Tamil Christian Website

Tamil Christian Website

Posted on : 06/02/2016

குற்றமில்லாத மனுஷகுமாரன்

 

வேதம் சொல்லுகிறது, அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி நான் இவரிடத்தில் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான் லூக்கா 23:4

வேதத்தை நன்றாக வாசிப்பவர்களுக்கு புரியும் அதுஎன்னவென்றால் உலகத்திற்கு மீட்பு வரவேண்டுமானால் அங்கு இரத்தம் சிந்தியிருக்க வேண்டும் அதாவது பலி செலுத்தப்பட வேண்டும் அப்பொழுதுதான் அவனுக்கும் தேவனுக்கும் இடையில் எந்தவித சுவரும் இல்லாமல் இருக்கும்

அப்படியென்றால் எல்லா மனுஷர்களும் சாக வேண்டியது அவசியம் ஆகும், ஆனால் தேவன் என்ன செய்தார் தம்முடைய இரக்கத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தம்மையே பலியாக பாவித்து இந்த பாவ உலகத்திற்கு இரட்சிப்பைக் கொடுக்கும் படியாக, இரட்சகராக இம்மானுவேலாக பரலோகத்திலிருந்து இரங்கி வந்தார்.

எப்படி பழைய ஏற்பாட்டில் ஒரு மிருகம் மனுஷனுடைய பாவங்களை சுமந்து கடைசியாக பலிபீடத்தண்டையில் கொல்லப்படுகிறதோ அதேபோல இவரும் உலகத்தின் பாவத்தை சுமந்து திரிந்தார் அதுமட்டுமல்லாமல் கடைசியாக தம்மை சிலுவையில் குற்றமற்ற பலியாக ஒப்பிக்கொடுத்து நம்மை நீதிமான்களாக மாற்றினார், எதற்காகவென்றால் நாம் இந்த உலகத்தின் அதிகாரிக்கு சொந்தமாகி விடக்கூடாது என்பதற்காகவும், நாம் என்றும் அழியாத நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தம்மையே ஜீவபலியாக மாற்றினார்.

அடுத்ததாக நம்மை நீதிமான்களாக மாற்றுவதற்கான, சில காரணங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்

1.ஆபிரகாமிற்கு செய்யப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு கொடுப்பதற்காக, இதற்கான தகுதி உத்தமம்

2.பரிசுத்தமில்லாமல் கர்த்தருடைய வீட்டிற்கு அதாவது சொர்க்கத்திற்கு செல்ல முடியாது. ஆகவே நம்மை நீதிமானாய் மாற்றினார்.

மேலே சொல்லப்பட்ட அழியாத வாக்குத்தத்தங்களுக்கு நாம் வாரிசாக மாறவேண்டுமானால், வேதம் சொல்லுகிறது

நாம் கிறிஸ்துவினுடைய பிள்ளைகளாக மாற வேண்டும் எப்படியென்றால். கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசித்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே, ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேர்களோ அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே!-   கலாத்தியர் 3:26,27