Tamil Christian Website

Tamil Christian Website

Posted on: 21/04/2013

 


Posted on: 15/03/2013


Posted on: 05/03/2013


Posted on: 14/02/2013

          


Posted on: 10/02/2013


Posted on: 27/01/2013


Posted On: 18/01/2013


Posted on: 05/12/2012

      

        


Posted on: 24/11/2012

        

        

        


 

Posted on: 17/11/2012


Posted on: 23/10/2012


Posted on: 05/10/2012


அப்பிரயோஜனமான ஊழியக்காரன் என்று சொல் ( மாயமாலமான் தாழ்மை)

நீங்கள் உங்களுக்கு கட்டளையிட்ட யாவற்றையும் செய்த பின்பு நீங்கள் அப்பிரயோஜமான ஊழியக்காரன் செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்னார் என்பதை லூக் 17:10 ல் காணலாம்.

இதற்கு முந்தைய வசனங்களில் கடுமையாக வேலை செய்து பசியோடு வருகிற வேலைக்காரனை பார்த்து எஜமான் நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா? இவ்வாறு கடுமையாக ஊழியம் செய்தாலும் நீ உன்னை அப்பிரயோஜனமான ஊழியக்காரன் என்று இயேசு சொல்ல சொல்லுகிறார். இந்த கட்டளையை இயேசு கிறிஸ்து தன் ஊழியக்காரர்களுக்கு சொல்லுகிறார். மேலும், ஒரு ஊழியக்காரன் தேவன் கட்டளையிட்ட ஊழியங்களைத்தான் செய்யவேண்டும். அடுத்து, அந்த ஊழியங்களை செய்ததைக் குறித்து பெருமை கொள்ளாமல் தங்களைத் தாழ்த்தி நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்ல சொல்லுகிறார்.

பவுலும் இப்படியாக சொல்லுகிறார், 1 கொரி-9:16 ல் சுவிசேஷத்தை பிரசங்கித்து வந்தும் மேன்மை பாராட்ட இடமில்லை அது என்மேல் விழுந்த கடமையாக இருக்கிறது.

இன்று நாம் கர்த்தருக்காக ஊழியம் செய்து மனிதருக்கு முன்பாக எல்லா மகிமையும் தேவனுக்கே என்று தாழ்த்தினாலும் நம் இருதயத்தின் ஓரத்தில் நாம் செய்யும் ஊழியங்கள் குறித்து பெருமை இருக்கத்தான் செய்கிறது. இது தான் வேதத்தில் சொல்லப்பட்ட மாய்மாலமான தாழ்மை. இந்த மாய்மாலமான தாழ்மை அகற்றப்பட்டு நீதி 29:23 படி மனத்தாழ்மையுடன் ஊழியம் செய்கிறவனே தேவனால் கனப்படுத்தப்படுவான். இயேசுவை ஏற்றுக் கொண்ட ஒரு சகோதரர் ஒரு வாரம் கடுமையாக கூலி வேலை செய்துவிட்டு அந்த பணத்தைக் கொண்டு பல கிராமங்களுக்கு சென்று அடுத்த வாரம் வரைக்கும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்லி வேதாகமம் வாங்கிக் கொடுத்து ஊழியம் செய்கிறார். அவரிடம் அந்த ஊழியத்தைக் குறித்துக் விசாரித்தபோது அவர் சொன்னார் இயேசுவின் கல்வாரி அன்புக்கு முன்பாக நான் செய்யும் ஊழியம் நிகராகாது, அவர் எனக்குப் பெற்றுத்தந்த இரட்சிப்புக்கு முன்பாக நான் செய்யும் ஊழியம் அற்பமே என்றார்.

ஆனால் நாமோ, மனித கனத்தையும், புகழ்ச்சியையும் பெறுவதற்காக நாம் செய்த ஊழியங்களின் பெருமைகளை குறித்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்திவிட்டு கடைசியாக தேவ நாமம் மட்டும் மகிமை படட்டும் என்கிறோம். ஆனால், இயேசுவோ உங்களை பார்த்து நீங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரன் கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்ல சொல்லுகிறார். ஆமென்.


ஆராதனை/விடுதலையில்லா ஆராதனை

(யோசுவா 24-15 நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்.)

தேவனை ஆராதிக்க எங்களை போக விடு என்று பிடிவாதமாக போராடிய மோசேக்கு பார்வோன் கூறிய முதல் ஆலோசனை தேவனுக்கு எகிப்திலேயே பலியிடுங்கள் என்பதாகும். எகிப்து என்பது சாத்தானின் ஆளுகை மற்றும் உலகத்தை குறிக்கிறது. அதாவது நீங்கள் எனக்கு அடிமைகளாக இருந்து கொண்டே தேவனுக்கு ஆராதனையும் செய்யுங்கள். இப்படிபட்ட அடிமைத்தனமான விடுதலயற்ற ஆராதனை தான் ஏராளமான கிறிஸ்தவர்களிடம் காணப்படுகின்றது. இன்னும் பழைய பாவத்தில் இருந்து விடுதலை பெறாமலே தேவனை ஆராதிக்கிறார்கள்.

அரைகுறை விடுதலையுடன் ஆராதனை

பார்வோன் கூறிய முதல் ஆலோசனையை மோசே ஏற்று கொள்ளவில்லை, உடனே பார்வோன் இஸ்ரவேல் விரும்புகிறபடி எகிப்த்துக்கு வெளியே போகலாம். அதாவது கொஞ்ச தூரம் போய் தேவனுக்கு ஆராதனை செய்யலாம். பலர் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்று கொண்டு மனம் திரும்புதல் அனுபவத்திற்கு வருகிறார்கள். பழைய விதமான பாவ வாழ்க்கையிலிருந்து வெளியேறுகிறார்கள். ஆனால் வேகமான, தூரமான ஆவிகுரிய யாத்திரைக்குள் தங்களை உட்படுத்துவதில்லை, ஆனால் அவர்களுடையபின் மாற்றங்களும் வீழ்ச்சிகளும் பலரை ஆச்சரியப்படுத்துகின்றன, ஏனென்றால் இவர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்தபோதிலும் எகிப்துக்கு அருகே தொடர்ந்து நிற்கின்றார்கள்.

குடும்பமாக கூடிவராத ஆராதனை

மூன்றாவதாக பார்வோன், மோசேயும் ஜனங்களும் அவர்கள் விரும்பியபடி எகிப்த்தை விட்டு வெளியேறி தேவனை ஆராதிக்கலாம். ஆனால் பெண்களும் குழந்தைகளும் எகிப்திலேஇருக்கவேண்டும்என்றான். இன்றுஏராளமானகுடும்பங்களில்தேவஆராதனைஉண்டுஆனால்ஆயினும்முழுமைஇல்லை. கணவன்தேவனுடையவழிஎன்றால்மனைவிசாத்தானுடையவழி. மனைவிகடவுள்பக்கம்என்றால்பிள்ளைகள்சாத்தான்பக்கம். இப்படியாககுடும்பமாகதேவனைஆராதிக்கவிடாமல்சாத்தான்பிரிவினைகளைஏற்படுத்துகிறான்.

வேலையை தொடர்புபடுத்தாத ஆராதனை

இப்படியாக பார்வோன் கூறிய 3 ஆலோசனைகளை மோசே ஏற்க மறுத்தான். அப்பொழுது பார்வோன் நீங்கள் எல்லோரும் எகிப்த்துக்கு வெளியே போய் தேவனை ஆராதிக்கலாம். ஆனால் உங்கள் ஆடு, மாடுகள் மட்டும் எகிப்திலே இருக்கவேண்டும் என்றான். இதில் ஆடுகளும் மாடுகளும் ஜனங்களின் தொழில் நிலையை குறிக்கிறது. இன்று அனேக விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வந்த போதிலும் அவர்களை அவர்களின் உத்தியோக நிலையின் மூலமாகவோ அல்லது வியாபார அணுகுமுறை மூலமாகவோ சாத்தான் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவந்து விடுகிறான். உன் பக்தியையும், பரிசுத்தத்தையும் உண்மையையும் சபை வட்டாரத்துக்குள் மட்டும் காண்பி. அலுவலகத்திலும் மற்றும் வியாபாரத்திலும் உலகத்தோடு ஒத்து நட என்று சாத்தான் விசுவாசிகளை வஞ்சிக்கிறான்.

தேவனை ஆராதிக்கிற விஷயத்தில் நாமும் நமக்குரிய அனைத்தும் சாத்தானுடைய அதிகாரத்திலிருந்து விடுதலையாகி தேவனுடைய ஆளுகைக்கு உட்பட வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.

ஆகவே நாம்கர்த்தரைவிடுதலையோடும், உண்மையோடும்ஆராதித்து, தேவஆசீர்வாதத்தைபெற்றுக்கொள்ளுவோம். ஆமென்.


உடைக்கப்பட்ட பானை

கிதியோனின் சேனையை 3 பகுதிகளாக பிரித்து அதன் ஒவ்வொன்றிலும் 100 புருஷர்கள் இருக்கும் படி தேவன் கட்டளையிட்டார். நியா - 7:1. ஒவ்வொருவரும் தன் கையில் எக்காளத்தையும் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் எடுத்து கொண்டு சென்றார்கள். பானையை உடைத்து வெளிச்சத்தை காண்பித்து பின்பு தங்கள் எக்காளத்தை ஊதினார்கள் அப்போது எதிரிகள் எல்லாம் பயந்து கூக்குரலிட்டு சிதறி ஓடினார்கள். நம்முடைய ஜீவியமும், ஊழியமும் எப்படி இருக்க வேண்டும் என்பதையே இந்த சம்பவம் நமக்கு காட்டுகிறது.

நாம் எல்லாரும் மண்பாண்டங்கள் தான். தேவனுடைய மகிமையின் ஒளியாகிய பொக்கிஷம் இந்த மண்பாண்டங்களுக்குள் இருக்கிறது. 2 கொரி-4:6,7. இந்த மண்பாண்டமானது ஏராளமான உபத்திரவங்களால் மாத்திரமே உடைக்கப்பட முடியும், பல சூழ்நிலைகள் மூலம் தேவன் நம்மை உடைத்திட விரும்புகிறார், அப்பொழுது மாத்திரமே கிறிஸ்துவின் ஜீவனாகிய ஒளி நம் மூலமாக பிரகாசித்திட முடியும். எக்காளத்தை ஊதுவது என்பது கர்த்தருடைய மகிமையும் அவருடைய வார்த்தையையும் வெட்கம் ஏதுமின்றி தைரியமாய் பறைசாற்றுவதையே குறிக்கிறது. இன்னும் தேவன் இது போன்ற புருஷர்களையும், ஸ்திரீகளையும் உற்று நோக்கி தேடுகிறார். மோசே எகிப்தின் இளவரசனாக இருந்த போது தேவன் அவனை ஊழியத்திற்கு அழைக்கவில்லை. அவன் 40 வருடங்கள் தன் மாமனாருக்கு அடிமையாக வேலை செய்து உடைக்கப்பட்டு தன் திறமைகளை எல்லாம் இழந்துஅவன், நான் திக்கு வாயும், மந்த நாவு உள்ளவனாக இருக்கிறேன் என்று சொன்ன பொழுது தேவன் அவனை தன் ஊழியத்தை செய்ய அழைத்தார். மோசே உடைக்கப்படுவதற்கு முன்பு ஒரு எகிப்தியனை தான் கொன்றான். ஆனால், தான் உடைக்கப்பட்ட பிறகு ஒரு பெரிய ராணுவ சேனையே அவனால் அழிக்க முடிந்தது. ஆமென்.

Posted on: 20/07/2012

    

Posted on: 10/07/2012


Posted On : 27/06/2012


05/06/2012



         

         

         

         

                  

Top

                 

Top 

Top

______________________________________________________________________________________________________________

       

Top 

          

         


Top 

   

Top

 


Top 

          

Top

 

               

Top

Top 

Top 

Top 

Top 

Top 

New Year - 2012 Short Message:

         

Top

           

Top 

Top