க்கதரிசிகளை குறிப் பிடுவதாக இருந்தது. ஆனால் புதிய ஏற்பாட்டில் இவ்வார்த்தை தேவனுடைய அருளப்பாட்டினால் பேசும் செய்தி கொடுப்பவர்கள் எவரையும் குறிப்பிடுவதாக இருக்கிறது. அதாவது இன்று, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தில் பேசும் எந்த ஒருவரையும் குறிக்க இவ்வார்த்தையை உபயோகப் படுத்தலாம். இது

1 பேதுரு 4:11 ல் பேதுரு சொல்லும் கருத்துக்கு இணையானது. நாம் இவ்வகை தீர்க்க தரிசனம் சொல்லும் போது தேவன் நமக்கு தந்திருக்கும் விசுவாச அளவுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். (ரோமர் 12:3)

 

ஊழியம். மற்றவர்களுக்கு உதவியாக வேலை செய்வது, நடைமுறை ஊழியம். ஒரு ஆலயத்தை சுத்தப்படுத்துது, ஏற்பாடுகளை செய்வது, ஆயத்தம், சமையல், போக்குவரத்து போன்ற பல வேலைகளை செய்வது. இன்னும் போதகருக்கு உதவிகளை செய்து கொடுப்பது, ஆராதனைகளில் செய்தி வேளைகளில் சபைக்கும் போதகருக்கும் வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பது போன்றவை.

2 தீமோ 4:11  லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன். இது மற்றவர்களுக்கு உதவியாக ஊழிய செய்யும் வேலையை குறிப்பிடுகிறது.

1கொரி 16:15 சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயாநாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே.

 

போதித்தல் விரிவுரை செய்தல், விவரமாய் விளக்குதல், அறிவுரை கூறுதல்.

அப் 13:1 அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லுகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.

போதிக்கிறவருக்கும், பிரசங்கிக்கிக்கிறவருக்கும் இருக்கும் வித்யாசம் 每 பிரசங்கிக்கிறவர் பிரகடனம் செய்கிறார் போதிக்கிறவர் விளக்குகிறார்.

புத்தி சொல்லுதல் தூண்டுதல், அறிவுரை கொடுத்தல், உற்சாகப்படுத்துதல், வேண்டுகோள் விடுத்தல், ஆறுதல் சொல்லுதல், ஜாக்கிரதையோடு இருக்க அறிவுறுத்தல்.

2 தீமோ 4:2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

அப் 13:15 நியாயப்பிரமாணமும் தீர்கதரிசனஆகமமும் வாசித்துமுடிந்தபின்பு: சகோதரரே, நீங்கள் ஜனங்களுக்குப் புத்திசொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லும்படி ஜெபஆலயத்தலைவர்கள் அவர்களிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.

பகிர்ந்து கொடுத்தல் தனக்கு கிடைப்பதை தேவனுக்கும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பது.  ஏழைகளுக்கு, இல்லாதவர்களுக்கு தேவைப்படும் பண அல்லது பொருள் உதவிகளை செய்வது.   (லூக்கா 6:38; 2 கொரி 8:2: 9:11-13 )                                                                                                           நீதி 22:9 கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.                                                                                                                                                                                                                    பகிர்ந்து கொடுக்கும் வரம் உள்ளவர்கள் வஞ்சனையில்லாமல் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று பவுல் சொல்லுகிறார்.

முதலாளி ஆளுகிறவர், நிர்வகிக்கிறவர், தலைமைப்பொறுப்புகளில் இருக்கிறவர், கண்காணி.                           அப் 20:28 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

இரக்கம் தவறு செய்தவர்கள் மேலும், அல்லது தவறிழைக்கப்பட்டவர்கள் மேலும் இரக்கம் காண்பித்தல். சுகவீனத்தில் இருப்பவர்களுக்கு, சிறைச்சாலையில் இருப்பவர்களுக்கு, ஆதரவற்றவர்களுக்கு, தேவவையில் இருப்பவர்களுக்கு  ஊழியம் செய்வதும் இதில் அடங்கும்.  மத் 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

 

ஊழிய வரங்கள்

எபே 4; 11 மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும், 12 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,

13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.

இயேசு கிறிஸ்து மனிதர்களுக்கு கொடுத்த வரங்கள் 每 அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர், மேய்ப்பர் போதகர். தேவன் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த அழைப்புகளாகிய வரங்களைக்கொடுத்து, பின் அவர்களை இயேசுவின் சபைக்கு வரங்களாக கொடுத்தார்.

 

அப்போஸ்தலர் கிரேக்: அப்போஸ்தலோஸ். இவ்வார்த்தையின் அர்த்தம் அனுப்பப்பட்டவர். அதாவது அனுப்பினவரின் பிரதிநிதியாக முழு உரிமையுடன் செயல்படுகிறவர். இங்கே இவ்வார்த்தையின் அர்த்தம் ※தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு அவர் என்ன செய்வாரோ அதை செய்யும்படிக்கு அனுப்பப்பட்டவர்§

உ.ம். 12 அப்போஸ்தலர்கள் ( மத் 10 ), அந்ரோனிகஸ், ஜுனியா ( ரோமர் 16:7 ), சீலா ( 1 தெச 2:6 ), பவுல் (கலா 1:1 )

 

தீர்க்கதரிசிகள் தேவனுக்காக பேசுபவர்கள் ( எபி 1:1; அப் 3:21 ). அவர்கள் முதலாவது நீதியை பிரசங்கிப்பவர்கள் ( அப் 15:32; 1 கொரி 14:3 ), சில வேளைகளில் வருங்கால நிகழ்வுகளை முன்னறிப்பு செய்தார்கள் ( அப் 11:28; 21:10; லூக்கா 24:44 ). தீர்க்கதரிசனம் ஆவியின் வரங்களில் ஒன்று. தீர்க்கதரிசிகள் இந்த வரத்தை உடையவர்கள், அதை உபயோகிப்பவர்கள். இதை ஊழியமாக செய்பவர்கள்   ( எபே 4:11; அப் 11:27; 13:1 ).

 

சுவிசேஷகர் மக்களை தேவனிடம் கொண்டுவந்து இரட்சிப்புக்குள் நடத்தும்படியான விசேஷ வரம் பெற்றவர்கள். எல்லா விசுவாசிகளும் சுவிசேஷம் சொல்ல வேண்டும், பரிசுத்த ஆவியின் வல்லமையில் மக்களை இரட்சிப்புக்குள் நடத்த வேண்டும். ஆனால் ஒரு சுவிசேஷகர் என்பவர், அந்த வரத்துடன் பரிசுத்த ஆவியின் விசேஷித்த அபிஷேகத்தில் செயல்பட்டு இதை தன் முதன்மை ஊழியமாக செய்கிறவர்.

 

மேய்ப்பர் போதகர்

மேய்ப்பர் ( பாஸ்டர் ) என்ற வார்த்தை முதல் நூற்றாண்டு சபையில் அதிகமாக உபயோகிக்கப்படவில்லை. கண்காணி 每 (பிஷப்) ( 1 தீமோ 3:1-2, தீத்து 1:7; 1 பேதுரு 2:25) என்ற வார்த்தையே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஒரு மேய்ப்பர் ( பாஸ்டர்) என்பவர் 1 தீமோ 3 ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குணங்களையும் உடையவராக இருப்பார்.

எபே 4: 13  அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.

இவ்வசனத்தில் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர் ஆகியோருக்கு முன்பாக தனித்தனியாக ※சிலரை§ என்ற வார்த்தை இருக்கிறது. ஆனால் ※மேய்ப்பராகவும் போதகராகவும்§ என்ற வார்த்தைகளுக்கு இடையில் குறியீடு ஒன்றும் இல்லை. இரண்டு வார்த்தைகளுக்கும் சேர்த்து முன்பாக ※சிலரை§ என்று ஒரேதரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் அர்த்தம் மேப்பர், போதகர் ஆகிய இரண்டும் சேர்த்து ஓரே வரம் என்று சில வேத பண்டிதர்கள் குறிப்பிடுகின்றனர்.  அதாவது மேய்ப்பர் போதகராகவும் இருக்க வேண்டும்.

 

அப்போஸ்தலர் நடபடிகளில் ஆவிக்குரிய வரங்களின் செயல்பாடுகள்

1. அந்நிய பாஷைகள் (அப் 2:4; 10:44-48; 19:1-7)

2. குணமாக்குதல்  (2:43; 3:6; 5:12-16)

3. அற்புதங்கள்  (2:43; 4:22; 5:12-16; 6:8)

4. தீர்க்க தரிசனம் (2:17-21; 3:19-21; 13:1)

5. அறிவை உணர்த்தும் வசனம்    (2:15-40; 5:3-11; 8:19-25)

6. ஞானத்தை போதிக்கும் வசனம் (3:12-26; 4:5-22; 6:10)

7. விசுவாசம்  (2:43; 3:6,16; 5:12-16)

8. ஆவிகளைப்பகுத்தறிதல்  (2:15; 3:4-6; 5:3-11)

 

ஆவிக்குரிய வரங்களைப்பற்றிய சில சத்தியங்களும், கேள்வி பதில்களும்

1. யாரால் கொடுக்கப்படுகின்றன ?

பரிசுத்த ஆவியானவரால் ( 1 கொரி 12:4,8-11 ).

8 எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
9
வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,10 வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.

 

2. யாரால் நடப்பிக்கப்படுகின்றன ?

தேவனால் ( 1 கொரி 12:4-6, 11 ).

 

5 ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.

 

3. நோக்கம்.

தேவனுடைய வசனத்தை உறுதிப்படுத்துவதற்காக ( மாற்கு  16: 17-20; யோவான் 14:12; அப் 1:1-8; ரோமர் 12:3-8; 15:18-19,29; 1 கொரி 1:7; 12:11,28-31; 14:1-40; எபி 2:3-4 ).

 

மாற்கு 16:20 அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

எபி 2: 4  அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப் போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

 

4. யார் வரங்களைப்பெற்றுக்கொள்ள முடியும் ?

மறுபடியும் பிறந்த, பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்ற, சந்தேகப்படாமல் விசுவாசிக்கிற ஒவ்வொரு விசுவாசியும்  எந்த வரத்தையும், எல்லா வரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்  ( 1 கொரி 12:8-11; 1:7; ரோமர் 1:11; 12:3-8; யோவான் 7:37-39; 14:12; மாற்கு 16:17-20 ).

ரோமர் 12:4 நமக்கு அருளப்பட்ட கிருபையின் படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடி யினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.

 

5. ஒருவர் எல்லா வரங்களையும் பெற்றுக்கொள்ள முடியுமா ?

முடியும். ( மத் 17:20; 21:22; மாற்கு 9:23; 11:22-24; யோவான் 14:12; 15:7,16; எபே 3:19; யாக் 1:5-8 ).

மத் 21:22 மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். 

 

6. ஒருவர் எல்லா வரங்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறாரா ?

ஆம்.  ( யோவான் 3:34; ரோமர் 15:29; அப் 14:9 ).

அப் 5:12; அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலோமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள்.

 

7. பழைய ஏற்பாட்டு காலத்தில் வரங்கள் இருந்ததா ?

ஆம். ( அப் 1:5; 2:4; 1 ராஜா 3:12; 17:1 每 1 ராஜா 13:25; அப் 3:21; எபி 11 ).

 

8. வரங்களை தவறான முறையில் பயன்படுத்தியிருக்கிறார்களா ?

ஆம். மனிதர்கள் உண்மையில்லாமல் அவ்வாறு பயன்படுத்தக்கூடும். ஆனாலும் அது தொடர்ந்து செய்யப்பட முடியாது. அது பலவித பிரச்சினைகளை உருவாக்கும். அதனால் பிரயோஜனம் ஒன்றும் இருக்காது.  ( பிரசங்கி 2:9; எண் 20:7-13; & உபா 32:48-52; 1 கொரி 13:1-3; 14:1-40 ).

1 கொரி 13:1-3;  நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.
2
நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. 3 எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. 

 

9. வரங்களை பெற்றுக்கொள்ளும்போது ஒரு அசுத்த ஆவியின் வெளிப்பாட்டில் செயல் பட்டு விடுவோம் என்று ஒருவர் பயப்படவேண்டுமா ?

உண்மையான ஒரு விசுவாசி பயப்பட வேண்டியதில்லை.  

லூக்கா 11: 11 உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? 12 அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? 13 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.   

 

10. வரங்கள் நிரந்தரமானவையா, அல்லது தற்காலிகமானவையா ?

ஆவிக்குரிய வரமா பெற்றிருக்கும் எந்த வரமும் நிரந்தரமானதே. அவைகள் தற்காலிகமானவைகள் அல்ல. அவைகள் வந்து போய், வந்து போய் இருப்பதில்லை. பெற்றுக்கொண்டவரிம் நிரந்தரமாக எப்போதும் இருக்கும். சில சம்யங்களில் மாத்திரம் வரும் பின் போய்விடும் என்பது இல்லை. ( யோவான் 14:16 )

ரோமர் 11:29  தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.

 

11. வரங்களை நமது சித்தப்படி உபயோகப்படுத்த முடியுமா ?

முடியும்  ( 1 கொரி 14:15, 23-32 ).

1 கொரி 14:15, இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.
 
2 தீமோ 1:6 இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.  

 

12. வரங்களை உபயோகப்படுத்துவதில் ஒருவர் அசதியாய் இருக்க முடியுமா ?

முடியும்   (2தீம皰:6 ).                                                           

1 தீமோ 4:14; மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே.

13. எப்போது வரங்கள் உபயோகப்படுத்தப்பட வேண்டும் ?

எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.  ஒருவரோடு தனியாக இருக்கும்போது (1 கொரி 12:7 ) சபையில், வெளியிடங்களில் கூடும்போது, தேவைப்படுகிறவர்களை சந்திக்கும்போது ( 1 கொரி  14:3-6, 12, 17, 26; ரோமர் 12:3-8 ).

 

14. எங்கே வரங்கள் உபயோகப்படுத்தப்பட வேண்டும் ?

எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் ( 1 கொரி 12:7, 12-31; 14:1-40 ).

 

15. வரங்களை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் ?

1. இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்று, தாகத்தோடு, விசுவாசத்தோடு ஜெபத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

2. மேற்குறிப்பிட்ட தகுதிகளோடு இருந்து, மூப்பர்கள் கைகளை வைத்து ஜெபிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்  ( 1 கொரி 12:31; 14:1; மத் 7:7-11; 1 தீமோ 4:14 ).

1 கொரி 12:31; இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.
14.1.
அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விஷேசமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.
மத் 7: 7 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; 8 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

1 தீமோ 4:14 மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே.

 

16. வரங்கள் இன்று அவசியமா ?

ஆம் மிக மிக அவசியம். முன்பு எவ்வாறு வரங்கள் அவசியமாக இருந்ததோ, இப்போதும் அவ்வாறே அவசியமாக இருக்கிறது ( மாற்கு 16:15 每 20; யோவான் 10:10; அப் 1:8; 10:38; ரோமர் 1:11; 1 கொரி 1:7; 12:1-31 ).

மாற்கு 16:20 அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

 

 

17. நமக்கு, நம் சபையில், நம் ஊழியத்தில் எந்த வரம் அவசியம் என்று அறிந்து அதை தெரிந்தெடுத்து பெற்றுக்கொள்ள முடியுமா ?

முடியும்             ( 1 கொரி 12:31; 14:1,12 ).

1 கொரி 14:1. அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விஷேசமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.

12 நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;

 

18. நாம் வரங்களை பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது ?

தேவன் வரங்களை உபயோகப்படுத்தி நம் மூலமாக மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதை அனுபவப்பூர்வமாக காணும்போதும், வரங்கள் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றுவதை காணும்போதும்   ( 1 கொரி 12:4-11, 28-31; 14:1-40 ).

 

19. இந்த காலம் முழுவதும் வரங்களின் செயல்பாடு இருக்குமா ?

இருக்கும்  (மத் 3:11; 28:20; மாற்கு 9:23; 11:22-24; 16:15-20; யோவான் 7:37-39; 14:12-17,26; 15 ;26; 16;13-15; அப் 1:4-8; 2:38-39; 5:32 ).

1கொரி 1:7 அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.

 

இன்றைய உலகில் சிலர் ஆவிக்குரிய வரங்களை விசுவாசிப்பதில்லை. சிலர் அவைகள் எங்களுக்கு தேவையில்லை என்று சொல்லுகிறார்கள். சிலர் ஆவிக்குரிய வரங்களைப்பற்றி வேதம் சொல்லுகிறதை சரியாக அறியாமல் தங்களுக்கு பிரியமான விதத்தில் போதிக்கிறார்கள். சிலர் ஆவிக்குரிய வரங்களை தவறான முறையில் பயன்படுத்தி அதன் மூலம் தேவ நாமமும், ஆவிக்குரிய வரங்களும் மற்றவர்களால் தூஷிக்கப்படும்படியாக செய்கிறார்கள். சிலர் ஆவிக்குரிய வரங்களை வைத்து நாடகமாடுகிறார்கள். சிலர் ஆவிக்குரிய வரங்கள் சில குறிப்பிட்ட மனிதர்களுக்கு மாத்திரம் சொந்தமானவைகள் என்று கூறி மக்களை ஏமாற்றி வைத்திருக்கின்றனர். சிலர் ஆவிக்குரிய வரங்களை வைத்து பணம் புரட்டுகிறார்கள். இவர்களது மத்தியில், ஆவிக்குரிய வரங்களை தேவனுக்கு பிரியமான விதத்தில் உபயோகிக்கிற பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்காக நான் தேவனை துதிக்கிறேன். இப்படி இருக்கும்போது, அன்பு சகோதரா, சகோதரி நீங்கள் மனிதரைப்பார்க்காமல் தேவனை#..  வேதத்தை பாருங்கள். பரிசுத்த ஆவியானவரைப்பற்றி, வரங்களைப்பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்பதை நன்றாக கற்று அறிந்து கொள்ளுங்கள். வரங்களை பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுங்கள்.    

1 கொரி 12:31 இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.

※நாடுங்கள்§ என்ற வார்த்தையின் அர்த்தம் ※ஆசைப்படுங்கள், விருப்பப்படுங்கள், தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள்§. இதன் மூலமாக அனைத்து வரங்களையும் பெற்றுக்கொள்ளுமாறு பவுல் கூறுகிறார். ஆனால் இது 1கொர񉚨:11ல் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு எதிர்மறையாக இருப்பது போல தோன்றும்.

1 கொரி 12:11 இவைகளையெல்லாம் அந்த ஒரே அவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.

ஆனால் இரண்டும் எதிர்மறையானது அல்ல. இவ்விரண்டு வசனங்களையும் சேர்த்து பார்க்கும்போது நாம் மனதிலாக்கிக்கொள்ளலாம் ※ யார் எல்லாம் வரங்களின் மேல் தாகத்தோடு தேவனை நாடுகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் பரிசுத்த ஆவியானவர் தமது சித்தத்தின்படி கொடுக்கிறார்       ( மத் 5:6 ).

 

ஆவிக்குரிய வரங்கள் அனைத்தையும் நமக்கு தருவதற்காகவே தேவன் வைத்திருக்கிறார். அனைத்து வரங்களையும் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு பிரியமான வரங்களை பெற்றுக் கொள்ளுங்கள். தேவன் உங்கள் மூலமாக இந்த விழுந்த உலகத்துக்கு வல்லமையாக ஊழியம் செய்ய அனுமதியுங்கள். நம்மை சுற்றி எத்தனையோ பேர் பாவத்திலும் பாவத்தின் அனைத்து விளைவு களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஊழியம் செய்ய தேவனுடைய வார்த்தையும், தேவனுடைய வார்த்தையை உறுதிப்படுத்தும் பரிசுத்த ஆவியின் வரங்களும் அவசியம். பெற்றுக் கொள்ளுங்கள். மனிதர், சாத்தான், பாரம்பரியங்கள், சபைகள், தயக்கம், பயம், வெட்கம் போன்றவை உங்களை தடுக்க அனுமதியாதீர்கள்.

( குறிப்பு: இந்த வேத பாடம் வரங்களைப்பற்றியதான அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான வேதபாடம் அல்ல. 1 கொரி 12:28 போன்ற இடங்களிலும், இன்னும் பல இடங்களிலும் வரங்களைப்பற்றி மேலும் அதிக விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விசுவாசிகள் தயவு செய்து சமயம் செலவழித்து மேலும் கற்று அறிந்து கொள்ளுங்கள் ).

Amen.  Be blessed.                                                                                                                      

Bro.D.Vergin Kumar.                                                                                                                                         If you need any clarifications, if you have any doubts kindly contact me at deeveekumar@yahoo.com             Ph: 968 25572195, 99663557.  Resources; Strong*s Concordance, The Bible Exposition commentary - New Testament, Dakes bible commentary, Andrew Wommack Bible commentary, Vine's Expository Dictionary of New Testament Words, Don krow*s Discipleship Evangelism Lessons, Wuest*s word studies from the Greek New Testament. International Standard Bible Encyclopedia, Nelson's Illustrated Bible Dictionary.  All Bible quotes are from King James Version. In Tamil Bible some verses may be above or below than the quoted reference.

--------------------------------------

 Download this article in PDF