Tamil Christian Website

Tamil Christian Website

Posted on: 10/05/2014

என்னுடைய பெயர் ஷரத் பாபு, நான் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவன். நான் ஓமனில் எல் அண்ட் டி என்கிற ஒரு தனியார் நிர்வனத்தில் மேற்பார்வையாளராக வேலைப்பார்த்து வருகிறேன், நான் சபைக்குச் செல்ல வேண்டும் என்றும் விரும்பினேன், இப்படியாக இருக்கையில் தமிழ் சகோதரர்கள் என்னை அணுகி எங்கள் சபைக்கு வருகிறீர்களா என்று கேட்டார்கள், எனக்கும் கொஞ்சம் தமிழ் தெரியும் என்பதால் நானும் ஆசையுடன் வருகிறேன் என்று சொன்னேன், சபைக்குச் சென்ற போது மிகவும் சந்தோஷம் அடைந்தேன் ஏனென்றால் ஒரு நல்ல ஆவிக்குரிய சபையாக இந்த தமிழ் சபை இருப்பதை உணர்ந்து கொண்டேன், இப்பொழுது என் சாட்சியை ஆரம்பிக்கிறேன், நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தைச் சார்ந்தவன் அல்ல, நான் ஒரு ஆச்சரியமான உண்மையான தேவனை அறியாத இந்து குடும்பத்தைச் சேர்ந்தவன், ஆகையால் நானும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்து வந்தேன், நான் என்னுடைய வாலிப வயதில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக அநேக காரியங்களை செய்து இருக்கிறேன், அதாவது தேவனுக்கு விரோதமாக தூஷண வார்த்தைகள் சொன்னதுண்டு, இப்படியாக என்னுடைய வாழ்க்கை  ஓடிக் கொண்டுருந்த வேளையில், நான் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன், அப்பொழுது ஒருநாள் திடீரென்று என்னுடைய வயிற்றில் வேதனை வந்தது, நான் சிறிய வேதனை என்றுதான் நினைத்தேன், ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த வேதனை மாறவே இல்லை, என்னுடன் இருந்த கிறிஸ்தவ நண்பர்களும் ஜெபம் எனக்காக ஜெபம் செய்தனர், அதையெல்லாம் நான் அசட்டை செய்யவில்லை. மாறாக நான் மருத்துவரை நாடிச் சென்றேன் அப்பொழுது மருத்துவர் என்னை சோதித்துப் பார்த்து விட்டு என்ன பிரச்சனை என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று சொல்லிவிட்டு, என்னிடம் சொன்னார்கள். நீ போய் தேவனிடம் பிராத்தனை செய் என்று சொல்லிவிட்டார்கள், நானும் போய் என்னுடைய தெய்வங்களுக்கு பூஜை எல்லாம் செய்துப் பார்த்தேன், ஆனால் அந்த வேதனை மாறவில்லை, மாறாக என்னுடைய நண்பர்கள் எனக்காக மறுபடியும் தேவனாகிய இயேசுவை நோக்கி ஜெபித்தார்கள் என்ன ஆச்சரியம் அந்த வேதனை உடனே மாறினது, இப்படியாக நான் அன்று தூங்கிக் கொண்டிருக்கும் போது ஆண்டவராகிய இயேசு என்னை மூன்று தரம் மகனே மகனே என்று அழைத்தார், இதுவரையிலும் என்னை ஒரு தெய்வமும் இப்படியாக பெயர் சொல்லி அழைத்ததில்லை, முதலில் என்னை ஒருவர் அழைத்திருக்கிறார் என்றால் அவரே ஜீவனுள்ள தேவன் என்பதை அறிந்து கொண்டேன், இப்படியாக நானும் என் மனைவியும் தேவனாகிய இயேசுவை ஏற்றுக் கொண்டோம், என் மனைவியின் சாட்சியை சொல்வேனானால் அதற்கு நேரம் போதாது, உடனே நான் என் மனைவியும் முடிவெடுத்தோம், என் இயேசுவுக்காக வாழ வேண்டும் என்று, அத்துடன் நிற்கவில்லை நானும் என் மனைவியும் சிறிய சிறிய ஊழியங்களை செய்துக் கொண்டிருக்கிறோம், தேவன் பெரிய அற்புதங்களை எங்கள் வாழ்க்கையில் செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது, எனக்காகவும் எங்களுடைய ஊழியத்துக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள், இத்துடன் என் சாட்சியை முடித்துக் கொள்கிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் மாத்திரம் மகிமைப்படுவதாக.