Tamil Christian Website

Tamil Christian Website

Posted on: 10/01/2014

மறைவான மன்னா

 

1. இயேசு தம்முடைய விசுவாசிகளின் தேவைக்காக ஏற்படுத்திய நிறுவனத்தின் பெயர் என்ன?

பரிசுத்த வேதம் ஏசாயா 34:16 [ வாழ்கைக்கு தேவையான எல்லாம் உண்டு]

2. இயேசு தரும் அலங்கார வஸ்திரத்தின் பெயர் என்ன?

இரட்சிப்பின் வஸ்திரம் - ஏசாயா 61:10

பரிசுத்த வெண்வஸ்திரம் - ஏசாயா 61:10

3.வஸ்திரத்தை மணமூட்டும் தைலத்தின் பெயர் என்ன?

அபிஷேக ஆனந்த தைலம் - லேவியராகமம் 21:12

4.வஸ்திரம் விழாமல் இருக்க கட்ட வேண்டிய கச்சையின் பெயர்?

சத்தியம் - எபேசியர் 6:14

5.வஸ்திரங்களை வெளுக்க தேவையான சவுக்காரத்தின் பெயர் என்ன?

பரிசுத்த வசனம் - சங்கீதம் 119:9

6.ஆவிக்குரிய பொருட்களை வாங்க தேவையான பணத்தின் பெயர் என்ன?

விசுவாசம் - எபிரெயர் 11:6

7.நம்முடைய வேலையின் பெயர் என்ன?

ஜெபம் - பிலிப்பியர் 4:6

8.நம்முடைய வங்கியின் பெயர் என்ன?

பரலோகம் - மத்தேயு 6:20

9.நம்முடைய சரிரத்தை கழுவத்தேவையான தண்ணீரின் பெயர் என்ன?

இயேசுவின் இரத்தம் - 1 யோவான் 1:7

10.நம்முடைய பாதரட்சையின் பெயர்?

ஆயத்தம் - எபேசியர் 6:15

11.நம்முடைய தலைச்சீராவின் பெயர்?

இரட்சணியம் - எபேசியர் 6:17

12.நம்முடைய போதகரின் பெயர்?

இயேசு கிறிஸ்து - மத்தேயு 23:8

13.நம்முடைய மருத்துவரின் பெயர்?

பரிகாரியாகிய கர்த்தர் - யாத்திராகமம் 15:26

14.நம்முடைய காயங்களுக்கு பூசவேண்டிய தைலம்?

பிசின் தைலம் - எரேமியா 8:22

15.தேவன் நமக்கு தரும் வீட்டின் பெயர்?

ஜெப வீடு - ஏசாயா 56:7

16.இயேசு நமக்கு தரும் வஸ்திரத்தின் நிறம்?

வெண்மை - பிரசங்கி 9:8

17.நாம் வீடு கட்டுவதற்கு பயன்படுத்தும் கற்களின் பெயர்?

விலையேறப்பெற்ற கல்,பரிட்சிக்கப்பட்ட கல்,விசுவாச கல் - ஏசாயா 28:16

18.ஆடையை [கிழிந்த] தைப்பதற்கு பயன்படுத்தும் நுலின் பெயர்?

நியாயம் - ஏசாயா 28:17

19.தேவன் போட்டிருக்கிற முத்திரை மோதிரத்தின் பெயர்?

செருபாபேல் - ஆகாய் 2:23

20.தேவன் மனுஷனை உருவாக்குவதற்கு பயன்படுத்திய மண்ணின் பெயர்?

களிமண் - எரேமியா 18:6 [தேவனின் உமிழ் நீர்+மண்]

21.தேவனின் கெஸ்ட் ஹௌஸ் பெயர்?

சீயோன் - சங்கீதம் 132:13

22.தேவன் வைத்திருக்கும் சல்லடையின் பெயர் என்ன?

நாசம்- ஏசாயா 30:28

23.தேவன் நம்மை வரைவதற்காக பயன்படுத்தும் கருப்பலகையின் பெயர்?

உள்ளங்கை - ஏசாயா 49:16

24.நம்முடைய விளக்கின் பெயர்?

இயேசு கிறிஸ்து,வசனம் - 1 சாமுவேல் 22:29,சங்கிதம் 18:28,119:105

25.தேவதூதனின் பலம் என்ன?

1 = 1,85,000, [ஒரு லட்சத்து எண்பத்தையாயிரம் பேருக்கு சமம்] -ஏசாயா 37:36

26.தேவனுடைய ஆசிர்வாதத்தின் கால்குலேசன் என்ன?

நம்முடைய வாழ்கையின் கால்குலேசன் - 5+2 =7

நம்முடைய தேவனின் கால்குளேசன் - 5+2 = 5000 - மத்தேயு 14:21

27.தேவன் நமக்கு கொடுக்கும் தண்ணீரின் பெயர் என்ன?

ஜீவத்தண்ணீர் - யோவான் 6:35

28.தேவன் நமக்கு கொடுக்கு அப்பத்தின் பெயர் என்ன?

ஜீவ அப்பம் - யோவான் 6:35,57

29.நம்முடைய அஸ்திபாரத்தின் பெயர் என்ன?

இயேசு - 1 கொரிந்தியர் 3:11

30.இயேசுவின் தோட்டத்தில் இருக்கும் செடிகளின் பெயர் என்ன?

நீதி,துதி - ஏசாயா 61:11

31.தேவன் இஸ்ரவேல் ஜனங்களை தெரிந்துகொண்ட குகையின் பெயர் என்ன?

உபத்திரவம் - ஏசாயா 48:10

32.நம்முடைய சூரிய,சந்திரனின் பெயர் என்ன?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து - ஏசாயா 60:19

33.நம்முடைய ஆகமத்தின் பெயர் என்ன?

சாட்சி ஆகமம் - ஏசாயா 8:16

34.இஸ்ரவேலின் ஒளி யார்?

இயேசு - ஏசாயா 10:17

35.தேவனின் துடைப்பையின் பெயர் என்ன?

சங்காரம் - ஏசாயா 14:23

36.நம்முடைய நியாயாதிபதியின் பெயர் என்ன?

இயேசு - ஏசாயா 16:5

37.நம்முடைய காவல்காரரின் பெயர் என்ன?

இயேசு கிறிஸ்து - ஏசாயா 27:3

38.நம்முடைய மேய்ப்பர்,தோட்டக்காரரின் பெயர் என்ன?

இயேசு கிறிஸ்து - சங்கீதம் 23:1,ஏசாயா 27:3

39.தேவன் உண்டாக்கிய தோட்டத்தின் பெயர் என்ன?

ஏதேன் - ஆதியாகமம் 2:8

40.இஸ்ரவேலை தெரிந்து கொண்ட தேசத்தின் பெயர் என்ன?

மகாவறட்சியான தேசமாகிய வனாந்தரம் - ஒசியா 13:5

41.தேவன் ஆதாமுக்கு எப்படிப்பட்ட ஆடையைக் கொடுத்தார்?

பலமான தோல் ஆடையைக் கொடுத்தார் [னோ எக்ஸ்பரி டேட்] - ஆதியாகமம் - 3:21

42.நிர்வாணமாயிருந்த ஆதாம் தனக்கு உண்டுபண்ணின ஆடை எப்படிப்பட்டது?

கிழிந்து போகிற அத்தியிலை ஆடை [ எக்ஸ்பரி டேட் கொண்டது]- ஆதியாகமம் 3:7

43.பாவத்தின் நிமித்தம் திறக்கப்பட்ட கண்களின் பெயர் என்ன?

ஆவியின் கண்கள் மூடப்பட்டது, மாம்ச கண்கள் திறக்கப்பட்டது -       ஆதியாகமம் 3:7 [ ஆகவே அவன் வெட்கப்பட்டான்]

44.நம்முடைய நோயை குணமாக்கும் மருந்ததின் பெயர்?

தேவனுடைய வசனம் - சங்கீதம் 107:20

45.ஞானமும்,புத்தியும் விளையும் இடம் எது?

கர்த்தருக்கு பயப்படும் பயம்,பரலோகம் - யோபு 28:12,28

46.வேதவாக்கியங்களின் ஆசிரியர்?

பரிசுத்த ஆவியானவர் - 2 திமோத்தேயு 3:16

47.தேவனுடைய வாயினின்று புறப்படுகின்ற பிரமாணத்தின் பெயர் என்ன?

வேதப்பிரமாணம் - யோபு 22:22

48.நம்முடைய பசும்பொன், வெள்ளியின் பெயர் என்ன?

சர்வவல்லவராகிய இயேசு கிறிஸ்து - யோபு 22:25

49.பரலோகத்தை தேவன் எவ்வாறு அலங்கரித்தார்?

தேவ ஆவியினால் - யோபு 26:1

50.நம்முடைய ஆவி எங்கேயிருந்து வந்தது?

தேவனாகிய இயேசு கிறிஸ்துவிடம் - யோபு 27:2

51.தேவன் நமக்கு நியமிக்கும் எல்லையின் பெயர் என்ன?

கடந்து போகக்கூடாத எல்லை - யோபு 14:5

52.கர்த்தருடைய ஞானத்தின் அளவு என்ன?

உயரம் - வானபரியந்தம்

ஆழம் - பதாளபரியந்தம்

நீளம் - பூமியைப்பார்க்கிலும்

அகலம் - சமுத்திரத்தைப்பார்க்கிலும் - யோபு 11:7,8,9

53.ஆவிக்குரிய மனுஷனுடைய தைலத்தை கெட்டுப்போகச்செய்கிற ஈக்கள் பெயர் என்ன?

சொற்ப மதியீனமே - பிரசங்கி 10:1

54.நம்முடைய ஆண்டவரின் அன்பின் அளவு என்ன?

மரணத்தைப் போல் வலியது,பாதாளத்தைப் போல் ஆழமானது - உன்னதப்பாட்டு 8:6

55.சீயோன் குமாரத்தியின் அழுக்கை கழுவப் பயன்படுத்திய ஆவியின் பெயர்?

நியாயத்தின் ஆவி, சுட்டெரிப்பின் ஆவி - ஏசாயா 4:3

56.தேவனுடைய சிங்காசனத்தின் கால்களின் பெயர் என்ன?

நீதி,நியாயம் - சங்கீதம் 89:14

57.தேவன் தனக்கு முன்பாக வைத்திருக்கிற ஆர்மியின் பெயர்?

கிருபை, சத்தியம் - சங்கீதம் 89:14

58.தேவன் தன்னுடைய விதையை விதைக்கிற இடத்தின் பெயர்?

மனுஷனுடைய இருதயம் - மத்தேயு 13:18-40

59.தேவனுடைய ஊற்றீன் பெயர் என்ன?

ஜீவ ஊற்றாகிய இயேசு - நீதிமொழிகள் 4:23

60.ஜீவ ஊற்றீல் இருந்து தண்ணீர் எடுக்கும் பாத்திரத்தின் பெயர்?

இரட்சிப்பின் பாத்திரம் - சங்கீதம் 116:13

61.தேவனின் விளக்கின் பெயர்?

கட்டளை - நீதிமொழிகள் 6:23

62.தேவனுடைய வெளிச்சத்தின் பெயர்?

வேதம் - நீதிமொழிகள் 6:23

63.தேவனுடைய ஜீவவழியின் பெயர்?

போதகசிட்சை - நிதிமொழிகள் 6:23

64.நம்முடைய வேதாகமத்தின் பெயர்?

பரிசுத்த வேதகாமம் - ரோமர் 1:4

65.பாவம் என்கிற குளிரிலிருந்து நம்மைப் பாதுகாக்கிற போர்வையின் பெயர்?

அன்பு - நீதிமொழிகள் 10:12

66.நம்முடைய வீடு அசைக்கப்படாமல் இருக்க தேவன் கொடுக்கும் தூணின் பெயர்?

நீதி -நீதிமொழிகள் 10:30

67.பாவியான ஸ்திரீ எந்த தண்ணீரினால் தேவனுடைய கால்களைக் கழுவினாள்?

பாவக்கண்ணீரினால் - லூக்கா 7:44

68.தேவனுடைய பாதத்தை துடைப்பதற்கு பாவியான ஸ்திரீ பயன்படுத்திய துணியின் பெயர்?

தலைமயிர் - லூக்கா 7:44

69.தண்ணீரை திராட்சரசமாக மாற்றும் ஆலையின் பெயர்?

இயேசு கிறிஸ்து - யோவான் 2:1-10

70.பாவத்தை சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டியின் பெயர்?

இயேசு கிறிஸ்து - யோவான் 1:29

71.மணவாளனின் தோழன் யார்?

யோவான்ஸ்நானன் - யோவான் 3:27,28

72.மணவாளனின் மனைவியின் பெயர்?

உண்மையுள்ள,அன்புள்ள விசுவாசி - யோவான் 3:29,மத்தேயு 25:23

73.இஸ்ரவேல் ஜனங்கள் தண்ணீர் குடித்த கன்மலையின் பெயர்?

கிறிஸ்து - 1 கொரீந்தியர் 10:4

74.கிறிஸ்துவின் நறுமணத்தின் பெயர்?

உண்மையுள்ள விசுவாசிகள் - 1 கொரீந்தியர் 2:15

75.தேவன் நமக்கு கொடுக்கும் மார்க்கவசத்தின் பெயர்?

நீதி - எபேசியர் 6:14

76.தேவன் கொடுக்கும் கேடகத்தின் பெயர் ?

விசுவாசம் - எபேசியர் 6:16

77.தேவனுடைய அம்பறாத்தூணியில் இருக்கும் அம்பின் பெயர்?

இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் - சங்கீதம் - 127:5,6

78.மழை பெய்ய தூவப்படும் அமிலத்தின் பெயர்?

ஜெபம் - யாக்கோபு 5:18

79.உலகத்தில் மருந்து கண்டுபிடிக்கப்படாத நோயின் பெயர்?

பாவம் - ரோமர் 6:23

80.பாவத்தின் சம்பளம் என்ன?

மரணம் - ரோமர் 6:23

81.நீதியின் சம்பளம் என்ன?

நித்திய ஜீவன் - ரோமர் 6:23

82.விலையே கொடுக்கமுடியாத அழிந்து போகாத பொன் எது?

விசுவாசம் - 1 பேதுரு 1:7

83.நம்முடைய பிதாவின் பெயர்?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து - 1 பேதுரு 1:17

84.ஆட்டுக்குட்டியின் குணநலங்கள் என்ன?

குற்றமல்லாதது,மாசற்றது - 1பேதுரு 1:19

85.அழிவில்லாத வித்தின் பெயர்?

தேவ வசனம் - 1பேதுரு 1:23

86.நாம் வளரும்படியாக நமக்கு கொடுக்கப்படும் ஒளியின் பெயர்?

ஆச்சரியமான ஒளி, மெய்யான ஒளி - 1பேதுரC:9, யோவான் 1:9

87.நம்மை போதிக்கும் ஆசிரியரின் பெயர்?

அபிஷேகம் - 1யோவான் 2:27

88.மாம்சத்தில் வாழுகிறவர்களுக்கு பிறக்கும் குழந்தையின் பெயர்?

மரணம் - யாக்கோபு 1:15

89.குறைகள் இல்லாத பொருட்கள் கிடைக்கும் இடம் எது?

சொர்க்கம் - யாக்கோபு 1:17

90.உப்பு நீரும், நல்ல நீரும் சுரக்கும் ஊற்றின் பெயர்?

மனுஷனுடைய நாக்கு - யாக்கோபு 3:10

91.நோய் தீர்க்கும் மருந்து என்ன?

விசுவாசமுள்ள ஜெபம் - யாக்கோபு 5:16

92.தேவனுக்கு பிரியமுள்ள ஸ்திரீ அணியும் அணிகலன் என்ன?

சாந்தம், சமாதனம், பரிசுத்தம் - 1 பேதுரு 3:4

93.ஆவிக்குரிய வாழ்க்கையின் பெலவீனமான பாத்திரத்தின் பெயர்?

ஸ்திரீ - 1பேதுரு 3:7

94.நம்முடைய வழக்கறிஞரின் பெயர்?

இயேசு - 1 யோவான் 2:1

95.யாருக்கு விபத்து ஏற்படுகிறது?

நியாயப்பிரமாணம் என்கிற எல்லையைத் தாண்டுகிறவர்களுக்கு - 1யோவான் 3:4

96.பயமில்லாமல் இருக்க நமக்கு தேவையான ஆயுதம் என்ன?

அன்பு - 1யோவான் 4:18

97.நம்முடைய வஸ்திரத்தை கறைப்படுத்தும் வஸ்து எது?

மாம்சம், மாம்சசிந்தை - யூதா :23, ரோமர் 8:6

98.வேர் அருகே வைக்கப்பட்டு இருக்கிற கோடாரியின் பெயர்?

ஆண்டவராகிய இயேசு - லூக்கா 3:9

99.84 வயது விதைவை அன்னாளின் அனுதின உணவு?

ஜெபம், உபவாசம்,ஆராதனை - லூக்கா 2:37

100.பிள்ளைகளுக்கு வெளிச்சம் கொடுக்கும் படி எரிகிற தீவட்டியின் பெயர்?

இரட்சிப்பு -ஏசாயா 62:1

101.நாம் குளிப்பதற்கு தேவன் கொடுக்கும் எண்ணையின் பெயர்?

அபிஷேக எண்ணைய் - சங்கீதம் 23:5

102.நேர்மையாய் நடப்பவர்களுக்கு தேவன் கொடுக்கும் வெகுமதி?

சமாதானம் - ஏசாயா 57:2

103.தாறுமாறாய் ஓடும் வேகமான பெண் ஒட்டகம்?

இஸ்ரவேல் ஜனங்கள் - எரேமியா 2:23

104.பொய்க்குப் பிதா யார்?

சாத்தான் - யோவான் 8:44

105.ஒளியின் தூதன் யார்?

இயேசு -யோவான் 8:12

106.ஒளியின் வேஷத்தைத் தரித்திருப்பவன் யார்?

சாத்தான் - 2 கொரிந்தியர் 10:14

107.தேவனுடைய மரத்தில் விளையும் கனியின் பெயர்கள் என்ன?

ஆவியின் கனி- கலாத்தியர் 5:22,23

இரட்சிப்பின் கனி- ஏசாயா 45:8

மனந்திரும்புதலுக்கு ஏற்றகனி- மத்தேயு 3:8

ஸ்தோத்திரமாகிய உதடுகளின் கனி- எபிரெயர் 13:15

நீதியின் கனி- ஆமோஸ் 6:12, யாக்கோபு 3:18

கர்ப்பக்கனி- சங்கீதம் 127:4

ஜீவவிருட்ஷத்தின் கனி- வெளி 2:7

108.ஒழிந்து போகாத மொழியின் பெயர்?

அன்பு - 1கொரிந்தியர் 13:8

109.பிந்தின ஆதாமின் பெயர்?

உயிர்பிக்கிற ஆவியானவராகிய இயேசு கிறிஸ்து - 1 கொரிந்தியர் 15:45

110.ஆவியாகிய கனியின் சுவை என்ன?

அன்பு,சந்தோஷம்,சமாதானம்,நீடியபொறுமை,தயவு,நற்குணம்,விசுவாசம், சாந்தம்,இச்சையடக்கம் - கலாத்தியர் 5:22,23

111.சுகபோகமாய் வாழுகிற நபரின் பெயர்?

ஸ்திரீ - 1திமோத்தேயு 1:7

112.நாம் பலப்படுப்படுவதற்கு கொடுக்கப்பட்ட வைட்டமின் என்ன?

பலமும், அன்பும் தெளிந்த புதியுமுள்ள ஆவி - 1திமோத்தேயு 1:7

113.நம்மை எரியச்செய்கிற தீக்குச்சியின் பெயர் என்ன?

தேவனுடைய கண்கள் - வெளி 1:14

114.இருபுறமும் கூர்மையான பட்டயத்தின் பெயர்?

தேவனுடைய வார்த்தை - எபிரெயர் 4:12

115.ஏழு பொன் குத்துவிளக்குகளின் பெயர்கள் என்ன?

எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கியா - வெளி 1:11,20

116.தேவன் உலாவுகிற இடத்தின் பெயர்?

சபைகள், விசுவாசிகள் - வெளி 1:13,வெளி 2:1, 2கொரிந்தியர் 6:16

117.தேவனுடைய பரதீசின் மத்தியில் இருக்கும் மரத்தின் பெயர்?

ஜீவ விருட்சம் - வெளி 2:7

118.ஜீவவிருட்சத்தின் பெயர் என்ன?

இயேசு கிறிஸ்து - யோவான் 14:6, யோவான் 10:10,11

119.ஜெயம் கொள்கிறவனுக்கு தேவன் கொடுக்கும் பலன் என்ன?

நித்திய ஜீவன் - வெளி 2:10

120.மரணபரியந்தம் உண்மையாருக்கிறவர்களுக்கு கொடுக்கபடும் கிரீடம்?

ஜீவ கிரீடம் - வெளி 2:10

121.தேவன் யுத்தம் செய்வதற்கு பயன்படுத்தம் ஆயுதம் என்ன?

ஆவியின் பட்டயம் [ தேவ வார்த்தை ] - வெளி 2:16

122.மறைவான மன்னா யார்?

இயேசு - வெளி 2:17

123.உள்ளங்கைகளையும், இருதயங்களையும் ஸ்கேன் பண்னுகிற கருவியின் பெயர் என்ன?

பரிசுத்த ஆவி - வெளி 2:23

124.ஜெயம் கொள்கிறவனுக்கு பிதா கொடுக்கும் பரிசு என்ன?

விடிவெள்ளி நட்சத்திரம் [ இயேசு ] - வெளி 2:28,22:16

125.நம்முடைய பெயர்கள் எழுதப்பட்டிருக்கும் புஸ்தகத்தின் பெயர்?

ஜீவ புஸ்தகம் - வெளி 3:5

126.மிகவும் பிரபலமான ஆடையின் பெயர்?

வெண் வஸ்திரம் - வெளி 3:5

127.எபேசு சபையில் களவு போன பொருள்?

அன்பு - வெளி 2:4

128.சிமிர்னா சபையின் தரித்திரத்திற்கு காரணம் என்ன?

மாம்சத்தில் சபையை நடத்துவது - வெளி 2:10

129.பெர்கமு சபையின் குறைபாட்டிற்கு காரணம்?

மனுஷனுடைய கற்பனையை பின்பற்றுவது - வெளி 2:14

130.தியத்தீரா சபையின் வறட்சிக்கு காரணம் என்ன?

பிசாசுக்கு இடம் கொடுப்பது - வெளி 2:20

131.சர்தை சபையில் காணப்படுகிற வறட்சி என்ன?

ஆவியில் தூக்கம் - வெளி 3:3

132.தேவனுடைய கையில் இருக்கும் திறவுகோலின் பெயர்?

தாவீது[ இயேசு,பரிசுத்த ஆவி ] - வெளி 3:7

133.பிலதெல்பியா சபையின் குடம் நிறைம்பி வழிய காரணம் என்ன?

ஆவியின் நிறைவு - வெளி 3:8

134.லவோதிக்கேயா சபையின் வறுமைக்கு காரணம் என்ன?

நிர்விசாரம் - வெளி 3:15

135.இயேசு கிறிஸ்துவின் நாமங்கள்?

ஆமென், துதி, தேவனுடைய வார்த்தை - வெளி 3:14,19:13, எரேமியா 17:14

136.தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கும் கடலின் பெயர் என்ன?

பளிங்குக்கொப்பான கண்ணாடி கடல் - வெளி 4:6

137.வானத்தில் எத்தனை சிங்காசனங்கள் உள்ளன?

ஒரே ஒரு சிங்காசனம், அதில் ஒருவர் மாத்திரம் இருக்கிறார், அவரின் பெயர்- இயேசு கிறிஸ்து - 1யோவான் 5:20, வெளி 4:2, வெளி 7:17, எசேக்கியேல் 1:26, 1இராஜாக்கள் 22:19.

138.முத்திரை போடப்பட்டவர்களாகிய 1,44,000 பேர்கள் யார்?

இயேசுவின் இரத்தத்தில் கழுவப்பட்டவர்கள், பாவம் இல்லாதவர்கள் - வெளி 7:4

139.தேவனால் வரும் உபத்திரங்களை சகிக்கிறவர்களுக்கு கொடுக்கப்படும் ஆடையின் பெயர் என்ன?

வெள்ளை அங்கி - வெளி 7:13,14

140.தேவன் தூபகலசத்தில் வைத்திருக்கும் தூபவர்க்கத்தின் பெயர் என்ன?

பரிசுத்தவான்களின் ஜெபம் - வெளி 8:3

141.எட்டி என்றால் என்ன?

கசப்பு - வெளி 8:11

142.நாம் யுத்தம் செய்வதற்கு கொடுக்கப்பட்ட ஆயுதத்தின் பெயர்?

இயேசுவின் இரத்தம், தேவ வசனம் - வெளி 12:11

143.பாவம் செய்கிறவர்கள் போடப்படும் ஆலையின் பெயர்?

கோபாக்கினை - வெளி 14:19

144.தேவனுடைய வீட்டிற்கு செல்லும் வழியின் பெயர் என்ன?

நீதி, சத்தியம் - வெளி 15:3

145.தேவனுடைய வீட்டிற்கு செல்லும் விலாசம் என்ன?

கர்த்தருக்குப் பரிசுத்தம் - சகரியா 14:20

146.தேவனுக்கும், சத்துருக்கும் யுத்தம் நடக்கும் இடத்தின் பெயர்?

அர்மகெதோன் - வெளி 16:16

147.தேவன் உடுத்தியிருந்த ஆடை என்ன?

இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரம் - வெளி 19:13

148.ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா எழுதப்பட்டிருந்த இடம்?

தேவனுடைய வஸ்திரம் [ பரிசுத்த ஆவி ]

தேவனுடைய தொடை [ மனுஷகுமாரன் ] - வெளி 19:16

149.சாத்தானின் சிறைச்சாலை தண்டனை என்ன?

1000 வருஷம் - வெளி 20:7

150.எகிப்திய நதியில் இருக்கும் பெரிய முதலை?

பார்வோன் - எசேக்கியேல் 29:3

151.தேவன் தம்முடைய அஸ்திபாரத்தை கட்டப் பயன்படுத்திய கற்களின் பெயர் என்ன?

வச்சிரக்கல், இந்திரநீலம், சந்திரகாந்தம், மரகதம், கோமேதகம், பதுமராகம், சுவர்ணரத்தினம், படிகப்பச்சை, புஷபராகம், வைடூரியம், சுநீரம், சுகைந்தி - வெளி 21:19,20

152.இயேசு தம்முடைய வாசல்களுக்கு பயன்படுத்திய கற்கள்?

முத்துக்கள் - வெளி 21:21

153.பரலோகத்தின் விளக்கின் பெயர்?

ஆட்டுகுட்டியானவராகிய இயேசு - வெளி 21:23

154.பரலோகத்தின் விளக்கில் இருக்கும் எண்ணையின் பெயர்?

தேவனுடைய மகிமை - வெளி 21:23

155.தேவன் கொடுக்கும் மழையின் பெயர்?

ஆசீர்வாதமான மழை - எசேக்கியேல் 34:26

சம்பூரணமான மழை - சங்கீதம் 68:9

தேவனாகிய இயேசுவின் ராஜ்ஜியத்தில் விசுவாசிகளுக்கு கொடுக்கப்படும் கிரீடங்களின் பெயர்கள் என்ன?

156.ஆவியில் விழித்திருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் கிரீடம்?

மகிழ்ச்சியின் கிரீடம் - 1தெசலோனிகியர் 2:19

157.நீதியாய் வாழ்பவர்களுக்கு கொடுக்கப்படும் கிரீடம்?

நீதியின் கிரீடம் - 2தீமோத்தேயு 4:8

158.தேவன் மூலம் வரும் சோதனையை சகிப்பவர்களுக்கு கொடுக்கப்படும் கிரீடம்?

ஜீவ கிரீடம் - யாக்கோபு 1:12

159.ஆவிக்குரிய பந்தயத்தில் ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு கொடுக்கப்படும் கிரீடம்?

அழிவில்லாத கிரீடம் - 1கொரிந்தியர் 9:25

160.பரிசுத்தமாய் வாழ்பவர்களுக்கு கொடுக்கப்படும் கிரீடம்?

பரிசுத்த கிரீடம் - லேவியராகமம் 8:9

161.தேவனை துதித்து மகிமைப்படுத்துபவர்களுக்கு கொடுக்கப்படும் கிரீடம்?

மகிமையின் கிரீடம் - ஏசாயா 28:5, நீதிமொழிகள் 16:31

162.ஆவிக்குரிய வாழ்க்கையை நன்றாக நடத்துபவர்களுக்கு கொடுக்கப்படும் கிரீடம்?

ராஜ கிரீடம் -

163.தேவனுடைய ஊழியத்தை செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் கிரீடம்?

அபிஷேகதைலம் என்னும் கிரீடம் - லேவியராகமம் 21:12

164.தேவனுக்கு பிரியமானவனுக்கு கொடுக்கப்படும் கிரீடம்?

பொற்கிரீடம் - சங்கீதம் 21:3

165.தேவனுடைய பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் கிரீடம்?

பெருமையான கிரீடம் - ஏசாயா 28:3

166.தேவன் தெரிந்து கொள்ளும் பிள்ளைகளுக்கு கொடுக்கும் கிரீடம்?

அலங்கார கிரீடம் - ஏசாயா 62:3

167.உலகத்தில் கைவிடப்பட்டவர்களுக்கு கொடுக்கும் கிரீடம்?

சிங்கார கிரீடம் - எசேக்கியேல் 16:12

168.இரட்சிக்கப்படுபவர்களுக்கு கொடுக்கப்படும் கிரீடம்?

கொடிகளின் கிரீடம் - சகரீயா 9:16

ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் கிறிஸ்துவுக்கு எப்படியாக இருக்கிறோம்?

169.நாம் கர்த்தருடைய ஊழியத்துக்கு முத்திரையாக இருக்கிறோம் - 1கொரிந்தியர் 9:2

170.நாம் கர்த்தருடைய செய்கையாயிருக்கிறோம் - 1கொரிந்தியர் 9:1

171.நாம் கர்த்தர் வசிக்கும் வீடாக இருக்கிறோம் - எபிரெயர் 3:6

172.நாம் கர்த்தருக்கு ஆராதனை செய்யப்படும் ஆலயமாயிருக்கிறோம் - 1கொரிந்தியர் 3:16

173.நாம் கர்த்தருக்கு ஆராதனை செய்யப்படும் பரிசுத்த மற்றும் ஜீவனுள்ள ஆலயமாயிருக்கிறோம் - 1 கொரிந்தியர் 6:19, 11 கொரிந்தியர் 6:16

174.நாம் இயேசு உலாவுகிற பண்ணையாயிருக்கிறோம் - 1கொரிந்தியர் 3:9

175.நாம் இயேசுவும், அவருடைய சேனையும் தங்கும் மாளிகையாயிருக்கிறோம் - 1கொரிந்தியர் 3:9

176.நாம் இயேசு சாப்பிடுகிற அப்பமாயிருக்கிறோம் - 1கொரிந்தியர் 10:17

177.நாம் இயேசு எழுதிய நிரூபமாயிருக்கிறோம் - 11கொரிந்தியர் 3:2,3

கிறிஸ்தவர்கள் செல்ல வேண்டிய இடங்கள்? [தங்களுடைய இருதயத்தில்]

178.பெத்தேல் - தேவ தரிசனம் அடைதல் - ஆதியாகமம் 28:19

179.கில்கால் - நம்முடைய நிந்தை மாற்றப்படும் இடம் - யோசுவா 5:8,9

180.பெனியேல் - போராடி ஜெபிக்க - ஆதியாகமம் 32:26-32

181.ஏல் பெத்தேல் - ஜீவிய சுத்திகரிப்புச் செய்ய - ஆதியாகமம் 35:4-7

182.பாகால் பிராசீம் - சத்துருவை வெல்லும்படியாக - 11சாமுவேல் 5:19,20

183.யேகோவாயீரே - தேவனுடைய பராமரிப்பு கிடைக்க - ஆதியாகமம் 22:14

184.ரெகொபோத் - நாம் செழிப்படைய - ஆதியாகமம் 26:22

185.மிஸ்பா - இயேசு நம்முடைய சாட்சியாக மாற - ஆதியாகமம் 31:50

186.பெயெர்செபா - தேவனோடு உடன்படிக்கை செய்யவும், தேவனுக்கு சாட்சியாக வாழ - ஆதியாகமம் 21:27-33

187.சாத்தானின் இயற்பெயர் என்ன?

அபிஷேகப்பண்ணப்பட்ட கேரூப் - எசேக்கியேல் 28:14

188.கடைசி நாட்களில் ஏற்படும் பஞ்சம் என்ன?

கர்த்தருடைய வசனம் கேட்கக்கிடையாத பஞ்சம் - ஆமோஸ் 8:11

189.மனுஷன் உயிரோடுயிருப்பதற்கு தேவனாகிய இயேசு தரும் உணவு வகைகள் என்ன?

தேவனுடைய வார்த்தை - மத்தேயு 4:4

விசுவாசம் - ஆபகூக் 2:4, ரோமர் 1:17,காலத்தியர் 3:11, எபிரெயர் 10:38

தேவனுடைய கட்டளை - எசேக்கியேல் 20:21

மனந்திரும்புதல் - எசேக்கியேல் 18:32

190.தேவன் நமக்கு கொடுக்கும் இருதயத்தின் பெயர் என்ன?

நவமான, சதைப்பற்றுள்ள இருதயம் - எசேக்கியேல் 36:26

191.தேவனாகிய இயேசு சென்ற கல்யாண வீட்டின் பெயர் என்ன?

கானா ஊர் கல்யாணம் - யோவான் 2:1

192.வெள்ளையடிக்கப்பட்ட சுவரின் பெயர் என்ன?

அனனியா - அப்போஸ்தலர் 23:3

193.சகல யூதர்களுக்குள்ளும் அனுப்பப்பட்ட கொள்ளை நோயின் பெயர் என்ன?

அப்போஸ்தலனாகிய பவுல் - அப்போஸ்தலர் 24:5

194.பிரபுவை சம்மதிக்க கொடுக்கப்படும் வெகுமதி என்ன?

நீடிய பொறுமை - நீதிமொழிகள் 25:15

195.தேவையில்லாத மழையின் பெயர்?

புறங்கூறுகிற நாவு - நீதிமொழிகள் 25:23

196.நாம் எத்தனை தடவை, தவறு செய்கிறவர்களை மன்னிக்க வேண்டும்?

7*70 = 70*70*70*70*70*70*70 [ அதாவது நம்முடைய மன்னிப்பின் அளவு - அளவற்றது என்பதை குறிக்கிறது [infinite] - மத்தேயு 18:22

197.மகதலேன மரியாளிடத்தில் காணப்பட்ட நோய் கிருமியின் பெயர்?

ஏழு பிசாசுகள் - மாற்கு 16:10

198.தேவனாகிய இயேசு பயன் படுத்தும் கண்ணாடியின் பெயர்?

மனுஷனுடைய இருதயம் - 1சாமுவேல் 16:7

199.எலியாவின் உணவு அனுப்பப்பட்ட வாகனத்தின் பெயர் என்ன?

காகம் - 1இராஜாக்கள் 17:4

200.உண்மையுள்ள விசுவாசிகளுக்கு வழங்கப்பட்ட பெயர்?

உலகத்தை கலக்குகிறவர்கள் - அப்போஸ்தலர் 17:6

201.நம்முடைய நோயை கண்டுபிடிக்கும் ஆய்வுக்கூடத்தின் பெயர்?

பழைய ஏற்பாடு [ நியாயப்பிராமாணம் ] - ரோமர் 7:7

202.நம்முடைய நோயைக் குணமாக்கும் கூடத்தின் பெயர்?

புதிய ஏற்பாடு [ இயேசுவின் இரத்தம் ] - 1யோவான் 1:7

___________________________________________________________________________________

கர்த்தரின் ஊழியத்தில் : சகோ. எட்வின்